Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் பிரச்சனைக்கான மூல விடயங்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது கனடாவின் கரிசனை: கனடாவின் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UN-CAN_EMBA_150seithy.jpg

கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம் சுதந்திரம் மனித உரிமைகள் நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில் அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகிவருகின்றது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகளைக் காப்பதற்கும் முன்னெடுப்பதற்குமான மூன்றாவது குழு நிலை விவாதத்தில் பேசிய கனடாவின் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி குலர்மோ ரிச்சன்ஸ்கி சிறீலங்காவின் பிரச்சனைக்கான மூல விடயங்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது கனடாவின் கரிசனையாக உள்ளது என்றார்.

அத்துடன் சிறீலங்காவில் நடாத்ததாத உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்பதை நாம் வேண்டுகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத் தொடரிலும் கனடா சிறீலங்காவின் மனித உரிமைகள் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்தமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. சிறீலங்கா பிரதமர் பேசும் போது கனடா பிரதமர் அரங்கை விட்டு வெளியேறியமை முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் அடுத்த கொமன்வெல்த் கூட்டத் தொடரை சிறீலங்காவில் புறக்கணிக்கப்போவதாக மீண்டும் அறிவித்த ஒரே தலைவர் கனடியப் பிரதமரே என்பதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா விடயத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியமை என கனடாக்குழு சிறீலங்காவிற்கு மாநாடு முழுமையாக சவாலாக அமைந்தாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=51527&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பிரயோசனம்... ஒன்றுமே நடக்காதது போல் எமது ஆய்வாளர்கள் "என்ன பயன்" கட்டுரை எழுத தொடங்கிவிடுவார்கள். அல்லது புலி தலைப்பை வைத்து இணையத்தளத்திற்கு கிளிக் கூட்ட பார்ப்பார்கள்.

வெளிநாடுகளில் நாம் என்ன தான் எம்மை குறை கூறினாலும், பல நல்ல உள்ளங்கொண்ட தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அயராமல் உழைக்கிறார்கள்.

அவர்களின் பல வருட கடின உழைப்பிற்கு இப்போது பலன் கிடைக்க தொடங்கிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.