Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் நோர்வே; கொழும்பில் நேற்று உடன்படிக்கை கைச்சாத்து

Featured Replies

முன்னாள் புலிப் போராளிகள் வீடு திரும்புவதற்கும், புதுவாழ்வை தொடங்குவதற்கும் அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். இது மிகமிக அவசியமாகும். அவர்களின் அவசரத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணியை குடியேற்றத் திட்ட நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. முன்னாள் போராளிகள் தங்கள் வாழ் வாதாரங்களை மேற் கொள்வதற்கும், வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான அடித்தளத்தை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கும்.

இவ்வாறு நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் நோர்வே தூதுவர் ஹில்டி ஹெரல்ட் ஸ்டெட் பேசுகையில் தெரிவித்தார்.கொழும்பு நோர்வே தூதரகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நோர்வே தூதுவர் ஹில்டி ஹெரல்ட் ஸ்டெட்டும், குடியேற்றத் திட்ட நிறுவனத் தலைவர் ரிச்சார்ட் டென் ஜிக்கரும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகளைக் குடியேற்றுவதற்கும், சமூக ஒருமைப்பாட்டில் அவர்கள் சங்கமிப்பதற்கும் உதவுவதை நோக்காகக்கொண்ட சர்வதேச முயற்சிப் பணிகளில் நோர்வேயும் இணைந்துள்ளது. கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் இந்த நோக்கத்துக்காகக் குடியேற்றத்துக்கான சர்வதேச நிறுவனத்திடம் அந்நாட்டு நாணயப்படி 3 மில்லியன் (இலங்கை நாணயப்படி ஏறக்குறைய ரூபா 57 மில்லியன்) நன்கொடையாக வழங்கியுள்ளது.

பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு உட்படாத முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் அரசால் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் 400 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் புலிப் போராளிகளுக்கு சமூக மட்டத்தில் மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை குடியேற்றுவதும் ஒரு சுலபமான காரியமல்ல. பூர்வாங்கக் கணிப்பீடுகளின்படி முன்னாள் புலிப் போராளிகளை உள்வாங்குவதில் சமூகம் அதிக ஆர்வமோ, அக்கறையோ செலுத்தவில்லை. முன்னாள் போராளிகளில் அநேகர் வீட்டுச் சூழலில் வாழ்ந்தவர்களும் அல்லர்.

இதை உணர்ந்தே இந்தியா, நோர்வே ஆகிய நாடுகள் உட்பட அநேக நாடுகள் யுத்தத்தால் சின்னாபின்னமாகச் சிதைவுற்ற சமூகத்தை இயல்புநிலைக்குக் கட்டியெழுப்புவதற்கு உதவ முன்வந்துள்ளன. சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் மகளிர் குழுக்களை உருவாக்குவதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதற்கான தொழிற்பயிற்சிக்கூடங்களை அது நிறுவி வருகிறது. இவற்றை உள்ளூர் நிர்வாகங்களே நிர்வகிக்கின்றன.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளைக் குடியேற்றுவதற்கான திட்ட நிறுவனம் 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முன்னாள் போராளிகளை குடியேற்றுவதற்கு ஏதுவாக பொருளாதார, சமூக ரீதியாக உதவுவதை இந்நிறுவனம் குறிக்கோளாகக்கொண்டுள்ளது. தனி மனிதரினதும், சமூகத்தினதும் சமாதானம், மனிதநேய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இது ஒத்துழைப்பு நல்குகிறது. குடியேற்றத் திட்டநிறுவனம் ஏற்கனவே மூவாயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு நேரடி உதவிகளை வழங்கியுள்ளது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்காக பயிற்சி, தொழிற்கருவிகள், சிறுதொகை மானியம், தொழில் இடங்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=21809626803250179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.