Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 18 விமான நிறுவனங்கள் பணியில் – பஷில் தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 18 விமான நிறுவனங்கள் பணியில் – பஷில் தெரிவிப்பு!

Published on November 5, 2011-8:43 am

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையினுள் 18 விமான நிறுவனங்கள் தமது தொழில்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அமைய நாட்டிற்கு வருகை தந்த நிறுவனங்கள் அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறந்த நிலையில் காணப்படுவதே இதற்கான காரணம் எனவும் அமைச்சர் பஷில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.saritham.com/?p=39989

உலக விமான நிறுவனங்கள் பலவும் இலாபமற்ற நிறுவனங்களாக உள்ளன. அதனால் அவை புதிய சந்தைகளை தேடியவண்ணமும், கூட்டு சேர்ந்தவண்ணமும் உள்ளன.

விமானச்சீட்டுக்களின் விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சி

உலகத்தின் முக்கிய நகரங்களுக்கான விமானச் சீட்டுக்கள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக டென்மார்க் விமானச் சீட்டு விற்பனை மதிப்பீட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டென்மார்க் காஸ்ரப் விமான நிலையத்தில் இருந்து பாங்கொக், டோக்கியோ, பெய்ஜிங், லொஸ் ஏஞ்சல், மெக்சிக்கோ, நியூயோர்க், றியோ டி ஜெனிரோ, சிட்னி போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானச் சீட்டுக்கள் சுமார் ஏழு வீத வீழ்ச்சி கண்டுள்ளன.

சராசரியாக 4.284 குறோணருக்கு பாங்கொக் போக இருவழி பயணச் சீட்டை வாங்கக் கூடியதாக இருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டு விமான சேவை நிறுவனங்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோதுகூட இத்தகைய வீழ்ச்சி காணப்படவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு வருடத்தின் நான்காவது காலாண்டுகால கட்டண வீழ்ச்சியே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் சிறீலங்கா, சென்னை போன்ற தமிழர் வாழும் பகுதிகளுக்கான பயணச்சீட்டுக்களின் விலை குறித்து இந்த செய்திகள் கருத்துரைக்கவில்லை, ஆனால் அவைகளும் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடி வருட முடிவில் வரும் விமானப்பயணங்களுக்கான தூண்டுதலை வழங்கவில்லை என்பதையும் இந்த விலை வீழ்ச்சிகள் உணர்த்துவதாயுள்ளது.

http://www.alaikal.com/news/?p=86903

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.