Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வடபுலமெங்கும் விரைவில் மீன்பிடிக்கு பாஸ் நடைமுறை? - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபுலமெங்கும் அடுத்துவரும் சில மாதங்களில் மீண்டும் பாஸ் நடைமுறைமையினை அமுல்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது. வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து வரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தவே இந்த பாஸ் நடைமுறைமை அமுல்படுத்தப்பட உள்ளதாக அரச தரப்பினில் கூறப்பட்டு வருகின்றது. ஏற்கனவே யாழ்.குடாக்கடலை அண்டிய குருநகர், பாசையூர், நாவாந்துறை மற்றும் கொட்டடி போன்ற மீனவ கிராமங்களில் படையினர் மீண்டும் பாஸ் நடைமுறையினை அமுல்ப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நடந்து முடிந்த ஒவ்வொரு தேர்தல் காலப்பகுதியிலும் பாஸ் நடைமுறைமையினை இடைநிறுத்துவதாக அரசு உறுதி மொழிகளை வழங்கியே வந்திருந்தது. ஆனாலும் தேர்தலின் பின்னர் அவ்வறிவிப்புக்கள் கைவிடப்பட்டேயிருந்தது. தற்போது புதிதாக வடபுலமெங்கும் முழுமையாக மீண்டும் அடுத்தவரும் சில மாதங்களினுள் பாஸ் நடைமுறைமையினை அமுல்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இந்திய மீனவர்களையும் உள்ளூர் மீனவர்களையும் வேறு பிரித்து அடையாளங்காண ஏதுவாக இந்த பாஸ் நடைமுறைமையினை அமுல்ப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. புதிய நடைமுறைப்படி மீனவர்களது புகைப்படத்துடன் கூடிய பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. எனினும அரசின் கடற்றொழில் அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்ட மீனவ அடையாள அட்டைகள் மீனவர்கள் வசமுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பாஸ் நடைமுறை உள் நோக்கம் கொண்டதென மீனவ அமைப்புக்கள் சந்தேகம் எழுப்பியள்ளன.

அண்மைக்காலமாக இந்திய மற்றும் தெற்கு மீனவர்களது வடக்கு கடற்பரப்பிலான அத்துமீறல்களுககு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புக்களை அடுத்தே திட்டமிட்ட வகையில் பாஸ் நடைமுறைமையினை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என அவை சந்தேகம் எழுப்பியள்ளன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/69752/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.