Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் “சிறிலங்காவின் கொலைக்களம்” பாகம் – 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் “சிறிலங்காவின் கொலைக்களம்” பாகம் – 2

புதிய சாட்சியங்களுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் பிரித்தானியாவின் ஊடக ஒழுங்குமுறையை மீறவில்லை என்று அறிவிக்கப்பட்ட அடுத்த வாரமே, அதன் இரண்டாவது பாகத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற கொடூரங்களை விபரிக்கும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ என்ற ஆவணப்படத்தை சனல்-4 தொலைக்காட்சி கடந்த ஜுன் மாதம் ஒளிபரப்பியிருந்தது.

கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட காணொலிப் படம் இதன் பிரதான போர்க்குற்ற சாட்சியமாக இணைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விபரிக்கும் இந்த ஆவணப்படம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்திருந்தது.

இந்த ஆவணப்படம் நியுயோர்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகங்களிலும், இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே உள்ளிட்ட பல நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டனை வழங்கப்படாத போர்க்குற்றங்கள்‘ (தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை) என்ற பெயரில் இரண்டாவது ஆவணப்படத்தை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பதாக சனல்-4 தொலைக்காட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்கென இயக்குனர் கல்லும் மக்ரே ஒளிப்படங்கள், காணொலிப் பதிவுகள்,நேரில் கண்ட சாட்சிகள், ஆவணங்கள் போன்ற புதிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாக இதன் தயாரிப்பாளர் ஜொன் சினோ தெரிவித்துள்ளார்.

“போர்க்குற்றங்களுக்கு அதிகாரபூர்வமாக உடந்தையாக இருந்தவர்கள் பற்றிய மேலதிக சாட்சியங்களை இது வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் எதைக் கண்டறிந்தோம் என்பதை தொடர்ந்து உலகிற்கு வெளிப்படுத்துவோம். முதலாவது ஆவணப்படத்தைப் போலவே இந்தப் படக்காட்சிகளும் அதிர்ச்சிகளைக் கொடுப்பதாகவும் விழிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று நம்புகிறோம்“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, இந்த ஆவணப்படத்தைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ள சனல்-4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்புவிவகார தலைவர் டொரத்தி பைன்,

“சிறிலங்காவின் கொலைக்களங்கள் மூலம் கொடூரங்கள் வெளிப்படுத்தப்பட்டது உலகெங்கம் கவலையை தோற்றுவித்ததுடன் மேலதிக விசாரணைகளுக்கும் அழைப்புகள் விடப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே உண்மையைக் கண்டறிந்து தொடர்ந்து வெளிப்படுத்த முடிவு செய்துள்ளோம்“ என்று கூறியுள்ளார்.

-eelam press

to : customersupport@channel4.com

cc: ViewerEnquiries@channel4.co.uk

Subject: Channel 4's Head Ms.Dorothy Byrne has commissioned to make a follow-up film to Sri Lanka's Killing Fields

Ms. Veronica Way

Channel 4 Viewer Enquiries

November 8, 2011

Dear Madam:

My sincere and whole hearted appreciation for Channel 4's News & Current Team for working to produce a follow-up film into Sri Lanka's Killing Fields, Jon Snow's critically-acclaimed investigation into the final weeks of the war between the government and Tamil Tigers in Sri Lanka.

The Sri Lankan government leaderships and military personals are responsible for genocide, torture, and rape of Tamil citizens of the country and crimes that have exceeded the normal parameters of war behavior must be dealt with credible independent international body before Sri Lanka can begin the peace building process of true reconciliation.

The Channel 4 relentlessly working to bring justice to the long victimized Tamil civilians in Sri Lanka and pressing the international community not to offer the accused Sri Lankan government leaderships and military leaderships a chance for forgiveness but offer victims and their families the opportunity to confront those responsible for what happened to them, and hopefully to put the horrors of war behind them.

Your efforts will make the world a better place for all!

Yours truly,

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் படுகொலைக்களங்களின் அடுத்த பாகத்தைத் தயாரிக்குமாறு சனல் 4 ஐ.ரி.என் தயாரிப்பு

11 நவம்பர் 2011

நிறுவனத்திடம் கோரிக்கை :

இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையேயான இறுதிப் போரில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட இலங்கையின் படுகொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தின் தொடர்ச்சியாக அதன் அடுத்த பாகத்தைத் தயாரிக்குமாறு சனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான தலைவர் டொரத்தி பிரைன் ஐ.ரி.என் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையின் படுகொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் இந்தப் புதிய ஆவணப்படம் இலங்கையின் போரின் இறுதிக்கட்டத்தில் சரியாக என்ன நடைபெற்றது என்பது குறித்த வலுவான பல புதிய ஆதாரங்களையும், சமகால ஆவணங்களையும், கண்கண்ட சாட்சியங்களையும், புகைப்பட ஆதாரங்களையும், காணொளிக்காட்சிகளையும் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.

பரவலான பாராட்டைப் பெற்ற இலங்கையின் படுகொலைக்களங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியை புதிய வருடத்தில் வெளியிடுவதற்காகப் பணி புரிவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன் என்கிறார் சனல் 4இன் ஊடகவியலாளரான ஜொன் ஸ்னோ.

Jon%20Snow.jpg

நாங்கள் நம்புகிறோம், அதிகாரத்தில் இருந்தவர்கள் இந்தப் போர்க்குற்றங்களுக்கு எவ்வளவு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான மேலதிக ஆதாரங்களையும், நாங்கள் எவற்றைக் கண்டோம் என்பதையும் இந்தப் படம் உலகுக்குக் காட்டும் என. அது மட்டுமன்றி முதல் படத்தைப் போன்று இது அதிர்ச்சி தரக்கூடியதாகவும் அதேநேரம் கல்வியூட்டக் கூடியதாகவும் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன் என்றும் கூறுகிறார் அவர்.

இலங்கையின் படுகொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் இத்திரைப்படத்தினை சனல் 4 ஊடகவியலாளரான ஜொன் ஸ்னோ வழங்கவுள்ளார். கலும் மக்ரே இதனை நெறியாள்கை செய்கிறார்.

இப்படம் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை குறித்து சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயலாற்றாமை குறித்து வெளிப்படுத்துவதோடு அது குறித்து அழுத்தம் கொடுக்கும் எனவும் ஊடகவியலாளர்கள் உண்மையை அறிவதற்கு அங்கு உள்ள தடைகள் குறித்தும் அது வெளிப்படுத்தும் எனவும் தெரிய வருகிறது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட இலங்கையின் படுகொலைக்களங்கள் என்றஆவணப்படம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கெதிரான குற்றங்கள் குறித்த புதிய ஆவணங்களைக் கொண்டதாக இருந்தது. அவற்றுள் சில சனல் 4 எப்போதும் ஒளிபரப்பியராதளவு பயங்கரமான காட்சிகளைக் கொண்டதாகவும் இருந்தது.

ஜெனிவாவில் ஐநாவிலும், நியூயோர்க்கிலும், ஐரோப்பியப் பாராளுமன்றத்திலும் ஐக்கிய அமெரிக்க செனட்டிலும் இப்படம் திரையிடப்பட்டது. பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் கமரோன் உட்பட உலகின் முக்கியமான பல அரசியற் தலைவர்கள் இப்படம் குறித்த தங்களது கருத்தினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

எனினும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், பொதுமக்களின் முகாம்கள் மீதான தாக்குதல், பாலியன் வன்முறைகள் குறித்த ஆதாரங்கள். கைத்தோலைபேசிகளில் படம் பிடிக்கப்பட்ட நிர்வாணமாக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போராளிப் பெண்கள்ன் உடல்கள், என இப்படத்தில் காட்டப்பட்ட எவ்விடயங்கள் குறித்தும் இலங்கை அரசாங்கம் எத்தகைய விசாரணைகளையும் நடாத்தவில்லை.

பல்வேறு மனித உரிமைக்குழுக்களின் அழுத்தத்தினால் ஐநா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்குழு சர்வதேச விசாரணையை நடாத்தக் கோரியது.

எனினும் தாம் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாகக் கூறி நியமித்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கனான ஆணைக்குழு இத்தகைய முழுமையான விசாரணையை நடாத்துவதில் தோல்வியடைந்துள்ளது.

சனல் 4 தயாரிக்கவுள்ள இதன் இரண்டாவது பாகத்திற்கு கிறிஸ் ஸோ தயாரிப்பாளராக இருப்பார். கலும் மக்ரே நெறியாளராகப் பணி புரிவார். எங்களுடைய முதற் படம் சர்வதேச ரீதியில் பிரத்தியேகமான ஒரு வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதை நாங்ள் புலனாய்வு செய்கிறோம். இந்தப் போர்க்குற்றங்கள் குறித்து யார் யார் அறிந்திருந்தார்கள் என்பதையும், ஏன் உலகம் அந்த மக்களைக் காப்பாற்றத் தவறியது என்பதையும் விளக்குகிறோம்.

பிரித்hனியாவிலும் 30 க்கு மேற்பட்ட நாடுகளிலுமாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் இலங்கையின் படுகொலைக்களங்களைப் பார்த்திருக்கிறார்கள், அவுஸ்ரேலியா, இந்தியா, டென்மார்க், நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் இது திரையிடப்பட்டது.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.