Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா சென்ற சம்பந்தன், சுமந்திரன் எங்கே செல்கிறார்கள்(!)? – சரிதம் ஆசிரியர் பீடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சென்ற சம்பந்தன், சுமந்திரன் எங்கே செல்கிறார்கள்(!)? – சரிதம் ஆசிரியர் பீடம்!

Published on November 10, 2011-8:46 am

இலங்கை அரசியல் களத்தில் தற்போது பிரதான பேசுபொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணமும், அது தொடர்பிலான எதிர்வுகூறல்களும் களைகட்டியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அமெரிக்கா சந்தித்திருப்பது தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் என்று ஒரு சாராரும் இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கை என ஒரு சாராரும் என ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழிகளில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட உலகின் வல்லமை பெற்ற நாடுகளுக்கான தொடர்பயணத்தினை மேற்கொண்டமை தமிழ்மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் விடயம் தான். ஆனாலும் கூட கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குகின்றவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துக்களும், எடுத்துவருகின்ற நிலைப்பாடுகளும் தமிழ் மக்களின் இத்தனை இலட்சம் உயிர் விலைகளையும் எங்கே கொண்டுபோய் விட்டுவிடப்போகின்றன? என்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.

வடக்கு – கிழக்கு எமக்குச் சொந்தமானது என்று ஒரு போதும் கேட்கவில்லை – கேரளக்குடிமகன் சம்பந்தர்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களுடனான இரவு விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். நாங்கள் ஒருபோதும் வடக்கு – கிழக்கை எமக்குச் சொந்தமானது என்று கேட்கவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கின்றார்.

wpaudio-play.pngவடக்கு கிழக்கை எமக்கு சொந்தமானது என்று நாங்கள் ஒரு போதும் கேட்கவில்லை (ஒலி இணைப்பு)

வடக்குகிழக்கு மண் எம்சொந்தமண் இந்த மண்ணினை இழக்கக்கூடாது என்பதற்காவேbala_tna_meeting_03-300x199.jpgநாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரச் செல்வங்களையும், இரண்டு இலட்சத்தை அண்மித்த அப்பாவி உயிர்களையும் நாங்கள் இழந்து தவிக்கின்றோம் என்பது இலங்கையின் மூத்த அரசியல் வாதியாகவும் தமிழ் மக்களின் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான திரு சம்பந்தன் அவர்களுக்குத் தெரியாதா? கேரளாவைச் சேர்ந்த பரம்பரையில் வந்தவரான இரா.சம்பந்தன் ஒரு போதும் இலங்கையின் வடக்கு – கிழக்கினை தமக்குச் சொந்தமானது என்று கேட்கமுடியாது தான். ஆனால் அவர் தற்போது எடுத்திருக்கின்ற காவடி தமிழ்மக்களுக்கான அரசியல் தலைமை என்பது தான். எனவே அதனை சரியான முறையில் ஆடி முடிக்க வேண்டும் என்ற தார்ப்பரியம் அவருக்குப் புரிந்திருக்காது என்பதற்கில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பதற்கு நடவடிக்கை எடுத்தகாலப் பகுதியில் சந்திரிகா அம்மையாரின் குந்த விசுவாசத்துக்குரியவராக விளங்கிவந்திருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் வருவதற்கு அவரைத் தூண்டியது எது என்பதை அவரும், அவரைச் சார்ந்தவர்களும் அறிந்திருப்பார்கள்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கினாலும், தமிழீழத் தேசியத் தலைவர்அவர்களுடன் அமர்ந்திருந்து உணவருந்தினாலும் அவர் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளிடம் மிகுந்த அபிமானத்துக்கு உரிய ஒருவராகவே விளங்கிவருகிறார். கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கினாலும் இன்றுவரையில் மனதளவில் அவர் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவே இல்லை என்பதற்கு பல உதாரணங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். போருக்குப் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் நாடாளுமன்றில் இரா.சம்பந்தன் தனது உரையில் போரில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிற்கு தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தமை பலருக்கு இன்னமும் நினைவிருக்கலாம்.

தற்போது கூட ஜனாதிபதி மஹிந்தராஜபச்சவை இரண்டு தடவைகளுக்கு மேலாகவும், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை ஒரு தடவையும் தனியாக சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார். குறித்த சந்திப்புக்கள் பல மணி நேரமாகத் தொடர்ந்த போதிலும் அதில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் வெளிவருவதே இல்லை. இராணுவ இரகசியங்கள் போல அந்த விடயங்கள் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன.

அண்மைய தகவல் ஒன்றின் அடிப்படையில் கூட்டமைப்பின் மிக முக்கிய நபர் ஒருவருக்கு மத்திய வங்கியின் ஊடாக பெரிய அளவிலான நிதி கைமாறியிருப்பதாகவும் அந்த நிதி மூலம் இந்தியாவில் பெரிய வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிதி பரிமாற்ற நடவடிக்கைக்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச நேரடியாக ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்ததாக அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த விடயங்களை ஆதார பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. என்பதனால் தொடர்புபட்டததாகத் தெரிவிக்கப்படுகின்ற நபரின் வெளியிடுவது பொருத்தப்பாடற்றது.

ஆனாலும் கூட தனிப்பட்ட சந்திப்பினை மேற்கொள்கின்ற இவர்கள் என்ன விடயங்கள் கதைக்கப்பட்டன என்பதை மக்களுக்கு வெளியிட தவறி வருகின்ற நிலையில் இவ்வாறான பணப்பரிமாற்றல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது என்று சொல்வதற்குமில்லை.

கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து விலகி மீண்டும் சென்றதற்கான சூட்சுமம் இவ்வாறான நடவடிக்கைகளின் எதிரொலியாகக் கூட இருக்கலாம் அல்லவா? எமது மக்கள் மத்தியிலேயே, வடக்கு – கிழக்கினை எமக்குச் சொந்தமானது என்று நாங்கள் ஒரு போதும் கேட்கவில்லை என்று தெரிவிக்கும் இவர்கள் சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் போது என்ன சொல்வார்கள்? என்ற கேள்வி தமிழ் மக்களுக்கு எழுவதைத் தவிர்க்க முடியாது.

மிக முக்கியமான ஒருவிடயத்தினைக் குறிப்பிடலாம், அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார். அதன் போது அவர் தெரிவித்த விடயம் மிக வேதனையாகவும், கவலை தருவதாகவும் அமைந்திருக்கின்றது,

sampanthar-mahinda.jpgநான் ஜனாதிபதியைச் சந்தித்தேன். அவர் மிகுந்த தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்கு நோய் என்று சொன்னார்கள். அவ்வாறு தெரியவில்லை. அவர் இன்னமும் இரண்டு மூன்று தடவைகள் ஜனாதிபதியாக இருக்கக்கூடிய தேகாரோக்கியம் அவரிடம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே அவருடன் முரண்படாமல் பெறக் கூடியதைப் பெற்றுக்கொள்வதே எமக்கு நல்லது என்ற சாரப்பட தெரிவித்திருக்கின்றார். எந்தக் கட்டத்திலும் தமிழினத்துக்கு எதுவுமே செய்யக்கூடாது என்று நினைக்கின்ற கடும் போக்குக் கொண்ட ஒருவரிடம் இருந்து சுமூகமாக தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கின்ற இலங்கையின் மூத்த(?) அரசியல் வாதியிடம் எமது இனத்தின் தலைவிதி மாட்டிக்கொண்டிருப்பதை எந்த வகையில் தாங்கிக் கொள்ளுவது.

ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களை இராஜதந்திரம் என்ற போர்வையில் மூடிமறைத்து அரசியல் செய்ய முனையும் இரா.சம்பந்தன் வடக்கு கிழக்கை எமக்குச் சொந்தமானது இல்லை என்று தெரிவிப்பதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக மீண்டும் மாவட்ட சபையினை நோக்கி கூட்டமைப்பினையும் தமிழ் மக்களையும் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்களோ? என்று அஞ்சத் தோன்றுகின்றது.

அரசுடனான பேச்சுக்களுக்கு தாமே, ராசா தாமே மந்திரி என்று ஒரு வட்டத்திற்குள் நின்று கலந்து கொள்வது தமிழினத்தினையும் தம்மையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பிலோ பேச வேண்டிய விடயங்கள் தொடர்பிலோ தாயகத்திலோ புலத்திலோ இருக்கக்கூடிய புத்திஜீவிகளுடனோ, தமிழ் மக்களுடனோ கலந்தாலோசிக்கும் எந்தப் பண்பும் இல்லாமலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் ஏனையவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

காலச் சூரியன், தமிழினத்தை காக்க வந்த காவல் தெய்வம் சம்பந்தன் ஐயாவை பல்லக்கில் தூக்குவோம் என்று கவிதை எழுதுவதை விடுத்து எமது உரிமையை விட்டுக்கொடுக்காது பாடுபடுமாறு வலியுறுத்துவதே எமது இனத்திற்குச் செய்கின்ற கைமாறாகும் என்பதை சிலர் இன்னமும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

டி.பி.எஸ்.ஜெயராஜ் வீட்டில் விருந்துண்ட சுமந்திரன் புலம்பெயர் மக்களுக்கு விடயங்களை மறைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இரா.சம்பந்தனின் தனிப்பட்ட செல்வாக்கினால் எந்தவித நோவும் இன்றி தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றக் கதிரைக்குத் தாவிய சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றமையுடன் அவர் எடுத்து வருகின்ற இன்னும் பல போலி முகங்களை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு சூழலும் எதிர்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அமெரிக்கா, கனடாவிற்கான பயணத்தினை நிறைவு செய்து கொண்டு பிரித்தானியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பினரில் இரா.சம்பந்தரும், சுமந்திரனும் லண்டனில் மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அந்தச்சந்திப்பில் மக்களால் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கேள்விகளுக்கானsumanthiran1-300x214.jpgபதில்களை இருவரும் மாறி மாறி வழங்கியிருந்தனர். அதன் போது அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுமந்திரன், ரச புலனாய்வாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அமெரிக்காவில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது. வெளியிட்டால் அந்த விடயங்கள் உடனடியாகவே இலங்கை அரசாங்கத்தினைச் சென்றடைந்துவிடும் என்று தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு அங்கு பேசப்பட்ட விடயங்களை அறியாவிட்டாலும் அதனூடாக ஏதாவது நன்மை கிடைத்துவிட்டால் போதும் என்றிருந்திருக்கும். ஆனால் இதே சுமந்திரன் பற்றிய இன்னும் சில மறுபக்கங்களைத் தருகின்றோம். அமெரிக்கச் சந்திப்புக்களை அடுத்து கனடாவிற்குச் சென்றபோது கனடாவில் விமான நிலையத்தில் இருந்து சுமந்திரனை அழைத்துச் சென்றவர்கள் தெற்காசிய விவகாரங்களுக்கான அரசியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட தீவிர எதிர்ப்பாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜின் குழுவினர். அவர்கள் சுமந்திரனை பக்குவமாக அழைத்துக் கொண்டு நேரடியாகவே ஜெயராஜின் வீட்டிக்கு கூட்டிச் சென்றிருக்கின்றனர்.

அங்கு சென்ற சுமந்திரனுக்கு தாராள விருந்துபசாரமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசியல் ஆய்வாளர், போர் நடைபெற்ற போது அரச படைகளோ, விமானப்படையோ தாக்குதல் நடத்தினால், மறு கணமே தாக்குதல் தொடர்பிலும், தாக்குதலின் பாதிப்புக்கள் தொடர்பிலும் விரிவான புலனாய்வுத் தகவல்களை வழங்கும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்தின் மிக மிக நெருக்கமான ஒரு நபராக விளங்கிய விளங்கிவருகின்ற ஜெயராஜ் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற சுமந்திரனிடம் எந்தவிடயத்தினையும் அறிந்து கொள்ளாமல் பக்குவமாக அனுப்பி வைத்திருப்பாரா ஜெயராஜ்? மிக விரைவில் ஜெயராஜ் எழுதப்போகும் ‘அமெரிக்க விஜயமும் கூட்டமைப்பும்’ என்ற கட்டுரைக்கான அல்லது அரசாங்கத்திற்கு வழங்கப் போகும் தகவல் திரட்டுக்கான அனைத்து விடயங்களையும் சுமந்திரனிடம் இருந்து ஜெயராஜ் பெற்றிருப்பார் என்பதே உண்மையாகும். ஆனால் இருபத்து நான்கு மணி நேரமும் தங்களை வருத்தி, வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உழைத்து தேசியத்திற்கு வலுச் சேர்த்து வருகின்ற புலம் பெயர் மக்களுக்கு மட்டும் சுமந்திரனாலோ, கூட்டமைப்பினாலோ அமெரிக்காவில் பேசப்பட்ட விடயங்கள்தொடர்பில் தெரிவிக்க முடியாது என்பதுதான்? மிகப் பெரிய அவலமாகும்.

கூட்டமைப்பினைப் பதிவு செய்ய முற்பட்டால் ‘தேசத் துரோகிகள்’ முத்திரைக்கான முன்மொழிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளினுடைய கூட்டு அமைப்பாகும், அதனுள் பல கட்சிகள் இருப்பதால் கொள்கை ரீதியில் பல இடங்களில் முரண்பாடுகளும், உடைவுகளுக்கான சாத்தியப்பாடுகளும் உணரப்பட்டுவருகின்றமையால் அதனை தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்,

அதன் மூலம் தமிழர் பலத்தினை சிதையவிடாமல் காத்துக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இந் நிலையில் இந்த விடயத்தினை முன்னெடுக்க விடாது தமிழரசுக்கட்சியை தலைமையாகக் கொண்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களாக தம்மைச் சொல்கின்ற சிலரும் தடைக் கற்களை ஏற்படுத்திவருகின்றனர்.

sampanthan-300x224.jpgஇந்த விடயத்தினை சட்ட ரீதியாக மேற்கொள்ள விடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையினை சுமந்திரனே முன்னின்று செயற்படுத்திவருகின்றார். கடந்த ஆண்டு கட்சிப் பதிவிற்காக ஆவணங்கள், யாப்பு என்பன கையளிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த சான்றாவணங்கள் குறைபாடுகளுடனேயே தேர்தல்கள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. அந்த ஆவணக் கோவையைத் தயாரித்திருந்தவர் சட்ட நிபுணர்(!) சுமந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை லண்டனில் மக்கள் சந்திப்பின் போது இன்னொரு விடயத்தினை அவர் நாசூக்காக சொல்லியிருக்கின்றார். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்வதற்கு யாராவது முனைந்து தமிழரசுக்கட்சியைப் புறந்தள்ளிப் புறப்பட்டால் அவர்களுக்கு தேசத்துரோகிகள் முத்திரை குத்துவோம். என்பதாகும்.

அங்கு அவர் தெரிவித்த விடயத்தின் சாராம்சம் ‘இலங்கை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது சொல்லியிருக்கின்றார். ‘இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் உடைத்துவிட்டேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மட்டும்தான் உடைக்க முடியவில்லை’ என்று அவர் கூட்டமைப்பினை உடைப்பதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றார் எனவே அன்பான புலம்பெயர் மக்களே, அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் தயவு செய்து அந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதீர்கள்’ என்று சுமந்திரன் உரையாற்றியிருக்கின்றார்.

கூட்டமைப்பை மஹிந்தராஜபக்ச உடைப்பதனால் அதற்கு புலம்பெயர் மக்கள் எவ்வாறு ஒத்துழைக்க முடியும்? என்ற கேள்விக்கு சுமந்திரன் என்ன பதில் வைத்திருக்கின்றார்? புலம்பெயர் மக்கள் மஹிந்தவின் கைப்பிள்ளைகளா? இல்லையே? ஆகவே அவர் தெரிவித்த கருத்தின் உண்மையான நோக்கத்தினை நாங்கள் வாசகர்களுக்குத் தெளிவுறுத்துகின்றோம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்யாமல் தமிழரசுக்கட்சியாகவே தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கான முனைப்பில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதற்கு அவர்கள் தெரிவிக்கின்ற காரணம் ஆயுத கலாசாரத்தில் இருந்து வந்தவர்களை கட்சிக்குள் வைத்திருக்க முடியாது. எதிர்காலத்தில் அவர்களையும் வெளியேற்றிவிட வேண்டும் என்பதாகும்.

குறிப்பாக; சுரேஷ் பிறேமச்சந்திரனை வெளியேற்ற வேண்டும் என்பதே அவர்கள் ஏனைய நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கும் தமக்கும் நெருக்கமானவர்களுக்கும் தெரிவிக்கின்ற கருத்துtna1-300x205.jpgநிலையாகும்.இந்த விடயத்தினையே கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் சொல்லி அவருக்கும் மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். அவரும் ‘எனக்கு கீழுள்ளவர்கள் கூட்டமைப்பு பதிவினையே விரும்புகின்றனர். ஆனால் நான் தமிழரசுக் கட்சியுடனேயே ஒன்றாக நிற்கப் போகின்றேன்’ எமது ஆசிரியர் பீடத்திற்கு நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்.

உண்மையில் சுரேஷ் பிறேமச்சந்திரனை வெளியேற்றுகிறோம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியத்திற்காக சிந்திய இரத்தங்கள், வியர்வைகள் அனைத்தையும் மூட்டை கட்டும் முயற்சியில் தமிழரசுக்கட்சி ஈடுபட்டிருக்கின்றது. தமிழ்த் தேசியத்திற்காக புலம் பெயர் தேசங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் திரண்டிருக்கின்ற தமிழத் தேசிய ஆதரவாளர்கள் எல்லோரும் ஆயுதக் கலாசாரத்தின் வழியாக எழுச்சி பெற்று தமிழனுக்கு முகவரி தந்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை தமது தேசியத் தலைவனாக வரித்துக் கொண்டவர்கள் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. இந்தவிடயத்தில் இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, சிறீதரனோ முரண்டுபிடித்து ஆயுதக் கலாசாரத்தில் இருந்து வந்தவர்களை இல்லாமல் செய்கிறோம், களங்கம் அற்ற கட்சியான தமிழரசுக்கட்சி மூலம் தீர்வினைப் பெறப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு வரலாற்றினை அழித்து விட அனுமதிக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளினுடைய கூட்டு அதனை புலிகள் உருவாக்கவில்லை நாங்களே(!)Prabha_and_new_MP.jpg உருவாக்கினோம் என்று புலத்தில் தஞ்சம் புகுந்து அங்கு பிழைப்பு நடத்திக்கொண்டு தம்மைத் தாமே ஊடக ஜாம்பவான்களாகச் சொல்லிக் கொள்கின்ற சில ஊடகர்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களிடம் கேட்டுக் கொண்ட அந்த அழைப்பு ஒலி தான் இன்றுவரை எமது மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வைக்கின்றது என்பதை இவர்களும் அவர்களும் உணர்ந்து கொள்வார்களா?

ஆக, மீண்டும் விடயத்திற்கு வருவோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஜனவரி மாதத்திற்கு பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளமையால், அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கட்சியில் உள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், உட்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்ற போது இந்தக் காலம் பொருத்தமற்றது என்பதையே சம்பந்தர் பதிலாக வழங்கி வருவதாக தெரியவருகின்றது.

இந் நிலையில் தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் முரண்டுபிடிக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (தமிழ்க்காங்கிரஸ்), ஈபிஆர்எல்எப், தமிழர்விடுதலைக்கூட்டணி, ரெலோ, புளொட் உட்பட்ட கட்சிகளும் தமிழ்த் தேசியத்தின்பால் ஈடுபாடு உள்ளவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுக்காக முன்வருவதற்கான புறச்சூழல் உணரப்பட்டிருக்கின்றது. இந் நிலையில் இவ்வாறான ஒரு பலமான சக்தி ஒன்று தோற்றம் பெற்றால் எதிர்காலத்தில் தலைவர் என்ற கனவு அதிகாரம் என்ற ச்சத்தின் எதிரொலியே லண்டனில் சுமந்திரன் விடுத்த ‘மஹிந்தவின் கூட்டமைப்பு உடைப்பு புலுடா’ . அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுக்காக தமிழரசுக்கட்சியை விட்டு ஏனைய கட்சிகள் முன்செல்லுமாக இருந்தால் அவர்களை மஹிந்தவே உடைத்துவிட்டதாக பூச்சாண்டி காட்டுவதற்கும் அவர்கள் மீது துரோகிகள் பட்டம் சுமத்துவதற்கும் சுமந்திரன் தயாராகிறார் என்பதே அவருடைய லண்டன் உரையின் சாராம்சம். சுமந்திரனுக்கு அரசியலும் ஊடகங்களும் புதிதாக இருக்கலாம். ஊடகர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசியலும், அரசியல் வாதிகளும் பழயனவே. என்பதைச் சுட்டிக்காட்டலாம்.

புலம்பெயர் மக்களை போடுதடியாகப் பயன்படுத்துகிறதா கூட்டமைப்பு?!

பிரித்தானியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கூட்டமைப்பினர் பங்கெடுத்திருந்தனர். அந்தச் சந்திப்பில் தான் ஒரு அப்பழுக்கற்ற அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை சுமந்திரன் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.

புலம்பெயர் நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிவருகின்ற மக்களை புலம்பெயர் நாடுகள் திருப்பி அனுப்புகின்றன. அந்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற பொழுது அவர்களைத் திருப்பிஅனுப்ப வேண்டாம். இலங்கையில் நெருக்கடி நிலை தொடர்கின்றது என்ற விடயத்தினை கூறலாமே? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் திடுக்குற்ற சுமந்திரன்,

எப்படி நாங்கள் அவ்வாறு தெரிவிப்பது? இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் இந் நிலையில் அவ்வாறு எப்படித் தெரிவிப்பது? என்று அவர் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

“கொழும்பிலேயே வாழ்ந்து பழகிய சுமந்திரனுக்கு புலத்தில் உள்ளவர்களில் எத்தனை சதவீதத்தினர் தேசியத்திற்காக உழைத்ததற்காக உயிர்களை இழக்கும் நிலையில் தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று, அடகுவைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லையா? அல்லது மஹிந்த அரசும் அமைச்சர்களும் தெரிவிப்பது போலவே இலங்கையில் பிரச்சினையே இல்லை என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கான தனது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்த முற்படுகின்றாரா? என்ற கேள்விகள் தொடராக எழுகின்றன.

சம்பந்தபட்டோருக்கு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்கின்றது, பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுகின்றது இந்த விடயங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்களாக நீங்கள் கருதுவது புரிகிறது. எம் முடிவுகளில் குறுக்கிட யாரால் முடியும்? என்றெல்லாம் நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம்? இதற்குக் கொடுக்கப்பட்ட உயிர்விலைகள்? அர்ப்பணிப்புக்கள் எல்லாவற்றையும் ஒரு முறை ஒரே ஒரு முறை நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொண்டால் நாங்கள் எதுவும் உங்களுக்குச் சொல்வதற்கில்லை.

புலம்பெயர் மக்களுக்கு

கனடாவிலும், பிரித்தானியாவிலும் சம்பந்தரும், சுமந்திரனும் நடத்திய தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நேரடியாகக் கண்ணுற்ற பின்பும் அவர்களுக்காகக் கைகளை உரக்கத் தட்டினீர்களே? உங்கள் கைகளை தட்டிக் கேட்பதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே?

wpaudio-play.pngகைதட்டும் எம்மவர்களுக்காக உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் படைத்த பாடல்..(பாடல் இணைப்பு)

http://www.saritham.com/?p=40378

  • கருத்துக்கள உறவுகள்

1046052294_sadhu_rma_17.jpg

இதை விடவும் பெரியதாக யாராவது 'நாமம்' போட முடியுமா?

யாருமே நம்பவில்லை,இவர்களை நம்ப மாட்டார்கள்.

இலன்டனில் நடந்த சந்திப்புக்கு 50 பவுன் கட்டணம்,சாப்பாடு இலவசம்.

ஏன் 50 என்று கேட்டதற்கு, கட்சி நடத்த காசு இல்லை. மிகுதி நிதி கட்சி நன்கொடையாம். இதுக்கு மேல என்ன கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.