Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்தவின் காலத்திலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் முன்னெப்போதைக்காட்டிலும் மிகவும் அதிகரித்து இருக்கின்றன - முன்னால் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மகிந்தவின் காலத்திலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் முன்னெப்போதைக்காட்டிலும் மிகவும் அதிகரித்து இருக்கின்றன - முன்னால் இந்திய வெளியுறவுச் செயலர் யாழ்ப்பாணத்தில்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ராணுவத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த முன்னால் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் அவர்களின் சொற்பொழிவின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியா தற்போது காங்கேசந்துறைத் துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானப்படைத்தள அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் பிறகு தலைமன்னார் - இராமேஸ்வரம் பாலத்தை அமைப்பதன் மூலம் வட இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்பை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கிடையிலுமான தொடர்பை மேலும் வலுப்படுத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறான அஇவிருத்தித் திட்டங்களுக்கு வடமாகாணம் உதவுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலுமான உறவு மேலும் மேலும் வலுப்பட துணைபுரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ் பலகலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினாரால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த சொற்பொழிவு மாணவர்களாலும், பெரும்பாலான ஆசிரியர்களாலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் வெற்று ஆசனங்களை நிரப்பும் முகமாக ஆக்கிரமிப்பு ராணுவம் தனது அதிகாரிகளை கொண்டுவந்து இருத்தியதை அவதானிக்க முடிந்தது. சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் வட மாகாணத் தளபதி சந்திரசிறி, யாழ்ப்பாணத்துக்கான இந்திய அரசின் தூதுவர் மகாலிங்க போன்றவர்களின் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலும் கூறிய சரண், ஈழத்தமிழர்கள் சர்வதேசத் தலையீட்டுடனான தீர்வொன்றைத் தேடுவதை முற்றாகக் கைவிடவேண்டும், அது அவர்களுக்கு நல்லதல்ல. உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வொன்றே அவர்களுக்குச் சரியானது. அதை அவர்கள் மகிந்த அரசுடன் பேசிப் பெற்றுக்கொள்வதுதான் அவர்களுக்கான ஒரே வழியென்றும் கூறியிருக்கிறார்,

ஒரு முற்றான இனவழிப்புப் போரை நடத்தவும், அதன்பின்னர் அப்போரின்போது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை மறைக்கவும் இந்தியா இலங்கைக்குத் தொடர்ந்தும் கொடுத்துவருகிற ஆதரவென்பது, ஆசியாவின் மக்களின் உரிமைப்போராட்டங்களை நசுக்குவதற்கு மற்றைய நாடுகளுக்கு ஒரு உதாரணமாக மாறிவருவதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க.......தமிழ்நெட்.

இந்தியாவைக் கோயிலாகவும், காங்கிரஸை தெய்வங்களாகவும் வணங்கித் துதிபாடும் யாழ்க்கள இந்திய பக்த கோடிகளுக்கு இந்தச் செய்தி சமர்ப்பணம் !!!!!!!!!

இந்த முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் சிங்கள இராணுவ ஒழுங்கமைப்புக்கு இணங்க யாழ்ப்பாணம் வரவழைக்கப்பட்டு இந்த செய்தியை கூற வைக்கப்பட்டுள்ளார்.

நோர்வேயில் சிங்களத்திற்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை ( சீனாவுடன் சிங்களம் நெருங்கி செல்லுகிறது, மகிந்தர் பிரச்னையை தீர்க்கவில்லை) தமிழர் நிலத்தில் இருந்தே இவரை வைத்து மறுக்கும் ஒரு திட்டமிட்ட அரங்கேற்றலின் பாத்திரமே இது.

தமிழரைப் படுகொலை செய்வதற்கு உதவியது மட்டுமல்ல, அதனைச் சர்வதேசத்தின் கண்ணுக்கு மறைக்கவும் இந்தியா பாடுபட்தல்லவா. தமிழரை அழிப்பதிலும் நசுக்குவதிலும் இரண்டு நாடுகளும் ஒருமித்த கருத்துடையவையல்லவா அதுதான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.