Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரிமலை, சேந்தாங்குத்தில் மீள் குடியேறிய மக்கள் மலசல கூடங்களை அமைப்பதற்கும் கடற்படை தடை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலை, சேந்தாங்குத்தில் மீள் குடியேறிய மக்கள் மலசல கூடங்களை அமைப்பதற்கும் கடற்படை தடை:-

17 நவம்பர் 2011

மீளக்குடியமர்வுக்கு அண்மையில் அனுமதிக்கப்பட்ட கீரிமலை, சேந்தாங்குளம் பகுதியில் தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் மலசல கூடங்களை அமைக்கும் பணியைக் கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமது அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொள்ளப் படையினர் இடையூறு செய்வதால் தாம் பெரும் அவதிக்குள்ளாகின்றனர் என இப்பகுதி மக்கள் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் நேற்று முறையிட்டுள்ளனர்.

சமுர்த்தித் திட்டத்தின் ஊடாக சேவாலங்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் வலி வடக்கிலுள்ள சேந்தாங்குளம் பகுதியில் 38 மலசல கூடங்களை அமைக்க பிரதேச சபை அனுமதி வழங்கியிருந்தது. மலசல கூடங்களை அமைக்கவென ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் மலசல கூடங்களை அமைப் பதற்கான இடங்களை வலி வடக்குப் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் என்போர் பார்வையிட்டு, அதற்கான அனுமதியையும் வழங்கியிருந்தனர். எனினும் அவ்விடத்தில் மக்கள் மலசல கூடங்களை அமைக்க முற்பட்டவேளையில் அங்கு விரைந்த கடற்படையினர் குறித்த இடங்களில் மலசல கூடங்களை அமைக்க அனுமதியில்லை எனத் தெரிவித்ததுடன், கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்த உத்தரவிட்டனர்.

இச்சம்பவம் பற்றி அறிந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர் ந.மதியழகராஜா ஆகியோர் சேந்தாங்குளம் பகுதிக்கு நேற்றைய தினம் சென்றனர். கடற்படையினரின் அராஜகத்தால் மலசல கூடம் அமைக்கும் திட்டம் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையே தமக்கு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க இவர்களிடம் முறையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக கடற்படை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயன்ற போது அது கைகூடவில்லை. எனினும் 'குறித்த திட்டத்துக்கான அனுமதியை பிரதேச சபை வழங்கிவிட்டதால் மக்கள் மலசல கூடம் அமைக்கும் பணியை தொடரலாம். கடற்படையினரால் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நிலைமையை விளக்கி திட்டத்தை தொடர வழிசெய்வேன்'' என மக்களிடம் வலி வடக்குப் பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன் உறுதியளித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70241/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலசல கூடத்துக்கு கூட வக்கில்லை.

அபிவிருத்தி நல்லாத்தான் செய்யினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.