Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் எதிர்காலமும் தமிழர்களும்- சிரால் லக்திலக்க--

Featured Replies

ஈழப்போர் நிறைவுற்றாலும் தமிழர்களின் அரசியற் சுதந்திரம் மற்றும் அரசியல் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இலங்கையில் தமிழர்கள் தமக்கு அரசியற் சுதந்திரம் பற்றிய பிரச்சினைகள் இருப்பதனை டொனமூர் ஆணைக்குழு முன்னிலையிலேயே முதன் முதலாகத் தெரிவித்திருந்தனர்.

இதன் போது டொனமூர் ஆணைக்குழுவினர் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் யோசனைகளை முன்வைத்த போது அன்றிருந்த தமிழ் அரசியற் தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இனவாப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய இடமளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் டொனமூர் ஆணைக்குழுவினர் தமிழ் அரசியற் தலைவர்களின் கோரிக்கையினை நிராகத்துவிட்டு பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையினை அறிமுகப்படுத்தினர்.

இவ்வாறு அறிகப்படுத்தும்போது சிறுபான்மை மக்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்ப டுவதனைத் தடுப்பதற்காக டொனர் அரசியல் அமைப்பு முறையில் நிறைவே அமைப்பு முறையில் நிறைவேற்றுக் குழுக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

இந்த யோசனையையும் தமிழ் அரசியற் தலைவர்கள் நிராகத்தனர். இதன் விளைவாக 1931 இல் டொனமூர் அரசியல் அமைப்பின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதலாவது தேர்தலை தமிழ் அரசியற் கட்சிகள் பகிஷ்கரித்தனர். அன்று தமிழ் அரசியல் அதிகாரம் ஜெவ்னா யூத் லீக் (Jaffna youth league) என்ற அரசியல் இயக்கத்தின் வசம் இருந்தது.

நான் அறிந்தவரையில் அண்மைக்கால வரலாற்றில் வடக்கிலும் தெற்கிலும் உருவான அரசியல் அமைப்புகளில் முற்போக்கான அரசியல் அமைப்பாக திகழ்ந்த ஓர் அமைப்பாக இதனைக் கூற முடியும். அவர்கள் இந்தியாவைப் போன்று இலங்கையிலும் வடக்கு தெற்கு இணைந்த சுயாட்சி அரசினையே கோரினர்.

அவர்கள் ஆங்கிலேயர்களுடன் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு போதும் இணங்கியதில்லை. வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த கல்வி கற்ற பிரிவினரைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட இந்த இயக்கத்திற்கும் அரசியல் தோல்வி ஏற்பட்டது. இவர்கள் முன்வைத்த தேர்தல் பகிஷ்கரிப்புக் கோரிக்கையினை வடக்கு, கிழக்கு மக்கள் செவிமடுத்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதற்கு எதிராக மன்னாரில் தனித்துப் போட்டியிட்டார். ஆனால் பகிஷ்கரிப்பு வெற்றி அளித்தது. ஆயினும், தமிழர்களின் உரிமைகளுக்காக மக்கள் பிரதிநிதிகள் முன்நின்று செயலாற்ற வேண்டிய தருணத்தில் அவர்கள் அந்தப் பொறுப்பினைக் கைவிட்டனர்.

யாழ்.வாலிபர் முன்னணியினால் எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவு இவ்வாறாக மாறியது. இதனால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான நட்ட ஈட்டினைச் செலுத்த வேண்டிய நிலை இந்த இயக்கத்திற்கு ஏற்பட்டது.

1936 இல் நடைப்பெற்ற தேர்தலில் அவர்கள் அரசியல் ரீதியாக தூக்கியெறியப்பட்டனர். 1936 இல் யாழ் வாலிபர் முன்னணிக்கு நேர்ந்த கதி அரசியற் களத்திற்கு வந்த பெரும்பாலான அரசியற் சக்திகளுக்கும் நேர்ந்தமையை வரலாற்றில் காணலாம்.

இதனால் 1930இல் கிடைத்த இந்த அனுபவத்தினை தமிழ் அரசியல் தலைமைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதற்கான கால நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது. அன்றைய நிகழ்வுகளை நான் இவ்வாறு ஆய்வுக்குட்படுத்த விரும்புகின்றேன். டொனமூர் சீர்திருத்தத்தினை முழுமையாக நிராகத்தமையானது அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் முட்டாள்தனமான நடவடிக்கை யாகும். எனினும், அன்று தமிழ் அரசியலை கவலைக்குட்படுத்தும் ஓர் விடயம் அதில் அடங்கியிருந்தது. அரசியல் தீர்வு காணும் நடவடிக்கையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தினால் இல்லாமல் செய்யப்படக் கூடிய அபாயம் அதில் இருந்தது. ஆனால், டொனமூர் ஆணைக்குழு அதற்கு ஓர் தீர்வினை வழங்கியிருந்தது. அதுவே நிறைவேற்றுக் குழு முறையாகும்.

அது கோட்பாட்டு ரீதியில் பன்மைத்துவ ஜனநாயகமாக இருந்தாலும், சிங்களப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசியல் 1936 இல் தனிச் சிங்கள அமைச்சரவையினை அமைத்து அந்த கோட்பாட்டினைப் புறக்கணித்திருந்தது. இதன் விளைவாக கம்பளை சாஹிராக் கல்லூரியில் கூடிய அனைத்து சிறுபான்மையினப் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கும் ஓர் வழிறையினை முன்மொழிந்தனர். பின்னைய காலத்தில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் 50இற்கு 50 கோரிக்கையினை கம்பளை சாஹிராக் கல்லூயில் நிறைவேற்றப்பட்ட யோசனையின் அடிப் படையிலேயே முன்வைத்தார்.

துரதிர்ஷ்டவசமாக இவ்வாறு தொடர்ச்சியாக சென்ற அரசியல் பேச்சுகள் இனவாத செயற்பாடாகவே சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக நாவலப்பிட்டியவில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சிங்களப் பெயர்களில் காலணிகளைத் தயாரித்து அணியக் கோரியதையும், பலப்பிட்டியவில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க, தமிழர்களின் தோலை உரித்து மேளம் அமைத்து அடிக்க வேண்டும் என்று கோரியதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அன்றிலிருந்து இன்று வரை நாம் இனவாத சிந்தனைகளிலிருந்து மீளவில்லை என்பதனை நன்கு அறிய முடியும்.

இதன் விளைவே 30 வருட சாபக்கேடான யுத்தம். சமூகத்தினால் இனவாதச் சிந்தனைகளிலிருந்து மீள முடியாத போதிலும், 1943இல் டி.எஸ். கு சேனநாயக்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், ஜே.ஆர்.ஜயவர்தன கூட்டு அதிலிருந்து மீள ஓர் முயற்சியினை எடுத்தது.

அதன் விளைவே 1947இல் ஐக்கிய தேசியக் கட்சியின் உருவாக்கம். ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி

உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து இன மக்களின் ஒற்றுமைத் தன்மையின்றி எதிர்கால இலங்கையினைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டது. வலியுறுத்தப்பட்டது. 1947இல் அவ்வாறு பிரகடனப்படுத்திய டி.எஸ். 1949இல் அந்தக் கொள்கையிலிருந்து விலகிக்கொண்டார்.

பிரஜாவுரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தியமை சிங்கள தமிழ் உறவினை மேலும் மோசமடையச் செய்தது. இவ்வாறு யுத்தம் மூளும் வரை இந்நாட்டு அரசியல் தலைவர்கள் அரசியல் தவறுகளை செய்து வந்துள்ளனர். அதற்கான உதாரணங்களை 1956இலும், 1960இலும், 70இலும், 77லும் 83 இலும் காண முடியும்.

அதன் விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறெனில் இன்றுள்ள பிரச்சினை இனவாதம் அல்ல. ஒவ்வொருவன் உரிமைகள் தொடர்பில் முன்நிற்பதும், அதற்காக பாடுபடுவதும் எவ்வாறு என்பதே பிரச்சினையாக உள்ளது.

தமிழர்களுக்கும் சிங்களவர்களும் சிங்களவர்களுக்கு தமிழர்களும் உதவக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டியுள்ளது. வடக்கிற்கு மாகாண சபை தேவை. இது இன்றுள்ள ஜனநாயக நிகழ்ச்சி நிரலில் உள்ள அவசியமான நிபந்தனையாகும். வழங்கப்படும் மாகாண சபையில் நிலவும் அதிகாரங்கள் என்பது இரட்டை விடயமாகும்.

இதற்காக தமிழ் அரசியல் போராட வேண்டியுள்ளது. அணிவகுக்க வேண்டியுள்ளது. எனினும், ஆரம்பகால விடயங்கள் மற்றும் இரட்டை விடயங்கள் குறித்து தமிழ் அரசியல் அறிந்து கொள்ள வேண்டும்.

வடக்கில் மாகாண சபையினை அமைத்து, அதிகாரங்களைக் கோரும் போராட்டத்திற்கு நாட்டின் பிற மாகாண சபைகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணையக் கூடும். அப்பொழுது அது ஒரு பொதுப் போராட்டமாக அமையும்.

மாறாக தமிழ் மக்களின் போராட்டமாக மட்டும் அமையாது. அவ்வாறன்றி குதிரைக்கு முன்பு வண்டிலைக் கட்டுவது 1936இலும், 1980, 1990, 2000களிலும் தமிழ் அரசியல் மேற்கொண்ட ஒரே தவறினை மீண்டும் செய்வதாக அமையும். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது பற்றி அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் பேச்சுகளை நடத்துவதற்கு முன்பு தெற்குடன் பேச வேண்டும்.

தெற்கு என்று நான் கூறுவது தமிழர்கள் குறித்து அக்கறைக் கொண்டுள்ள தென்னிலங்கை சக்திகளையாகும். அவ்வாறின்றி மேலுமொரு போராட்டப் பாதையினை தெரிவு செய்வது இலங்கையினதும், தமிழர்களினதும் எதிர்காலத்தின் மீது விழும் அடியாகவே அமையும் எனலாம்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இதற்காக தமிழ் அரசியல் போராட வேண்டியுள்ளது. அணிவகுக்க வேண்டியுள்ளது. "

ஆமாம் இரண்டு குழுவா அணிவகுத்து மாறி மாறி முதுகில் குத்துவோம்.

தமிழனுக்கும் என்று சில அரசியல் கோட்பாடுகள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.