Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ... அப்பிடியே சொல்லுறியள்?குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சாந்தபுரத்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓ... அப்பிடியே சொல்லுறியள்?குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சாந்தபுரத்தான்

20 நவம்பர் 2011

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இது என்ன கொடுமையப்பா. முழுக் கொலையளையும் குற்றங்களையும் செய்த இவரே தண்டனை வழங்கப் போறார் என்டு சொல்லுறார். இவரின்ட உண்மைய கண்டு பிடிக்கிற ஆணைக்குழு ஆர் ஆர கண்டு பிடிக்கப் போகுதாம். இவர முதலில கண்டு பிடிக்குமே? உலகத்தின்ட குற்றவாளிக் கூண்டிலில இருந்து தப்புறத்திற்காய் மனுசன் புலம்புத் தொடங்கிட்டுது. இவருக்கு இவரே என்ன தண்டனை வழங்குவார்?

***

வடக்கு கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம். இப்போது நினைத்தாலும் இணைக்க முடியும். வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதை ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதிகள் அனைவரும் திட்டமிட்டு வருடந்தோறும் பிற்போட்டு வந்தனர்.

முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேணும் என்டது எங்கட மக்களின்ட கனவு பாருங்கோ. இலங்கையில கதிரையில ஏறின ஜனாதிபதியள் எல்லாரும் வடக்கையும் கிழக்கையும் மட்டும் பிரிக்கேல்ல எல்லாவத்தையும் பிரிச்சு மேஞ்சு போட்டினம். நீதிபதி அய்யா சொல்லுற மாதிரி வாக்கெடுப்ப நடத்தியனால் உவையளின்ட வண்டவாளம் கிழிஞ்சு போகுமெல்லே? எங்க நடத்தட்டும்!

***

வடக்கு கிழக்கில் நிலவிய பயங்கரவாத நிலைமைகளினால் பிரதேச மக்களின் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் சமூகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாணவ சமூகத்தின் கல்வி உரிமைகளை பயங்கரவாதிகள் பறித்துக்கொண்டனர். மக்களின் விலை மதிப்பற்ற உயிர்கள் பதுங்கு குழிகளுக்கு முடக்கப்பட்டன.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய

மக்களின்ட உரிமையைப் பற்றி ஆர் பேசுறார் என்டு கண்டியளே? யுத்தத்தில மக்களை கொண்டு குவிக்கிற இராணுவங்களின்ட தளபதி பேசுறார். வடக்கு கிழக்கு மக்களின்ட உரிமையளையும் மாணவர்களின்ட படிப்பு உரிமையையும் பறிச்சது நீங்கள்தானே. என்ட கடவுளே! மக்களின்ட உயிர் விலை மதிப்பில்லாதது என்டு சொல்லிக் கொண்டே லட்சக் கணக்காய் சனங்கள அழிச்சு புதைச்சிட்டியளே!

***

அடுத்தவருடம் மார்ச் மாதம் அளவில் நாங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகளவான பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்தியிருப்போம். அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுத்துக் கூறுவோம். மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு இலங்கை சிறந்த முறையில் தயாராகும்.

மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி தூதுவர் மகிந்த சமரசிங்க

ஓ... அடுத்த மாதம் மார்ச் மாதம்., நல்ல மாதம்தான்., அப்பவே தொடங்குங்கோ. இருந்தாலும் உங்களுக்கு சரியான கொழுப்புத்தான். மனித உரிமையப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறியள். மனித உரிமையை நாசப்படுத்துறதில நீங்கள் முன்னுக்கு நிக்கிற ஆக்கள் என்டபடியால நீங்கள்தானே ஹீரோக்கள். ஆட்டத்துக்கு நல்ல முறையில தயாராகி மைதானத்திள் ஆடுங்கோ! அங்க கூட்டத்துக்கு வாறவையளவிட நீங்கள்தான் நிறையப் பேரை கொண்டவை என்டதால இதில செயிக்க வேணும்!

***

தமிழ் புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படத் தயார். புலம்பெயர் தமிழர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ அரசாங்கம் விரும்பவில்லை.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இதென்ன புதுக்கதையாய் இருக்குது. ஏன் புலம்பெயர்ந்த நாட்டிலயும் எல்லாரையும் அழிக்கப் போறியளே? உங்கட புரிந்துணர்வுக்கும் தயராதலுக்கும் பின்னால் பொல்லாத திட்டங்கள வைச்சிருப்பியள். இஞ்ச தாயகத்தில மக்கள பிடிச்சுக் கொண்டுபோய் உங்கட விழாக்களில படம் காட்டுற மாதிரி புலம்பெயர்ந்த மக்களையும் வைச்சு அரசியல் செய்யலாம் என்டு நினைச்சியளே?

***

நாடு தொடர்ந்தும் பிளவடைந்த நிலையில் காணப்படுகிறது. சாதாரண சிங்களவர்கள் இனவாதிகள் என இலங்கைக்கு வெளியே கருதப்படுகின்றனர். உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது. தமிழ் சிங்கள தேசியவாதக் கொள்கைகளில் தவறில்லை. கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகள் பின்பற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னாள் அமைச்சர் மிலிந்த மெறகொட

நாடு எப்பயும் பிரிஞ்சுதான் கிடக்குது. அத ஒட்ட உங்களால ஏலாது. யுத்தம் நடத்தி அடக்குமுறையள மலிவாக்கி நாட்டை ஒட்ட வைக்க ஏலாது. சிங்கள தமிழ் தேசியவாத கொள்கை பிழை இல்லை என்டியள். கடும் தேசியவாத கொள்கையான சிங்கள இனவாத கொள்கையை நீங்கள்தானே பிடிச்சுக் கொண்டு நிக்கிறியள். எல்லாம் உடைஞ்சு கிடக்கேக்குள்ள பிறகென்ன ஓரேநாடு ஒரே இனம்?

***

தனிச் சிங்கள சட்ட மூலம் மாபெரும் தவறாக கருதப்பட வேண்டுமெ. நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமை பாரிய முரண்பாடுகள் ஏற்பட வழிகோலியது. தொழில் வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் சம உரிமை கோரிய தமிழ் மற்றும் ஏனைய இன சமூகங்களுக்கு இந்த சட்டம் பெரும் தடையாக அமைந்தது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்ட மாதிரி நல்லாய் நடிக்கிறியள். இன்டைக்கு மகிந்த ஆடுறதுக்கு முன்னோடி நீங்களும்தானே? அண்டைக்கு எங்கட மண்ணில எத்தினை படுகொலையள படையெடுப்புக்கள செய்தியள்? இப்ப முற்போக்கு வேடம் போட்டு நல்லா நடிக்கிறியள்? எல்லாம் காலம் கடந்து போச்சுதம்மா!

***

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் அது தமிழகம் தொடர்பான பிரச்னை இல்லை; தேசிய அளவிலான பிரச்னையாக பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இந்தப் . பிரச்னை தொடர்பாக, தங்களுக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன். மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது.

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா

எழுதுற கடிதங்களை எல்லாம் எண்ணி வையுங்கோ. நீங்களா கலைஞரா அதிக கடிதங்கள எழுதினது என்டுறதயும் ஒரு ஆட்சிக்கால சாதனையாய் அறிவிக்க வேணும். இலங்கை இரட்டை நிலை கடைப்பிடிக்குது என்டு ஆத்திரப்படுறியள். அது பத்துப் பன்னிரண்டு நிலையக் கடைப்பிடிக்குது. நீங்களும் தமிழ்நாட்டில தேர்தலுக்கு முதல் ஒரு நிலையையும் தேர்தலுக்கு பிறகொரு நிலையையும் கடைப்பிடிக்கிறியளாம்? அதையும் எண்ணி வையுங்கோ!

***

இந்திய புலனாய்வு சேவை அதிகாரிகள் கூட 2008 ஆம் ஆண்டு வரை புலிகளை தோற்கடிக்க முடியும் என கூறவில்லை. புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அமெரிக்காவும் இருந்தது. கோத்தபாய ராஜபக்ஷவை தவிர வேறு எவரும் போரில் வெற்றிப்பெற முடியும் என கூறவில்லை

-நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்

ஓ... அவை நம்பேல்ல நீங்கள் நம்பினனியள் போல கிடக்குது. புலியளை அழிக்கலாமே? என்டு அமெரிக்காவையும் இந்தியாவையும் கேட்டுத்தானிருக்கிறியள். புலியள தோற்கடிக்கிறது என்ட பெரிய திட்டத்தோடயே இறக்கினியள்? வன்னியில வந்து சிரிச்ச நேரம் வேற மாதிரிதானே பேசினிங்கள். எல்லாருமாய் சேந்து சமாதானம் என்டு சனத்தின்ட தலையில அழிவை கட்டிப் போட்டியளே? இப்ப இருந்து கொண்டு ரங்குப்பெட்டிக் கதையள கிண்டி அளந்து கொண்டிருக்கிறியள்.

***

தெற்காசியப் பிராந்தியத்திலேயே நீதித்துறையில் முன்னோடியாக இலங்கை திகழ்கிறது. நீதித்துறையைப் பொறுத்தவரையில் இந்தப் பிராந்தியத்திலுள்ள மற்றைய நாடுகளை முந்திக் கொண்டு நாம் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருக்கிறோம்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நீதியில்லாத நாட்டில நீதிய கொன்று குழி தோண்டி புதைச்ச நாட்டில இருந்து கொண்டு இப்பிடி ஒரு பொய்ய சொல்லுறியள். கொல்லுறதும் அடிக்கிறதும் பறிக்கிறதும்தானே உங்கட நீதி. அந்த விதத்தில நீங்கள் பிராந்தியத்தில மட்டுமில்ல உலகத்திலயே முன்னுக்குத்தான் நிக்கிறியள். இன்னும் முன்னுக்கு வருவியள் போலக் கிடக்குது.

***

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை.

தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர

உங்கட சண்டித்தனத்துக்கு என்ன பெயர்? ஜனநாயகமே? நாட்டு இறைமையே? அப்பாவி தமிழ மீனவரை கொன்று தாக்கி கடல் படையள குசிப்படச் சொல்லுறியள். ஜெயலலிதா தொண்ட கிழிய கத்தினாலும் மை தீர கடிதம் எழுதினாலும் மன்மோகனுக்கும் உங்களுக்கும்தானே உங்கட அரசியல் வெளிச்சம் பாருங்கோ!

***

இந்தியா எங்கள் தொப்புள்கொடி உறவு. சீனா எமது நண்பன். அமெரிக்காவும் கூட இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஏன் மற்ற நாடுகள விட்டிட்டியள்? இஸ்ரேல் எங்கட கண், சீனா எங்கட வாய், பாகிஸதான் எங்கட மூக்கு, லிபியா எங்கட நாக்கு என்டு எல்லாரையும் கூப்பிடுங்கோவன். எல்லாருக்கும் நாட்ட பிரிச்சு பிரிச்சு விக்கிறதுக்கே ஒண்டாய்ச் சேர்ந்து தமிழரின்ட போராட்டத்த நசுக்கினியள். தலையையும் வாலையும் எல்லாருக்கும் மாறி மாறி காட்டி நல்லாய்த்தான் உலகத்தோடு விளையாடுறார். அவங்களும் நண்பேன்டா என்ட மாதிரி வாறங்கள் என்டப் பாருங்கோவன்!

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70341/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தபுரத்தார், இந்த ஸ்ரீ லங்கா ஓநாய்களிடம் பேசி பெறலாம் என்று நம்பும் தமிழ் ஆடுகளை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.