Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த வேண்டும்! வட மாகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் – கஜேந்திரகுமார்!(காணொளி)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுத்து செல்லாது இலங்கை அரசின் கடந்த 60 வருடகால தமிழ் இனப்படுகொலையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதோடு, அது பிழையானவர்களின் கைகளுக்கு செல்லாதிருப்பதற்காக தமிழ் புத்திஜீவிகளை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் லண்டனில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.கட்சி அரசியலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைகள் என்பது 13 திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்காக ஒற்றை ஆட்சி முறைமைக்கு அமைவாக வழங்கப்பட்ட ஒன்று எனவும் அது எந்தவித அதிகாரமும் அற்ற அமைப்பு எனவும் தெரிவித்த கஜேந்திரகுமார், இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும் எனவும், அப்படிப்பட்ட அதிகாரங்கள் அற்ற மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது எனவும், அது பிழையானவர்களின் கைகளுக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக கூட்டமைப்பு தமிழ் புத்திஜீவிகளை சுயேட்சை குழுவாக நிறுத்துமாயின் அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

போர்குற்றங்களும் இனப்படுகொலைகளும்

வெறுமென போர்க்குற்;றத்தை வலியுறுத்துவதானால் போர்குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே தண்டணைக்குள்ளாக்கும் எனவும் இதனால் கடந்த 60 வருடங்களாக இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளும் இனப்படுகொலை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கப்படுவதோடு தமிழ்மக்களின் இதுவரைகால இழப்புக்களிற்கு உரிய தீர்வு கிடைக்காமல் போகலாம் எனவும், இதனால் போர்க்குற்றத்தோடு இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டமை மற்றும் இந்தியாவில் நாச்சியப்பன் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகவும் கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் முழுவடிவம் காணொளியாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://youtu.be/4zXGr1tGXvY

http://youtu.be/wQQOVBZgpUk

http://youtu.be/W7goCKR_w2I

http://www.saritham.com/?p=41481

Edited by தமிழ் அரசு

1987 ,இப்படித்தான் 1987இலை இந்தியவின் தீர்வை நிராகரித்தம் பிறகு பிரேமதாசாவை நிராகரித்தம் பிறகு சந்திரிக்காவை நிராகரித்தம் பிறகு ரணிலை நிராகரித்தம் ... இண்டைக்கு கோவணமும் இல்லாமல் உரிஞ்சாங்குண்டியோடை நிண்டும்.... அடங்கலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை மனிதன்

நான் நம்புகின்றேன் நீங்களும் ஒரு முன்னாள் போராளி என்று இந்த ஒப்பந்தங்கள் வந்தபோது நீங்களும் இயக்கத்தில் இருந்திருப்பீர்கள் அப்போதெல்லாம் இதுபற்றி மொறன்பட்டகருத்துடன இருந்தீர்கள் ? :blink:

நீங்கள் இப்போது கூறும் கருத்தைத்தான் ஒட்டுக்குழுக்கள் சொல்லி வந்தனர் உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் ? :icon_mrgreen:

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.