Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவு செலவுத் திட்டத்தில் கிறிஸ் பூதத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா ?

Featured Replies

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கண்துடைப்பு, தனியார் துறையினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மக்களின் வயிற்றில் அடித்து மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி யான அரியநேத்திரன் தெரிவித்தார்.

சமாதானம் மலர்ந்து விட்டதாக கூறுகின்ற போதிலும் யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்டதற்கு கூடுதலாக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை போல கிறிஸ் பூதத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்றும் அவர் வினவினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிரச்சினைக்கு வெளியில் சென்று தீர்வுகளை தேட வேண்டியதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உள்ளூரிலேயே தீர்வுகாண வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருப்பதனால் தான் அரசாங்கத்துடன் 13 ஆவது தடவையாகவும் பேச்சுவார்த்தையை நடத்தி ஏமாந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் புலிகளுடன் இறுதியாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வரையிலும் சகல பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கமே முறித்துக் கொண்டது. பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு கண்டிருந்தால் பூதாகரமான பிரச்சினை ஏற்பட்டிருக்காது. சிங்கள தனிச்சட்ட அமுலாக்கம் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க வருத்தம் கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு உணரக்கூடும்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 15,000 பேரென்று ஜனாதிபதியும், 12,000 பேர் என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் புனர்வாழ்வளிப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் 19925 பேர் என்றும் பரஸ்பர விரோதமான புள்ளி விபரங்களை தெரிவிக்கின்றனர். புனர்வாழ்வளிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் விடுதலை செய்யப்பட்டோர் தொடர்பில் அவர்களுக்குள்ளே தெளிவில்லை.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு முன்னரும் அதற்கு பின்னரும் பல்லாயிரக்கணக்கா னோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வரவு செலவுத் திட்டத்தில் கெப்பத்திக்கொல்லாவ கிராமத்திற்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய கிராமங்கள் மறக்கப்பட்டு விட்டன. பெண்கள், சிறுவர்களின் நலனோம்புகைக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் வெலிக்கடை சிறைச்சாலையில் 50 பெண்களும் 5 சிறார்களும் வாடுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் யுத்தம் மௌனித்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும் பாதுகாப்பு அமைச்சுக்கு யுத்த காலத்தை விடவும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமாதான காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு கூடுதலான நிதியொதுக்கப்பட்டமை பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதுடன் கிறிஸ் பூதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் வலு பெறுகின்றது.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களின் மேம்பாட்டிற்கு இத்திட்டத்தில் ஒன்றுமில்லை. அரச ஊழியர்களுக்கு கண்துடைப்பு, தனியார் ஊழியர்களுக்கு ஏமாற்றம், வடக்கு கிழக்கு மக்களின் வயிற்றிலடித்து மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர். பட்டதாரிகள் வேதனைபடுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலும் கிழக்கிலும் மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு முகம் கொடுக்கின்றனர். சமாதான காலத்தில் இடம்பெறுகின்ற பொலிஸ் பதிவு தொடர்பில் பெரும் சந்தேகம் எழுகின்றது என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பதான் ஸ்ரீ லண்ககாரனும், இரானிய கொங்கிரசும் எங்களை ஏமாத்தவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.