Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின நிகழ்வுகள்: படையினரின் மிரட்டல்கள் மக்களை அடிபணிய வைக்கப் போவதில்லை!

Featured Replies

மாவீரர் தின நிகழ்வுகள்: படையினரின் மிரட்டல்கள் மக்களை அடிபணிய வைக்கப் போவதில்லை! - சுரேஸ்

வடக்குக் கிழக்கில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்கக் கூடாது என சிறிலங்கா படைத்தரப்பினர் விடுத்து வருகின்ற மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் தமிழ் மக்களை ஒருபோதும் அடிபணிய வைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பினரின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்கள் இனங்களுக்கு இடையில் பகைமை உணர்வை வளர்க்குமே ஒழிய, நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கெடுபிடிகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மாவீரர் வாரம் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடபகுதியில் சிறிலங்கா படைத்தரப்பினரின் கெடுபிடிகள் அதிகரித்திருக்கின்றன. ஆலயங்களில் மணியோசை எழுப்பக்கூடாது, நவம்பர் 27ஆம் திகதி சுட்டி விளக்குகளோ நினைவேந்தல்களோ எரிக்கக்கூடாது போன்ற உத்தரவுகளை சிறிலங்கா படைத்தரப்பினர் பிறப்பித்துள்ளனர்.

காரைநகரில் இத்தகைய உத்தரவுகளை சிறிலங்கா படைத்தரப்பினர் பிறப்பித்துள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன.

அதேவேளை, சிறிலங்கா படைத்தரப்பினர் இரவு நேரங்களில் தமது ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். பல இடங்களில் சிறிலங்கா படைத்தரப்பினர் திடீர் சோதனைகளிலும் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாள்களாக வடபகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 21 முதல் 27 வரை மாவீரர் தின நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்திருக்கின்றன. அதற்காக ஆலயங்களில் பூசைகளை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மணியெழுப்பத் தடைவிதிப்பது அராஜகமானது.

காரைநகரில் சிறிலங்கா படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்த பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசியிருக்கிறார்கள். அதுபோல் இன்று கருத்துச் சொல்லும் என் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம்.

சிறிலங்கா படைத்தரப்பினர் மிக மோசமான அடக்குமுறையினை மக்கள் மீது திணிக்கின்றனர். மக்களைச் செம்மறி ஆடுகள் என்றெண்ணி நடந்து கொள்கின்றனர். சிறிலங்கா படைத்தரப்பின் தலைமைப் பீடங்களின் தவறான வழிநடத்தல்களே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம்.

சிறிலங்கா படைத்தரப்பின் இத்தகைய செயல்கள் அவர்கள் மீது மக்களுக்குப் பகையுணர்வு வளரவே வழிசெய்யும். ஒரு மனிதனுக்குத் தன்னுடைய குடும்பத்தில் இடம்பெற்ற துன்பங்கள் மற்றும் இழப்புகள் தொடர்பில் அனுஸ்டிப்பதற்கு உரிமை உண்டு. எனது குடும்பத்தில் ஒருவன் பிறந்தாலோ இறந்தாலோ அதனைக் கொண்டாட உரிமை இருக்கிறது. இதனைத் தடைசெய்ய யாருக்கும் உரிமையில்லை.

மக்கள் மீது அடக்குமுறைகளைத் திணித்தபடி அவர்கள் தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என சிறிலங்கா படைத்தரப்பு எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. எனவே மக்கள் தமது இன்ப, துன்பங்களை அவர்களே கொண்டாடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.

அதற்கு மாறாக சிறிலங்கா படைத்தரப்பினரால் விடுக்கப்படும் இத்தகைய மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் தமிழ் மக்களை ஒருபோதும் அடிபணிய வைக்கப் போவதில்லை' என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3c528ffa-269a-440b-9582-6da43fbcebf7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.