Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய லீன் பாஸ்கோ விஜயம்!

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய லீன் பாஸ்கோ விரைவில் இலங்கை விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லீன் பாஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விஜயம் அமையவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த செப்ரெம்பர் மாதம் சந்தித்து கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே லீன் பாஸ்கோ கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால் அவர் இலங்கைக்கு எப்போது விஜயம் செய்வார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

இவரின் விஜயத்தின் போது உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு தெரியப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறும் விவகாரங்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பதிலளிப்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக லீன் பாஸ்கோ சிறிலங்காவின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என நியூயோரக் தகவல்கள் தெரிவிப்பதாகவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விசாரணைப் பொறிமுறை குறித்த விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் அறிவிககும் என கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பின்னரான சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் பொறுப்பு சிறிலங்கா பொலிஸாரிடம், குறிப்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆங்கிலப் பிரதி மட்டுமே முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பின்னரே,தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பிரதிகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பது குறித்த விபரங்களும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=f4d72e87-eefe-4d7c-b31e-a01267961f39

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.