Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரின் பிறந்த நாள் விழாவில் - கனடா ஈழமுரசு திருகோணமலை நலன்புரிச் சங்கத்திற்கு 1,350 டொலர்கள் அன்பளிப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eelamurasu2010.jpg

கனடா ஈழமுரசு நிறுவனத்தால் ஆண்டுதோறும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு எடுக்கும் பிறந்த நாள் விழா இம்முறையும் சீரோடும் சிறப்போடும் லே பார்க் விருந்து மண்டபத்தில் இடம்பெற்றது. அரங்கு நிறைந்த விழாவில் சிற்றுண்டி விற்பனை மூலம் சேர்க்கப்பட்ட 1,350 டொலரை ஈழமுரசு நிறுவனம் திருகோணமலை நலன்புரிச் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்தது. இந்த அன்பளிப்பை ஈழமுரசு நிறுவனர் இரஞ்சன் கொடுக்க தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் பெற்றுக் கொண்டார்.

திருகோணமலை நலன்புரிச் சங்கம் 75 ஆதரவற்ற சிறார்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூபா 40 இலட்சம் (36,000 டொலர்) செலவில் கல்வி, உடை, உணவு, மருத்துவம் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏனைய ஊர்ச்சங்கள் போலல்லாது திருகோணமலை நலன்புரிச் சங்கம் பல அறப்பணிகளைச் செய்து வருகிறது.

தேசியத் தலைவரின் பிறந்த நாளன்று அவருக்குப் பெருமை சேர்க்குமாறு இந்த அன்பளிப்பை செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விருந்து மண்டபங்களிலும் வீடுகளிலும் இடம்பெறும் பிறந்த நாள் கொண்டாடங்களின் போது வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் எமது தாயக உறவுகளுக்கு உதவ எல்லோரும் முன்வர வேண்டும். தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது நாளொன்றுக்கு ஒரு டொலர், மாதம் 30 டொலர், ஆண்டொன்றுக்கு 360 டொலர் கொடுக்க முன்வர வேண்டும்.

சிறீலங்கா அரசு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை நடுத்தெருவில் கைவிட்டு விட்டது. தோராயமாக 3 இலட்சம் மக்கள் அவர்களது சொந்த மண்ணில் இன்னும் மீள் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள இராணுவம் அந்த மக்களது காணிகளை அபகரித்துள்ளது. அவர்கள் சிங்கள இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கிறார்கள். சிறீலங்கா பேரினவாத அரசு விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்த மிதப்பில் இருக்கிறது. தமிழ்மக்களை போரில் வெற்றிகொள்ளப்பட்ட மூன்றாந்தார குடிமக்களாகவே பார்க்கிறது.

சிறீலங்கா அரசின் 2012 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 22, 944 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் படையினருக்கு 11,316 கோடி, கடற்படைக்கு 3,369 கோடி, விமானப் படைக்கு 2,296 கோடி, காவற்துறைக்கு 3,604 கோடி, சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 917 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக சுமார் 3,000 கோடி படையினரின் குடியிருப்பு மற்றும் நலன்புரி விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அத்துடன் இந்த படையினரின் நலன்புரி திட்டங்களுக்காக எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 1,500 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு கொடுக்கப்படும்.

இதே சமயம் மீள்கட்டுமான அமைச்சுக்கு வெறுமனே 48.1 கோடி ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதியுதவியோடு கட்டப்பட இருந்த 50,000 வீடுகளில் 50 வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

எனவே புலம்பெயர் தமிழர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழீழ போராட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் கையில் கொடுத்துள்ளார் என்று கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லிக் கொண்டிராமல் எமது மக்களுக்கு உருப்படியான உதவிகளைச் செய்ய புலம்பெயர் மக்களும் அவர்களைப் பிரதிநித்துவப் படுத்தும் அமைப்புக்களும் முன்வரவேண்டும். வெறும் ஆரவார அரசியலால் பயன் இல்லை.

திருமகள்

http://www.seithy.com/breifNews.php?newsID=52506&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.