Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் காயமடைந்த பொதுமக்களுக்கும் உடலில் செல்துகள்கள் உள்ள மாணவர்களின் சிகிச்சைக்கும் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ananthan_s_Germ_Visit_0.jpg Ananthan_s_Germ_Visit_1-150x150.jpg Ananthan_s_Germ_Visit_2-150x150.jpg

Ananthan_s_Germ_Visit_0.jpg

எங்களது இளமைக்காலத்தில் தெற்கின் தலைவர்கள் எங்களுக்களித்தபடிப்பினைகளை எண்ணி எங்களால் பெருமிதம் கொள்ள முடியவில்லை. இதனை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவிக்க நேர்ந்ததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன்.கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாறறும் போதே வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு:

மேதகு.ஜனாதிபதி அவர்கள், வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்து ஆற்றிய உரையிலிருத்து ஆரம்பிக்க விரும்புகிறேன். ஜனாதிபதி அவர்கள் தனது இளமைக்காலத்தில் தெற்கின் முன்னோடித் தலைவர்கள் சிலர், தனக்களித்த இலங்கையின் விழுமியங்கள், பாரம்பரியங்களை எண்ணிப் பூரிப்படைவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் துரதிஸ்டவசமாக எங்களது இளமைக்காலத்தில் தெற்கின் தலைவர்கள் எங்களுக்களித்த படிப்பினைகளை எண்ணி எங்களால் பெருமிதம் கொள்ள முடியவில்லை. இதனை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவிக்க நேர்ந்ததையிட்டு நான் மிகவும் கவலைப்படுகிறேன். எங்களது இளமைக் காலம் முழுவதும் அச்சத்திலேயே கழிந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும், எங்களால் நம்பிக்கையான எதிர்காலமொன்றை தரிசிக்க முடிந்திருக்கவில்லை. எங்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வியுடன்தான் எங்களது இளமை நாட்கள் கழிந்திருக்கின்றன. இன்னும் அந்தக் கதை தொடர்வதுதான் இந்த நாட்டின் துரதிஸ்ட அவலம்.

இன்று ஒரு கொடிய யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இவ்வாறானதொரு யுத்தம் வேர் கொண்டதற்கான, ‘அரசியல்நிலம்’ அப்படியே பேணிப் பாதுகாக்கப்படுவதுதான் துரதிஸ்டவசமானது. எந்த அடக்குமுறை அரசியல், கடந்த காலத்தின் இரத்தம் தோய்ந்த வரலாற்றின் பின்னனியாக இருந்ததோ, அந்தக் காரணங்களை களைந்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை நோக்கிச் சிந்திப்பதற்கானதொரு சூழல் இன்னும் தெற்கில் உருவாகவில்லை. இதுதான் இந்தத் தேசத்தை அரித்துக் கொண்டிருக்கும் அரசியல் புற்றுநோய.; உடலியல்சார் புற்றுநோய்க்கு நிரந்தரத் தீர்வில்லை. ஆனால் இந்த நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் அரசியல் புற்று நோய்க்கு நிட்சயம் ஒரு தீர்வுண்டு. இன்றைய ஆட்சியாளர்கள் மனம்கொண்டால் அது முடியாத ஒரு விடயமுமல்ல. ஆனால் இன்றும் தெற்கில் நம்பிக்கைதரும் அப்படியான, எந்தவொரு அசைவையும் எங்களால் கானமுடியவில்லை. இப்போதும் தமிழ் மக்களை இரண்டாம்தரமாகக் கருதும் தெற்கின் மனேபாவத்தில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. மீண்டும் ஒரு புற்றுநோய் அரசியலை, வளர்த்துச் செல்வதற்கான அடிப்படைகளே தூபமிடப்படுகின்றன.

ஜனாதிபதி அவர்கள், தனதுரையில் – அனைத்து சமூகங்களுக்குமிடையில் ஜக்கியத்தினை ஏற்படுத்துவதற்கான நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வெற்றியை தந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் இந்த நாட்டின் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஒன்று உருவாக வேண்டும் என்பதே எங்களதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்காக அரசுடன் கைகோர்ப்பதற்காக நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றோம். ஆனால் இன நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தைகளில் இல்லை. அது செயலால் நிருபீக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தகையதொரு நல்லணிக்கமே ‘அர்த்தமுள்ள நல்லிணக்கமாக’ அமையும். ஆனால் இன்று பேசப்படும் நல்லிணக்கம் என்ற சொல்லிணைப்பு, வெறுமனே ஒரு அரசியல் சித்து விளையாட்டாகவே எங்களுக்குத் தெரிகிறது. பின் போர் (Pழளவ றுயச) சூழலில் ஒரு அர்த்தமுள்ள இன நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டுமென்னும் அக்கறை, இன்றைய பலம்மிக்க ஆட்சியாளர்களிடம் உண்மையிலேயே இருக்கின்றதா என்ற சந்தேகமே இன்று எம்மிடையே நிலவுகின்றது.

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கூடாகக் கூட, அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான அஸ்திவாரமாகமொன்றை போட்டிருக்க முடியும். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பாதுகாப்பு படை உறுப்பினர்களின், பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 750 முன்மொழியப்பட்டிருக்கிறது. அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான கடன் திட்டத்திற்கென ரூபா 1700 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது, மேலும் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுக்காக 14000 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்து நடுவீதியில் நிற்கும் எங்கள் மக்களுக்கான விசேட திட்டமொன்றை ஆரம்பித்து, அவற்றுக்கான நிதியையும் முன்மொழிந்திருக்கலாம். இன்று பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கென ஒரு திட்டத்தை முன்மொழிந்திருக்கலாம். இன்று எங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யுத்த ரணங்களுக்கு ஆட்பட்டு, போதிய மருத்துவ வசதியில்லாமல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

யுத்தத்தின் இறுதிநாட்களில் மரணித்த நமது உறவுகளின் இறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைக் கூடப்பெறமுடியாதவர்களாக இன்று எமது மக்கள் இருக்கின்றனர். வன்னி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்கள்;. இன்று யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர். அவர்களுக்கென பிரத்தியேகமான திட்டமொன்றை உள்ளடக்கியிருக்கலாம். இந்த வரவு செலவுத் திட்டம் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டிருக்குமாயின் அவை, ஒரு ‘அர்த்தமுள்ள நல்லிணக்கத்தின்’ அடிப்படையாக அமைந்திருக்கும். அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்திருப்பின் – உலகம் உண்மையிலேயே இலங்கையை ‘ஆசியாவின் அதிசயமென’ அண்ணார்ந்து பார்த்திருக்கும், என்பதை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் இன்று, ஒரு யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறோம். யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளை – எவ்வாறு முரண்பாட்டிற்கு பின்னரான நிலைமைகளாக (Pழளவ உழகெடiஉவ ளஉநயெசழை) மாற்றுவது, என்பதுதான் இன்று இந்த நாடு எதிர்கொண்டிருக்கும் பிரதான சவால். இந்துச் சவாலை எதிர்கொள்ளுவதற்கான முதல் படியே, ஆட்சியாளர்கள் தங்களது நல்லிணக்கத்தின் மீதான ஈடுபாட்டை நிரூபிப்பதில்தான் தங்கியிருக்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தை அத்தகையதொரு நல்லிணக்கம் நோக்கிய அரசியலுக்காக பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் இந்தப் பலம்பொருந்திய ஆட்சியாளர்களின் மனதில் அப்படியெதுவும் தோன்றிவிடவில்லை.

நாம் இலங்கை பற்றி வெளிநாடுகளிடம் குறை கூறுவதாக சில நன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர். அந்த நன்பர்கள் இந்த நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றுக்கு, இம்மியளவும் குறையாத பற்றையும் ஈடுபாட்டையும் நாமும், இந்த இலங்கைத் திருநாட்டின் மீது கொண்டிருக்கிறோம் – என்பதை இந்த மேன்மை தங்கிய சபையில் தெரிவித்துக் கொள்வதில் நான் பெரு மகழ்ச்சியடைகின்றேன்.

நாங்கள், எங்களுடைய மக்களின் அபிலாசைகள் குறித்து சர்வதேச சமூகத்திடம் குறிப்பிட்டு வருவது உண்மைதான். இதனை நாங்கள் இரகசியமாகச் செய்யவில்லை. இன்று, இதனை விமர்சிக்கும் தெற்கிலுள்ள நன்பர்கள், ஏன் நாங்கள் அவ்வாறு போக நேர்ந்தது? என்பதை சிறிது சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்த நாட்டில் எங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருந்தால் ஏன் சர்வதேச சமூகத்திடம் நாங்கள் முறையிடப் போகின்றோம். எங்களது கோரிக்கைகள் இந்த நாட்டுக்குள் செவிசாய்க்கப்பட்டிருந்தால், நாங்கள் ஏன் அயலவர்களிடம் செல்லப் போகிறோம்? அத்தகையதொரு நிலையை நோக்கி, எங்களைத் தள்ளிக் கொண்டிருப்பவர்கள் யார்? எனவே அத்தகைய நன்பர்கள், எங்களைத் திட்டித்தீர்ப்பதில் காலத்தை செலவிடுவதற்கு மாறாக, இத்தகையதொரு நிலைமை ஏற்படுவதற்கான வேர்க்காரணங்களை கண்டு, அவற்றை அகற்ற முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று யுத்தம் நிறைவுற்று இரண்டரை வருடங்களாகின்றன. ஆயினும் எங்கள் மக்களுக்கான, நீதியான நியாமான அரசியல் தீர்வுக் கோரிக்கைக்யொன்றை, பரிசீலிக்கக் கூடிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை நிரூபித்திருக்கவில்லை. இந்த நிலைமை எதனைக் காட்டுகின்றது? நாங்கள் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைதியாக இருப்பது? எங்கள் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை எங்களால், புறம்தள்ளிச் செயற்பட முடியாது. ஆகவேதான் எங்கள் மக்களது கோரிக்கைகளை சர்வதேசத்திடம் முன்வைத்து வருகிறோம்.

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல. அவ்வாறான வாதங்கள் எதனையும் நாம் ஆதரிக்கவும் இல்லை. நாங்கள் கோருவதொல்லாம் – ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் – ஒன்றுபட்ட வளமானதொரு இலங்கையை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்புவதற்கான விண்ணப்பம். கடந்த காலத்தில் இந்த அரசியல் விண்ணப்பம் புறம்தள்ளப்பட்டதன் விளைவாகவே, நாம் கசப்பான வரலாற்றுக் காலகட்டமொன்றை கடந்து வரவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருந்தோம். இதனை இந்த சந்தர்ப்பத்திலாவது நீங்கள் புரிந்துகொள்ள முன்வர வேண்டும். கடந்த காலத்தில் மாறி மாறி ஆட்சியமைத்த தெற்கின் தலைவர்கள் இதனை விளங்கிக் கொண்டிருந்தால், இந்த அழகிய தீவு இரத்தக் கறையால் அலங்கோலமாகியிருக்காது. விலைமதிப்பற்ற இன்நாட்டின் உயிர்கள் வீணாகியிருக்காது.

இந்த மேன்மை தங்கிய சபையில், மீண்டும் மீண்டும் கடந்தகால வரலாற்றை அழுத்திப் பேச வேண்டி ஏற்பட்டது குறித்து, நாம் மகிழ்சியடையவில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றின் தவறுகளை தொடர முற்படும் போது, அதனை நினைவுபடுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் ஆளாகின்றோம். இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நாங்கள் பேசும் போதெல்லாம், நாங்கள் நாட்டைப் பிரிக்கச் சதி செய்வதாகவே சில தெற்கு நன்பர்கள் கூறிவருகின்றனர். உண்மையில் இந்த நாட்டை பிரிவினைவாத அரசியலுக்குள் தள்ளியவர்கள் யார்? நாங்களா?

எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அரசியல் விண்ணப்பம் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், 1968இல் சுயாட்சிக் கழகம் என்னும் அமைப்பொன்று தோற்றம் பெற்றிருக்காது. பின்னர் 1976இல் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதுதான் ஒரேயொரு வழி, என்னும் அரசியல் நிலைப்பாடும் தோற்றியிருக்காது. இப்படியொரு அரசியல் நிலைப்பாடு மிதவாத அரசியல் தலைமைகளின் மத்தியிலிருந்து எழாமல் இருந்திருந்தால், தனிநாடு கோரும் ஆயுத விடுதலை இயக்கங்களும் தோன்றியிருக்காது. 2009 வரை இப்படியொரு பேரழிவுக்குக் காரணமான யுத்தமும் நீடித்திருக்காது. நியாயமான கோரிக்கைகள் புறம்தள்ளப்பட்ட போதெல்லாம் தீவிரமான நிலைப்பாடுகளுடன் கூடிய அரசியல் அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. யார் இதற்குப் பொறுப்பாளிகள்? சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தரப்பு நியாயங்களைச் சொல்லுவதற்குப் பதிலாக, தமிழர் பிரச்சினையை தெற்கின் கட்சி அரசியல் போட்டியாகச் சுருக்கியவர்கள் யார்? இந்தத் துரதிஸ்டவசமான நிலைமையே, தமிழர் அரசியல் அரங்கிலும் தீவிர நிலைப்பாடுகள் தலைதூக்கக் காரணமாகியது. ஜனநாயக ரீதியான தலைவர்களின் கோரிக்கைகளை நீங்கள் புறம்தள்ளியதன் காரணமாக, மக்களும் தீவிர நிலைப்பாட்டாளர்களின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஏனெனில் மக்கள் முன் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை. அவ்வாறான நிலைப்பாடுகளின் ஊற்றுக்கண் எது என்பதை பரிசீலிக்குமாறே கோருகின்றோம். நாம் இதனை வெறுமனே தமிழ் மக்களின் நலனுக்காக மாத்திரம் கூறவில்லை, மாறாக இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நல்வாழ்வையும், அமைதியையும் கருத்தில் கொண்டே குறிப்பிடுகின்றோம்.

யுத்தம் நிறைவுற்றிருந்தாலும், யுத்த காலத்தின் பிளவுநிலைப்பட்ட அரசியல் அப்படியேதான் இருக்கின்றது. ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தி வரும் விடயங்களே, அத்தகையதொரு பிளவுநிலைப்பட்ட அரசியல் தொடருவதற்கான காரணம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் கசப்பான வரலாற்றுக்கு, எந்தெந்த விடயங்கள் காரணமாக இருந்தனவோ, அத்தனை விடயங்களும் இப்போதும் தொடர்கின்றன. தமிழ் மக்களின் வாழ்விடங்களை, தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பு வலையத்துக்குள் வைத்திருப்பது. ஓர் அரசியல் இணக்கப்பாடு வருவதற்கு முன்னரே, அவசர அவசரமாக வடகிழக்கின் நிலங்களை பெரும்பாண்மை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது. காணி அதிகார எல்லைகளை மாற்றுவது. உயர் பாதுகாப்பு வலையங்கள் என்னும் பெயரில், தொடர்த்தும் மக்களின் குடியிருப்புகளை கையகப்படுத்தியிருப்பது. தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், சிங்கள அதிகாரிகளை நியமிப்பது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாதளவிற்கு அரசு சாரா நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்திருப்பது. இந்த நிலைமைகள் எவ்வாறு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்? ஆட்சியாளர்களின் இந்தச் செயற்பாடுகள், முன்னைய காலத்தையே நினைவுபடுத்துகின்றன. இது மீண்டும் இனக் குரோதங்களும் முரண்பாடுகளும் தலையெடுக்கவே வழிவகுக்கும்.

இந்தப் பிரச்சனைகளை நாங்கள் யாரிடம் முறையிடுவது? வேலியே பயிரை மேயும் நிலையென்றால் என்ன செய்ய முடியும். அயலவர்களிடம்தானே உதவியைக் கேட்க முடியும். நாங்களும் அதனைத்தான் செய்கிறோம். இந்த நாட்டின் இறைமையில் உரித்துடையவர்கள் என்ற வகையில், இந்த நாட்டிற்குள்ள சர்வதேச கடப்பாடுகளின் ஊடாக, எங்களது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இதில் எங்கள் பக்கம் என்ன தவறிருக்கிறது?

ஓவ்வொரு தேசத்திற்கும் வரலாற்றில் ஒரு தருணம் வரும். இப்போது அந்த அரிய தருணம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இலங்கையின் சுதந்திரத்திற்கு பிற்பட்ட அரசியல் எங்களைப் பிரித்ததே அதிகம். இதனை சில தெற்கின் முற்ப்போக்கான சிந்தனையாளர்கள் கூட ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மாறி மாறி ஆட்சியமைத்த தலைவர்களின் தவறுகள் மேலும் மேலும் அரசியல் நிலைமைகளை மோசமாக்கியது. இனப்பாகுபாட்டு நிலைமைகளை தீவிரப்படுத்தியது. ஒரு தலைமுறையே இனப்பிளவு அரசியலாலேயே வளர்க்கப்பட்டது. இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பை, வரலாறு இன்றைய ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்திருக்கிறது.

இதனைத் திறம்படப் பயன்படுத்தினால் உண்மையிலேயே இலங்கை அசியாவின் அதிசயமாகவே அமையும். தவறினால் தொடர்ந்தும் ஆசியாவின் அவலமாகவே வரலாற்றாளர்கள் குறித்துரைக்க நேரிடும்.

அப்படியொரு நிலைமை இந்தத் திருநாட்டிற்கு ஏற்பட்;டுவிடக் கூடாதென்பதே எங்கள் விரும்பம். அதற்காக உழைப்பதற்காக எப்போதும் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதற்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு, பலம்பொருந்திய ஆட்சியாளர்களான உங்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

இது யுத்த்திற்குப் பின் நடைபெறுகின்ற இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். இந்த நேரத்திலே, வரவு செலவுத்திட்டத்தினூடாகத் தங்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமென வன்னி மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். வன்னி முழுதும் இடம்பெயர்ந்திருக்கும் அந்த மக்களுக்கான எந்த அடிப்படை வசதியும் செய்துகொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்காலிக கொட்டகைகளிலே வாழுகின்ற அவர்கள் இன்று பருவ மழையினால் மிகவும் துன்பப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், பெரும்பாலான வன்னி விவசாயிகள் முள்ளிவாய்க்கால் போரிலே தங்களுடைய உழவு இயந்திரங்களைப் பறிகொடுத்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்துள்ளார்கள்.

இனங்களுக்கிடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இருந்திருந்தால் அவர்களுடைய உயிரிழப்புக்கள் மற்றும் உழவு இயந்திரங்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தினூடாக நஷ;டஈட்டினை வழங்கியிருக்க முடியும். ஆனால் அப்படி எதையுமே இதில் காண முடியவில்லை. மாறாக, உயிரழந்தவர்களின் மரண அத்தாட்சிப் பத்திரங்களை எடுப்பதற்குச் செல்கின்றபோது அவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள். நஷ;டஈட்டைப் பெறுவதற்காக மரண அத்தாட்சிப் பத்திரங்களை எடுத்துக்கொண்டு தங்களுடைய பிரதேச செயலகங்களுக்குச் சென்றால் அங்கே கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மொத்தத்தில் அவர்களுடைய உயிர், உடைமை இழப்புக்களுக்கு நஷ;டஈடு வழங்குவதில் இந்த அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. இது எங்களுக்கு மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது.

மேலும், தங்களுடைய உடலில் இருக்கின்ற குண்டுகள் மற்றும் செல்களின் துகல்கள் அகற்றப்படாத நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வன்னியில் இருக்கின்றனர். நான் அண்மையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்திற்குச் சென்றிருந்தேன். அந்த மகா வித்தியாலயத்தில் மாத்திரம் போரினால் பாதிக்கப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஐந்து மாணவர்களை பாடசாலை துணைஅதிபர் என்முன் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார். அவர்களில் சிலருக்கு தலையில் செல்களின் துகள்களும், இன்னும் சிலருக்கு முள்ளந்தண்டிலே குண்டுகளின் துகள்களும் இருக்கின்றன. இப்படியாக குண்டுத்துகள்கள் அவர்களின் உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் இருக்கின்றன. ஆகவே போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்குத் தங்களுடைய உடலின் பாகங்களில் இருக்கின்ற செல்களின் துகள்களை அகற்ற வேண்டிய தேவையுள்ளது. இத்தகைய உபாதைகளினால் மாணவ மாணவியர் தங்களது கல்வியைத் தொடர முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். ஆகவே அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து இந்த வரவு செலவு திட்டத்தில் எத்தகைய நிதியொதுக்கீடும் செய்யப்படவில்லை.

மொத்தத்தில் இந்த வரவு செலவுத் திட்டமானது வடக்கு-கிழக்கு மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான எத்தகைய திட்டத்தையோ நிதியொதுக்கீட்டையோ கொண்டிருக்கவில்லை என்றுகூறி இந்த வரவு செலவுத்திட்டத்தை நிராகரிக்கின்றேன்.

பூணும் நாளாக இருக்கும். அப்படியொரு நாளை, நீங்கள் அனைவரும் இணைந்து எங்களுக்காக தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

http://www.tamilthai.../newsite/?p=528

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.