Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது

Featured Replies

... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ...

சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது

chandrakanthan+photo.jpg வணக்கத்துக்குரிய (?)

சந்திரகாந்தன் please share with your friends please share with your friends please share with your friends please share with your friends

"நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் தற்பொழுதும் உறுப்பினராக இருக்கும் சந்திர காந்தன் கடந்த இரண்டு வருடங்களாக , தமிழீழ கொள்கையை நிராகரித்து செயல்படுவதும் , சிறீலங்கா அரசுடன் இணைந்து வேலை செய்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ."

TGTE+advisory+comitee.png மதி "உறை" குழு பட்டியல்

ஹவானா கொமடி மன்னாதி மன்னனும் அவரது நடிகர்களும் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் ? முகத்திரை கிழிகின்றது அவ்வளவு தான் ! தமிழீழம் வேண்டும் ஆனால் வேண்டாம்

பசிக்குது ஆனால் பசிக்க இல்லை --

குளிருது ஆனால் குளிர இல்லை !

என்பது போல ல்லவா இருக்கின்றது இவர்கள் பேச்சு .

உடனடியாக விசர் ஆசுப்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய கேசுகள் !

சந்திரகாந்தன் நாடுகடந்த அரசிற்கு வழங்கிய ஆலோசனைகளில் சில (ஆதாரம் கீழே உண்டு )

  • எமது குறுகிய தேசியவாதம் ....
  • சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை....
  • எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் ....
  • கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம்
  • நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.....

Please circulate among your friends , raise this question to TGTE members.நாடு கடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் கனடாவைச் சேர்ந்த அருட்தந்தை சந்திர காந்தன் . இவர் சொல்லுகின்றார். "எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். "(இந்த சந்திர காந்தனின் சகோதரர் தான் இலண்டனில் நாடுகடந்த அரசின் பிரமுகர் டாக்டர் வசந்தன் . )

<a href="http://4.bp.blogspot.com/-WfmBdONxBHs/TtQWww_c1UI/AAAAAAAAAwg/oZJ_p9Of4Ss/s1600/santhirakanthan+p2.png" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;">santhirakanthan+p2.png நேர்டோ இணையத்தில்

உள்ள நாடு

கடந்த அரசு ஆலோசகர்

சந்திர காந்தனின்

படம்

  • சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்து கொள்ளவேண்டும்.

  • இவர் சிறீலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி உடனும் இரண்டு வருடங்களாக சேர்ந்து இயங்குகின்றார் .

  • இந்த விடயத்தை கே.பி இன் நேர்டோ இணையத்தில் நேரடியாகவே பார்க்கலாம் . பிரதி கீழே உண்டு .
  • நாடுகடந்த அரசுக்கு நிதி சேகரிக்கும் GTV தொலைக் காட்சியும் நாடுகடந்த அரசும் இதற்கு பதில் தருமா ?

Please circulate among your friends , raise this question to TGTE members.

நாம் முன் வைக்கும் தீர்வு

  • தற்போதைய நாடுகடந்த அரசு நிர்வாகம் முழுமையாக மாற்றப்படவேண்டும் .
  • புதிய யாப்பு இயற்றப்படவேண்டும்
  • சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடுகடந்த அரசின் யாப்பு
    http://tamilwhiteele...-post_3498.html

Please circulate among your friends , raise this question to TGTE members.

chandrakanthan+photo.jpgsanthirakanthan+p1.png மக்களே கேழுங்கள் ? இந்த யோக்கியதையில் பணம் கேட்க புறப்பட்டு விட்டார்கள் .கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன் வழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி :

Dr. Joseph Chandrakanthan, Bioethicist, Centre for Clinical Ethics. 15.08.2010

http://tamil.nerdola...2-33&Itemid=225

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் தேசிய அணியாக, ஒரு சமூகமாக எம்மைச் சுற்றி எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் நாம் உருவாக்கிய அரசியல் மாயையில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

எமது குறுகிய தேசியவாதம் எமக்கும் எமது சந்ததிக்கும் அளப்பரிய உயிரிழப்புகளையும், அவய இழப்புக்களையும், சொல்லணாத் துன்பத்தையும், வறுமையiயும், பொருள் இழப்பையும், சொத்து இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும்.

இதே வேளை தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம் என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால் மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் ஓர் பண்பாட்டு வழமை உள்ளது. அது என்னவெனில் பிணக்குகளால் பிரிந்து நிற்கும் குடும்பங்கள் பல பெரும் பாலும் திருமணத்தில் அல்லாமல் மரணச் சடங்கிலேயே ஒன்று சேருகின்றன. தமிழர் சிங்களவர்கள் ஆகிய இரு பாலாருமே பாரிய சாவுகளையும் முடிவில்லாத மரணச் சடங்குகளையும் கொலைகளையும் அங்கவீனங்களையும் சிதைவுகளையும் பாரிய அழவிலான தனியார் சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் இழந்து உள்ளோhம். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எமது அன்புக்குரிய ஆண் பெண் குழந்தைகளையும் இழந்து, நாம் பேணிப் பாதுகாத்த எமது பண்பாட்டு, மத பெறுமானங்களையும் அழுக்காக்கி விட்டோம். இந்த நிலை இனிமேலும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. எமது மண்ணிலே போரின் இறுதி நாட்களில் நடந்து முடிந்த பாரிய மனித அவலத்தை இந்த சுதந்திர உலகம் எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். இவர்களுடைய நல் எண்ணத்திலும், தர்மத்திலும் நாம் தங்கியிருக்க முடியாது. எவ்வளவோ விடையங்கள் முக்கியமானவை. ஆனால் அவற்றையும் விட இன்னும் எவ்வளவோ விடயங்கள் அவசியமானவை. பண்பாட்டுரிமை, மொழியுரிமை, பிரதேச உரிமை என்பன அனைத்து இனங்களுக்கும் முக்கியமானவை. ஆனால் அவற்றிலும் பார்க்க உணவு, உடை, சுகாதாரம், இருப்பிடம் என்பன அவற்றையும் விட மிக மிக முக்கியமானவையாகவும் பின்போடப்பட முடியாதவையுமாகும். நேர்டொ (Nநுசுனுழு) அமைப்பு எமது எதிர்பார்புகளை பூர்த்தி செய்யக்கூடிய சேவைகள் செய்யாவிடினும் அதை யாராவது ஆரம்பித்து வைக்கவேண்டும். அனாதை சிறார்களுக்கும், விதவைகளுக்கும் உணவளிக்கவும், அகதி முகாம்களில் சிறுவர்களுக்கு கல்வி வழங்கவும், தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ளவர்களை சென்று பார்க்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்பார்க்க முடியாது. எமது சிறார்கள் தான் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு நாம் முதற்படி எடுத்தாக வேண்டும். எமது சார்மனைக்கதிரை விமர்சனம் சிறைச்சாலைகளில் இருப்பவர்களுக்கும், முகாம்களில் இருப்பவர்களுக்கும் எந்த நன்மையையும் தரப்போவதில்லை. உண்மையான மனிதாபிமானச் சேவை செய்பவர்கள் ஊடாகத் தான் நாம் அவர்களைச் சென்றடையலாம். கலாநிதி சந்திரகாந்தன் அவர்கள் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்திலும், சமய கற்கை நெறியிலும் பேராசிரியராக உள்ளதுடன், யாழ் பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவ இஸ்லாமிய கற்கைநெறி பீடத்தின் ஸ்தாபகருமாவர்.

http://tamilwhiteele...-post_9730.html

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.