Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள சமூகங்கள் ஒன்றுபட முடியுமா? - சிங்கள எழுத்தாளர் சிரால்லக்திலக்க

Featured Replies

சிங்கள தமிழ் சமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக் கண்ணினால் பார்க்கின்றன. கடந்த 8 தசாப்தங்களாக (1925லிருந்து இன்று வரை) இந்த இரு சமூகங்களும் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களே இதற்கு காரணமாகும். இவை அனைத்தும் உண்மையான அனுபவங்களாகும்.

நாம் கடந்த 30 ஆண்டுகளாக சமூக இனத்தவரைக் கொல்லும் போரில் ஈடுபட்டிருந்தோம். ஒருவர் மற்றவன் மரணத்தினை விரும்பிய சூழல் அது. அதாவது சமூக இனத்தின் துன்பம் குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தோஷமடைந்தனர். இது குறித்து இந்த இரு சமூகங்களில் எந்த சமூகம் அதிர்ச்சியடைய வில்லை. மீண்டும் போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் காணப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச பெரிய மாநாடு ஒன்றினை நடாத்தி 13க்கு அப்பாலா இப்பாலா என்ற வினாவினை எழுப்பியுள்ளார். தமிழ் அரசியலில் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களினதும், இந்தியர்களினதும் ஆதரவைக் கோரியது போன்று தற்போது அமெரிக்காவை துதிக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியற் சுதந்திரம் மற்றும் அரசியல் குறித்தான பிரச்சினைக்கு இவையெல்லாம் தீர்வல்ல, என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த இரு இனங்களினதும் அரசியல், சமூகக் கட்டமைப்புகள் இதயபூர்வமாக கலந்துரையாடுவதே இன்று செய்யப்பட வேண்டிய முதல் பணியாகும். நல்லிணக்கம் என்பது இதுவாகும்.

இந்த நல்லிணக்கத்தின் அடிப்படை நடவடிக்கையாக சமூக உளவியல் நல்லிணக்கப்பாடு ஏற்பட வேண்டும். இதற்கு முதல் சிகிச்சையாக கடந்த 80 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட காரணமான சிறு பான்மையினமெனும் தாழ்வுச் சிக்கல் சரிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த இரு இனங்களும் இரட்டை சிறுபான்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளதாகவே கருதுகின்றோம். (Double Minority Syndrome) இலங்கையில் சிங்கள இனம் பெரும்பான்மையினமாக இருந்த போதிலும் தனக்கு அரசியல் போட்டியாக கருதும் தமிழர்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியாவில் ஒரு சிறுபான்மை இனம் என்று சிங்களவர்கள் சிந்திக்கத் தலைப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் தமிழர்கள் தெற்காசியாவில் பாரிய சனத் தொகையின் பங்காளர்கள் ஆயினும், இலங்கையில் தாம் ஒரு சிறுபான்மையினம் என்று கருதி கவலை அடைகின்றனர். இங்கு இரு கற்பனைகளின் மோதல்களுக்கும் காரணம் அவநம்பிக்øகயாகும். இந்த அவநம்பிக்கை தமது பாதுகாப்பு குறித்தான நோயைத் (Security Syndrome) தூண்டியுள்ளது.

துரதிருஷ்டவசமாக இந்த நிலைமையை நீடிக்கச் செய்ய நாட்டின் அரசியல் கலாசாரம், அரசியலமைப்பு, ஜனநாயக நடைமுறைகள், அரசாட்சி, அபிவிருத்தி மற்றும் வளப்பகிர்வு என்பன தூண்டுகோலாக உள்ளன. இந்த நிலைமையை மேம் போக்காக மாற்றுவது என்பது கூட இன்று கடினமான விடயமாக இருக்கின்றது.

ஓரினத்திற்கு வழங்கப்படும் சலுகைகள் மற்ற இனத்தின் அழிவுக்கு காரணமாகிவிடும் என்ற நம்பிக்கை இங்கு முதன்மையாக உள்ளது. இது எமது நாட்டைச் சேர்ந்த இரு இனங்களுக்கு மட்டும் உரித்தான சிறப்பு விடயமல்ல. இவ்வாறு இரட்டைக் கற்பனையில் தவிக்கும் இனங்கள் பல உண்டு. இதில் குறிப்பாக சில உதராணங்களைக் கூற முடியும். வட அயர்லாந்தில் வாழும் ஐரிஷ் இனத்தவர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் உள்ள பிரச்சினையை இவ்விடயத்தில் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். எவ்வாறாயினும் அவர்களின் வீணான கற்பனையை பெல்பாஸ்ட் சமாதான உடன்படிக்கையினூடாக ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்ள அவர்களால் முடிந்துள்ளது. மற்ற முக்கிய உதாரணமாக கம்போடிய இனத்தவர்களையும் வியட்நாமியர்களையும் கூற முடியும்.

அதேபோன்று போலந்து இனத்தவர்களையும், ஜேர்மன் இனத்தவர்களையும் குறிப்பிட முடியும். இந்த உளவியல் நோய் (Mental Syndrome) இவ்வாறு பல இனத்தவர்களுக்கும் உள்ளது. அதனால் நாம் இவ்விடயம் பற்றி அதிர்ச்சி அடையக்கூடாது. மாறாக அதற்கான தீர்வினைத் தேடுவதே அவசியமாகும். குறிப்பாக போட்டி மனப்பாங்கு சிந்தனைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிங்கள தமிழ் மக்களிடையே பண்டைய காலத்தில் இணக்கத்தன்மை இருந்த விடயத்தினை சமூகத்திற்குள் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக தமிழர்கள் தமது சங்க வரலாறுகள் குறித்தான ஆணவத்தினையும், சிங்களவர்கள், தமிழர்கள் , தம்மை ஆக்கிரமிக்க வந்த இனம் என்ற சிந்தனையையும் மறந்து விட வேண்டும். சிங்களவர்களின் சிரேஷ்ட சிங்கள இலக்கண நூலான இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிதத் என்ற நூலில் உள்ள இலக்கண விதியினை விளக்கப்படுத்திக்கொள்ள வீரசோழியம் என்ற தமிழ் நூல் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது பெரும்பாலான தமிழர்களினால் மறக்கப்பட்ட விடயமாகும். தமிழ் சிங்கள மொழிகளுக்கிடையே இவ்வாறான பிணைப்பு அன்று காணப்பட்டது.

எமது பௌத்த நூலான “விசுத்தி மார்க' நூலின் ஆசியர் ஆந்திராவினைச் சேர்ந்த புத்தகோச தேரராவர். இவ்வாறு “அபிதர்மாவத்தாரய', “ஜினாலாங்காரம', “புத்தவங்ச' அஷ்ட கதைகளில் ஒன்றான மதுரநத்த விலாசினிய என்பனவற்றை சோழ நாட்டில் இருந்து வருகைதந்த புத்ததந்த தேரர் எழுதியிருந்தார். புத்த தர்மம், சாசனம் சோழ ஆக்கிரமிப்பினால் வீழ்ச்சி அடையும் போது அவற்றை சோழ மற்றும் கலிங்க தேசத்தில் இருந்து வருகை தந்த பிக்குகளே நடவடிக்கை எடுத்தனர்.

இதன்படி, சோழ நாட்டில் இருந்து ஆக்கிரமிப்புகள் மட்டும் வரவில்லை. மதம், மொழி என்பனவற்றைக் காப்பாற்றிக் கொள்ள சோழ நாட்டவர்கள் சிங்களவர்களுக்கு உதவியுள்ளனர். தமிழ் சமூகத்திற்கும் சிங்களவர்களினால் இவ்வாறான உதவிகள் கிடைத்துள்ளன. இவற்றையெல்லாம் அறியாமல் நாம் பேசுவது கவலைக்குரிய விடயமாகும்.

http://akkinikkunchu.com/new/

நல்ல அயலவர்களாக வாழ்வோம். இந்த இரு இனமும் பிரிந்து வாழுவதே இரண்டு இனத்திற்கும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் தரும்.

சிங்களம் துப்பாக்கி முனையில், மிகப்பெரிய இராணுவத்தை தமிழர் பகுதிகளில் வைத்துக்கொண்டு - அபிவிருத்தி பற்றியோ இல்லை ஒற்றுமை பற்றியோ கதைப்பது ஏமாற்று வித்தையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.