Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டு நிறுவனப் பணிப்பாளர் மனோ விக்கிரமநாயக்கா திடீர் மறைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊட்டகத் துறையினருக்குப் பெரும் அதிர்ச்சி - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்

mano%20Vickirama_CI.jpg

கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டு நிறுவனப் பணிப்பாளர் மனோ விக்கிரமநாயக்கவின் திடீர் மறைவு ஊட்டகத்துறையினருக்குப் பெரும் அதிர்ச்சி தரும் இழப்பாகும்.சக்தி சிரச நிறுவனங்களின் ஆரம்பத்துக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் முக்கிய பணியாற்றியவர் அவர் .

தனியார் ஊடக நிறுவனங்களின் பணி நெருக்கடி நிறைந்த காலகட்டங்களைத் தாண்டும் போதெல்லாம் மனோ போன்றவர்களின் மனோதைரியமான சேவை மனப்பாங்கும் ஆத்மார்த்தமான ஈடுபாடும் தான் ஏனைய ஊடகங்களையும் திடப்படுத்தின என்றால் அது உயர்வு நவிற்சியன்று.

சிரச சக்தி என்ற எழு(எழுச்சி மிக்க) ஏழு ஊடகங்களின் இக்கட்டான காலகட்டங்களில் அதன் பணியாளர்களுக்கும் தலைமைக்கும் தக்க பணியாளனாக நின்று உற்சாகம் அளித்தவர் மனோ விக்கிரமநாயக்க அவர்கள்.அன்னாரது இந்தத் தலைமைத்துவப் பண்பு இன்று நேற்றுப் பிறந்த ஒன்றல்ல. சாதாரண கணக்காளராக மகராஜா நிறுவனத்தில் இணைந்த அவர் ஒரு கூட்டு நிறுவனப் பணிப்பாளராக உயரும் வரையில் மகராஜா சகோதரர்களுடன் அவர்களின் நம்பிக்கையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர் என்பதை இந்த நிறுவனத்தில் அதன் உயர் மட்டங்களுடன் பழகியவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் மட்டுமன்றி அரசியல் வட்டங்களிலும் அறியப்பட்ட உண்மையாகும்.

1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடைபெற்ற பொழுது மகராஜா நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கல் வைபவம் நடை பெறும் பொழுது அதன் வளர்ச்சி பற்றிக்

காண்பிக்கப்படும் விவரணப் பதிவில் ஜூலை எரிப்புகளின் வடுக்கள் மகராஜா நிறுவனத்தை எப்படிப்பாதித்தன என்பதை காண்பிப்பது வழக்கம். அவ்வளவு தூரத்துக்கு அக்கலவரம் இந்த நிறுவனத்தின் உயிர்ப்பை பாதித்திருந்தது. மனோ விக்கிரமநாயக்க அவர்கள் இக்கலவரத்தின் பின்னரும் நிறுவனத்தின் தலைமையுடன் அதன் மீள் உயிர்த் தெழுதலுக்குத் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றியமை இன்று இலங்கையின் ஊடக நேயர்கள் பல உண்மைச் செய்திகளைக் கேட்கவும் உலகத்தரங்களுடனான கேளிக்கை நிகழ்சிகளைப் பார்க்கவும் கேட்கவும் கூடிய ஒரு மகத்தான ஊடக நிறுவனம் ஒன்றைப் பெறுவதற்கு வழி சமைத்தது .தனியார் ஊடக பரிணாமத்தின் சரித்திரத்தில் மனோவின் பங்கு என்றும் பேசப்படும்.-

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.