Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகா வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு செய்ய முடியாதாம்

Featured Replies

சரத் பொன்சேகா வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு செய்ய முடியாதாம்! - பந்துல ஜெயசேகர கருத்து!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமே சிறையிலடைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா முறைப்பாடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது நிலைப்பாடு தொடர்பாக சரத் பொன்சேகா வெள்ளை மாளிகைக்கு முறைப்பாடு செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சரத் பொன்சேகாவின் துணைவியார் அனோமா பொன்சேகா மற்றும் அவரது மகள்கள் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவதற்கான விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்து வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுள்ளோம். சரத் பொன்சேகாவின் மகளான அப்சரா பொன்சேகா தனது கடிதத்தில் 'நீதி என்ற விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீடு எமக்குத் தேவையாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்கோவின் முறையீட்டை கரிசனையுடன் கவனத்தில் கொண்டிருக்கக் கூடிய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் அனோமா பொன்சேகா தனது மேன்முறையீட்டை வழங்கியிருக்க முடியும். பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள அமெரிக்காவைப் போலல்லாது, அலரி மாளிகைக்குச் செல்வதற்கு அதிகம் செலவாகாது.

எதிர்க்கட்சித் தலைவரை அனோமா பொன்சேகா பின்பற்றி நடக்கக் கூடாது. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வெளிநாட்டு அரசாங்கத்தை நாடவும் கூடாது. உலகிலுள்ள தலைவர்களில் மக்கள் இலகுவில் தொடர்பு கொள்ளக் கூடிய தலைவராக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளார்.

சரத் பொன்சேகா தனது மருமகளின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அனுமதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டதை மறக்கக்கூடாது. சிறையிலடைக்கப்படும் கைதிகள் அவர்களின் மிகவும் நெருங்கிய குடும்ப உறவினர்களின் மரணச் சடங்கிற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவது வழமையாகும். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உடல்நலம் குன்றிய தாயாரைப் பார்ப்பதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை. அவரது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்கு அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. பின்னர் நீதிபதியின் சம்மதத்துடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் அவர் தனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்தார்' எனவும் பந்துல ஜெயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.pongutham...60-349228f0a9d2

  • தொடங்கியவர்

பொன்சேகாவின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றது அமெரிக்கா

சரத் பொன்சேகாவின் வழக்கு விசாரணைகள் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகார பிரிவின் பேச்சாளரும், ஊடக ஆலோசகருமான எமிலி ஹோர்ன், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து குறுகிய காலத்தில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சரத் பொன்சேகாவை முதல் முறையாக சிறையில் அடைத்ததில் இருந்து அவர் பற்றிய வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து மிக நெருக்கமாக அவதானித்து வருகிறோம். சரத் பொன்சேகாவின் வழக்குத் தொடர்பாகவும், பேச்சுச் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி தொடர்பாகவும் நீண்டகாலமாக அமெரிக்கா கரிசனை எடுத்து, கவனித்து வந்துள்ளது.

பொன்சேகா வழக்கை தொடர்ந்தும் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கம் அனைத்துக் குடிமக்களுக்கும் உரிய உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகார பிரிவின் பேச்சாளரும், ஊடக ஆலோசகருமான எமிலி ஹோர்ன், தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிராந்திய நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புக்களை முறியடிப்பேன் என்று மகிந்த ராஜபக்ஷ சூழுரைத்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=89854

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.