Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்கள் ஒற்றுமையின்மையின் சின்னமல்ல! ஒற்றுமையின் சின்னம் என்பதை உரத்துக் கூறுங்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamils-Asso150articleseithy.jpg

தமிழர்கள் ஒற்றுமையின்மையின் சின்னமா? என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த 60 வருட கால தமிழர் அரசியலில் எமது தோல்விக்கு இது தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.

பேராசிரியர் க.சிற்றம்பலம் கடந்த வியாழன் (1.12.2011) இரவு தொலைபேசியில் உரையாடிய பொழுது ஒரு கருத்தினை முன்வைத்தார். இந்த முறையும் கொழும்பு தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றி விடுமா? என்ற கேள்வியை முன்வைத்தார்.

கொழும்பு தலைமைகள் பற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தந்தை செல்வா இருந்த காலத்தில் வன்னியசிங்கம் அவர்களே தமிழர் விவகாரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தார்.

பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியன மறைந்த வன்னியசிங்கம் அவர்களாலேயே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டன. ஆனால், அவர் இறந்த பிறகு கொழும்பு தலைமைகள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. மறைந்த திருச்செல்வம் போன்றவர்கள் இதில் பெரும் பங்காற்றினர்.

1980 களில் இருந்து பேராசிரியர் வில்சன், கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோரும் பங்கு வகித்தனர். 1981 ஆம் ஆண்டு தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டு மாவட்ட அபிவிருத்திச் சபையை அப்போதைய தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் பலரும் ஏற்றுக் கொள்வதற்கு இந்த கொழும்புத் தலைமைகளே காரணமாக அமைந்திருந்தன.

மொத்தத்தில் முழுத் தமிழினத்தையும் கொழும்பு தலைமைகள் பேரினவாத பொறிக்குள் விழுவதற்கு வழிவகுத்து விட்டன என்று கூறிய அவர் இதிலிருந்து தமிழினம் மீள முடியாது உள்ளது என்றும் தெரிவித்தார். இன்றைய சூழ்நிலையில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் செல்வாக்கு செலுத்தும் கொழும்புத் தலைமைகள் தமிழினத்தை மீண்டும் ஒரு பொறிக்குள் ஆழ்த்தி விடுமோ? என்ற அச்சம் அடிமட்ட தமிழ் மக்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் க.சிற்றம்பலம் அவர்களின் அச்சம் ஆதங்கம் புரிகின்றது. இவருடைய இந்த அச்சம் ஆதங்கம் ஒட்டுமொத்த தமிழினத்தின் அச்சமாகவும் ஆதங்கமாகவும் உள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.

இன்றைய சமகால அரசியல் நிலைமையையும் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற ஒரு இக்கட்டான நிலையையும் கருத்திற் கொண்டே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது குழுவை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணத்துவம் பெற்றவர்களை பேச்சுவார்த்தைக் குழுவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இப் பத்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அத்துடன் பேச்சுவார்த்தை தொடர்பான கலந்துரையாடலை நிபுணத்துவ ரீதியில் கொண்டு நடத்துவதற்கு தேவையான அறிவு சார் குழுவினை நியமித்து கலந்துரையாட வேண்டும் என்றும் மேற்படி குழுவின் ஆலோசனை பெற வேண்டும் என்றும் தமிழ் மக்களின் சார்பில் இப் பத்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இன்று பேராசிரியர் க.சிற்றம்பலம் அவர்களின் அச்சம் ஆதங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான வழியில் பேச்சுவார்த்தையை கொண்டு நடத்துகின்றதா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. பலவீனமான நிலையிலுள்ள தமிழ்ச் சமூகத்தை சிங்களத் தரப்பு தோண்டி வைத்துள்ள பொறிக்குள் சிக்க வைக்குமாக இருந்தால் மீட்சி என்பது இப்போதைக்கு இல்லை என்றாகி விடும்.

மீண்டும் ஒற்றுமை குறித்து சிறிது பார்ப்போம். தமிழர்கள் ஒற்றுமையின்றி தொடர்ந்தும் இருப்பது எமக்கான சவக்குழியை நாமே விரைந்து வெட்டுவதற்குச் சமமானதாகும்.

எம்மிடம் இருந்த பலத்தை ஏற்கெனவே தொலைத்து விட்டு நிற்கின்றோம். அந்தப் பலத்தின் பலம், பலவீனம் எதுவாகவும் இருக்கலாம். அந்தப் பலத்தைக் கொண்டிருந்தவர்களும் விட்ட பிழைகள் எமக்கான பலம் தொலைந்து போகவும் காரணமாக இருக்கலாம். ஆனால், இன்று இருந்த பலத்தைத் தொலைத்து விட்டு செல்லாக் காசாக நிற்கின்றோம்.

கடந்த காலங்களிலும் சரி இன்றும் சரி பேனவாத சிங்களத் தலைமைகளுடன் கைகோர்த்து நிற்பவர்களால் தமிழினத்தை கரை சேர்க்க முடியுமா? என்ற கேள்விக்கு அவர்களே பதில் கூற வேண்டும். பேனவாதிகளின் கை தட்டல்களுக்காகவும் அவர்களை குஷிப்படுத்துவதற்காகவும் தெரிவிக்கப்படும் வார்த்தைகள் தமிழ் மக்களை கரைசேர்க்கப் போவதில்லை.

இன்றைய நிலைமையில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் ஓரணியில் திரண்டு நின்று செயற்படுவதுமே இன்றைய தேவையாகும். முள்ளிவாய்க்கால் போருடன் புலம்பெயர் தமிழர்களை கலங்கரை விளக்காக இலங்கையில் வாழ்கின்ற ஒட்டுமொத்தத் தமிழினமும் கருதியது. ஆனால், புலத்தில் நடைபெறுவதைப் பார்க்கும் பொழுது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு கானல் நீராகி விடுமோ? என்ற அச்சமே இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போரின் போது இலட்சோபலட்சம் மக்களைக் காப்பாற்றி விட புலம்பெயர் மக்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டு பேரினவாத சக்திகள் கலங்கின, மிரண்டன. ஆனால், கண்டு பேரினவாத சக்திகள் கலங்கின, மிரண்டன. ஆனால், இன்று அதே பேரினவாத சக்திகளின் வலைக்குள் புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விலைபோய் விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலை தொடருமாக இருப்பின் பேரினவாத சக்திகள் மீண்டும் ஒரு வெற்றியை இலகுவில் பெற்று விட புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் துணைபோனதாக அமைந்து விடும்.

தனிப்பட்ட குரோதங்கள், இயக்க மோதல்கள், முரண்பாடுகள் தமிழ் இனத்திற்கெதிரான பகையாக மாற்றப்படுவது இன அழிவுக்கே வழிவகுக்கும். அந்த வகையில் இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் விடுதலைப் புலிகள் இல்லையென்ற நிலையிலும் தமது ஒற்றுமையை கைவிடத் தயாராக இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைக்கோர்த்துப் பயணிக்கும் செய்தியை தென்னிலங்கைக்கு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளனர் என்பதை புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழர் விவகாரம் குறித்து சிங்களத் தலைமைகளும் தென்னிலங்கையின் பெரும்பாலான சக்திகளும் ஒரேகுரலில் பேசுகின்றன. இதுபோல் தமிழினம் தமது வேறுபாடுகளை புறந்தள்ளி ஒரே குரலில் பேசுவதற்கு முன்வர வேண்டும்.

தமிழர்கள் ஒற்றுமையின்மையின் சின்னமல்ல! ஒற்றுமையின் சின்னம் என்பதை உலக அரங்கிற்கும் தென்னிலங்கைச் சக்திகளுக்கும் தமிழினம் உரத்துக்கூற முன்வர வேண்டும்.

-வி.தேவராஜ்-

http://www.seithy.com/breifNews.php?newsID=52756&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.