நேற்று பிரான்சில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்றிருந்தேன். எனக்குப் பின்னால் ஒரு தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய ஒருவர் வாக்களிப்பதற்காக கையில் தாங்கும் பொல்லுடன் நின்றிருந்தார். மறைவான இடத்தில் வாக்கை உறையுள் வைக்கும் அறைக்குள் சென்றவர் சொல்லை பயன்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும் படார் என்று விழும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்து போது வெளிப் பக்கமாக உள்ள சுவரில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வருவது தெரிந்தது. உடனடியாக அங்கு நின்ற அதிகாரிகளால் அவசரப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதானவருக்கு இதுவே கடைசி விழுதலாக இருக்க வாய்ப்புண்டு.
இந்த நிலையில் வீட்டுக்கு வந்து எனது உறவினர் நண்பர்கள் சிலருடன் பேசியபோது யாரும் வாக்களிக்க செல்லாதது தெரிந்தது.
ஒரு வயதானவர் தனது வயதான இயலாத நிலையிலும் தனது நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக வாக்களிக்க வருவதும் எனது இனம் தனது நாட்டின் மீதும் பற்றற்று தனக்கு உயிர் பாதுகாப்பு தந்து அரவணைத்த நாட்டின் மீதும் பற்றற்று மிக மிக சுயநலமாக வாழ்தல் என்பது எங்கே சென்று முடியப் போகிறது??? 😭
By
விசுகு ·
Archived
This topic is now archived and is closed to further replies.