Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற அரச நியமனங்களுக்கு எதிராக த.தே.கூ எதிர் வரும் 14 ஆம் திகதி எதிர்ப்பு ஊர்வலம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mannar-SL-051211_150.jpg

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம் பெற்று வரும் முறைக்கேடான முறையிலான அரச நியமங்களுக்கு எதிராக எதிர் வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நடாத்தவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பிலும், இப்பேரணி நடாத்துவது தொடர்பிலும்,இப்பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கும் அவசரக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் நகர சபையில் இடம் பெற்றது.

Mannar-SL-051211_001.jpg

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மற்றும் அதன் உப தலைவர்,உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறையற்ற விதத்திலான அரச வேலைவாய்ப்புக்கள் உட்பட மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மேற்படி எதிர்ப்பு ஊர்வலம் நடாத்துவது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

Mannar-SL-051211_002.jpg

இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக முறையற்ற விதத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட விவசாய ஆராட்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் பாரிய அநீதிகள் இடம் பெற்றுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

Mannar-SL-051211_003.jpg

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 14 ஆம் திகதி எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் முறைக்கேடான முறையிலான அரச நியமனங்களை உடன் நிறுத்தக்கோரி அரச அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.

இதற்கும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் எதிர் வரும் தினங்களில் மன்னார் மாவட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Mannar-SL-051211_004.jpg

Mannar-SL-051211_005.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=52792&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.