Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் சைக்கிள் காப்பில்.. தமிழர்ளை ஏமாற்றிய கருணாநிதி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணையில் தமிழன் உணர்ச்சிப் பிளம்பாகக் கிடக்க.. கூடன்குளம்.. அணு மின் நிலையத்தில் அவன் உணர்வை கட்டுப்படுத்தி.. கட்சி ஆதாயத்திற்காக.. அறிக்கையும் விட்டுவிட்டார் கருணாநிதி.

மேற்கு நாடுகள் எல்லாம் அணு மின் நிலையங்களை எதிர் வரும் 50 ஆண்டுகளில் இல்லாமல் செய்வது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்க.. இந்தியாவோ.. அதன் வட மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை.. மற்றும் பிற தென் மாநிலங்களில் அமையப் பெறாத அணு மின் நிலையங்களை தமிழகத்தில் மட்டும் அமைத்து துரிதமாக செயற்படுத்த தொடங்கி இருக்கிறது.. இதனை தமிழர் விரோதக் கட்சியான சோனியா காங்கிரஸ் துரிதமாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

தமிழகம் நீண்ட கடல் வெளிகளையும்.. வயல் வெளிகளையும்.. மேட்டு நிலங்களையும் கொண்ட பிரதேசம். இங்கு மீளக் கூடிய இயற்கை வளத்தில் இருந்து மின்சாரம் பெறுவதை விடுத்து ஆபத்தான மீள முடியாத இயற்கை வளங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற ஹிந்திய ஆளும் வர்க்கத்தோடு.. 8ம் வகுப்பே படிக்காத கருணாநிதியும்.. கட்சி அரசியல் ஆதாயங்களுக்காக.. செயற்படுவது தமிழர்களையும் தமிழர் பிரதேசங்களையும்.. அழிவின் விளிம்பில் நிறுத்தி வைத்துள்ளது.

இதனை ஈழத்தமிழர்கள் சமூகமும் கண்டிப்பதில்லை. ஆனால்.. தமிழகத்தில் ஒரு அணு உலையில் கசிவு ஏற்பட்டால் அதன் பாதிப்பை.. உணர.. ஈழத்தமிழர்களுக்கு அதிக நேரம் எடுக்காது என்பதையும் அவர்கள் உணர வேண்டும். இந்தத் திட்டங்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை.. வெறும் தமிழகத்தின் பிரச்சனையாக நோக்காமல்.. பிராந்தியப் பிரச்சனையாகவும் கருத வேண்டும். இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் வேண்டும்.

ஏலவே ஹிந்திய அரசு.. இந்த அணு மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து கடல் வழியாக சிங்களத்திற்கு அனுப்பி வைக்க திட்டங்களையும் தீட்டி உள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

==================================================

பின்னணிச் செய்தி:

கூடன்குளம் அணுஉலை குறித்து பிரதமர் அறிவிப்பு குறித்து கலைஞர் பேட்டி.

கூடன்குளம் அணுஉலை பணிகள் தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார் என்றால், அனைவரையும் கலந்துகொண்டுதான் சொல்லியிருக்க முடியும், அப்படி சொல்லியிருந்தால், அந்த கருத்து வரவேற்கத் தக்கதாக அமையும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

கூடன்குளம் அணுமின் நிலையம் இரண்டு வாரங்களில் செயல்பட தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பதற்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், இந்த பிரச்சனையில் ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்று சொல்லியிருந்ததையும், ஆனால் அது கூட்டப்படாமல் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது என்றும் கூறினார்.

மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு இரண்டு அமைச்சர்கள் இடங்கள் காலியாக இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், பதவி பெறுவதில் திமுக அவசரப்படவில்லை என்றார்.

http://www.nakkheera...ws.aspx?N=67234

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.