Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: சிறிதரன் எம் பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sritharan.TNA_150.jpg

குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து, உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மக்களுக்கு விரோதமாக, அவர்களது அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு தேவைகளுக்கு முரணாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ளாது. குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் ஒரு போதும் கூட்டமைப்பு அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாறுபடப் போவதில்லை.

அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தியும், விட்டுக்கொடுத்தும் எதுவித பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. எமது உரிமைகளை நாங்கள் தானே கேட்க வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் இழுபட்டாலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.

பேச்சுவார்த்தை மூலமாக எமக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். இதில் நாம் மிகத் தெளிவாகவுள்ளோம். எமது மக்களை மீண்டும் துன்பகரமான வாழ்க்கையைத் தொடர நாம் விரும்பவில்லை.

பேச்சு வார்த்தையின் போது தமது பொறுமையைச் சோதிக்கக் கூடாது என அரசு கூறுகிறது. எமது மக்களின் உரிமைகள், தீர்வுகள் பற்றி நாங்கள் தானே பேசவேண்டும். இதன்போது உள்நாட்டு ரீதியாக, வெளிநாட்டு ரீதியாக, இராஜதந்திர ரீதியாகச் சில தடங்கல்கள் வரலாம். அதுபற்றி நாம் மௌனம் காப்பதாக பொதுமக்களும் சில ஊடகங்களும் எண்ணலாம். எனினும் இத்தகைய மௌனிப்புகளைக் கொண்டு கூட்டமைப்பு தன் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக எண்ணக்கூடாது.

வடக்குகிழக்கு இணைப்பில்லாது வடமாகாண சபைத்தேர்தல் நடந்தால் அதில் கட்சி ரீதியாகப் போட்டியிடக் கூடாது. தேசியக்குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனச் "சிவில்' சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.

2012 இல் இந்தத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் சிவில் சமூகத்துடன், துறைசார் வல்லு நர்களுடன் கலந்துரையாடி என்ன அடிப்படையில் போட்டியிடுவது என்பது பற்றி பேசுவோம்.

தமிழ் மக்களுக்கு விரோதமான சக்திகளின் கைகளுக்கு வடக்கு மாகாணம் சென்றுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருக்க வேண்டும். எம்மை அழிப்பவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவருமே இறக்கவில்லை என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்காகவேனும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடத்தான் வேண்டும். இதுபற்றி சிவில் சமூகத்துடன் கலந்துரையாடப்படும்.

அரசுடன் பேசும் விடயங்களைச் சில தந்திரோபாயங்களுக்காக நாம் வெளியே சொல்லவில்லை. அரசு சிலவற்றைச் சொல்வதனால் சம்பிக்கரணவக்க உள்ளிட்ட பலர் அங்கு பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றனர். இனவெறியையும் ஊட்டுவார்கள். ஆனாலும் அரசுடன் பேசிய எந்த விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சிறையிலுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் உள்ளடங்ய பட்டியலை வெளியிடுவதாக அரசு கூறியது. அதேவேளை பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்கிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார். இது இரண்டுமே நடக்கவில்லை. மாறாக வெலிக்கடை, போகம்பரை, அநுராதபுர சிறைச்சாலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள் எனப் பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

http://www.seithy.co...&language=tamil

ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற புலம்பெயர் தமிழர்களும் அயராது உதவவேண்டும். இன்னுமொரு குருதி சிந்தலுக்கு இடம் தரக்கூடாது !

குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.

(முகநூல் ஊடாக)

நேற்று வடமராட்சி கிழக்கு பகுதிக்கு ஒரு குடும்ப விழாவிற்கு சென்று தனது குடும்பத்தினருடன் திரும்பிக்கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர் சதுப்பு நில காடுகளை அண்டி பூத்து குலுங்கிக்கொண்டிருந்த கார்த்திகைப்பூக்களை குழந்தைகள் விரும்பிய காரணத்தால் பறித்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார். குழந்தைகள் அக்கம் பக்த்திலுள்ள குழந்தைகளுக்கும் கொடுத்து விளையாடியிருக்கிறார்கள்.

வீதியால் சென்று கொண்டிருந்த இனப்படுகொலை அரசின் இராணுவம் அதைக்குழந்தைகளிடமிருந்து பறித்தது மட்டுமல்ல எனது நண்பர் இராணுவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மிரட்டி அனுப்பப்பட்டிருக்கிறார். "நினைவு அழிப்பு" அரசியலில் தீவிரமாக இருக்கும் இனப்படுகொலை அரசின் இராணுவத்திடமிருந்து இது எதிர்ப்பார்க்ககூடியதுதான். ஆனால் அதை விட முக்கியமானது நண்பர் இது குறித்து கூறிய சில விடயங்கள். ஒரு இனத்தின் உளவியல் தொடாந்து எப்படி கட்டமைக்கப்டுகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம் அவை. முறையே 6, 8 வயதுடைய தனது இரு பெண் குழந்தைகளும் அந்த பூக்களை திருப்பி வேண்டித்தருமாறு இரவிரவாக ஒரே அழுகையாம். ஒரு கட்டத்தில் தனது இளைய மகள் "எனக்கு பூ வேண்டாம் அந்த ஆமிக்காரங்களை அடி அப்பா" என்று கூறியபோது அவளது குரலில் இருந்த தொனி தனக்கு ஆயிரம் கதைகளை கூறியதாக குறிப்பிட்டார். அந்த குழந்தைகளுக்கு விளங்கியதா இல்லையா தெரியவில்லை " ஒரு காலத்தில நாங்கள் அடிக்க ஓடினவங்கள்தான்.. அப்பாவால இப்ப முடியாது. நீங்கள்தான் வளர்ந்து அவங்களுக்கு அடிக்க வேணும.." என்றேன்.. என்றார்..

தொடர்ந்து "எப்படி எனது வாயிலிருந்து இந்த வார்த்தை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் எனது கண் முன்னாலேயே எனது குழந்தைகள் இரண்டும் வரிப்புலி சீருடையுடனும் துப்பாக்கியுடனும் உலாவுவது போன்ற பிரமை என்னையறியமால் எனது மனம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது" என்றார்.

தமிழரின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்றவர்களை பயங்கரவாதம் என்றவரையறைக்குள் வைத்து உலகமே சேர்ந்து நின்று அழித்துள்ளது. இப்போதைய நிலை அதைச் செய்ததிற்கும் தற்போதைய நடைமுறைக்குமான இடைவெளியை உலகம் புரிந்து கொண்டிருக்கிறது.

சிறிதரன் எம் பி யினதும், அகூதா குறிப்பிட்ட அந்தத் தகப்பனினதும் பொறுமையிழந்த சொற்களல்ல இவை. அதனுள் இருக்கும் எதிர்பார்ப்பையும் உலகம் புரிந்து கொள்ளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.