Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் அமையவுள்ள பொறியியல் பீடத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை! – ஒதுக்கப்பட்டதாக டக்ளஸ் பம்மாத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

duglas-150x150.jpg

கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடக்கட்டுமானப் பணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடனடி நடவடிக்கை காரணமாகத் திறைசேரியில் 100 மில்லியன் ரூபா நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இதுவரை எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட நிர்மாணப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது.

இந்த நிலையில் 100 மில்லியன் ரூபா நிதியை திறைசேரி ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கென திறைசேரியால் எதுவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக நிதித்திட்ட வரைபுகள் வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிதி கிடைத்ததும் கிளிநொச்சியில் பொறியியல் பீடம் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

யாழ். பல்கலைக்கழத்தில் பல பட்டப்படிப்புகள் பீடங்கள் உள்ளபோதும் பொறியியல் பீடம் இன்றுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகும் வடபகுதி மாணவர்கள் தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழகங்களிலேயே இந்தப் பட்டப்படிப்பை மேற்கொண்டுவருகின்றனர். கிளிநொச்சியில் இது ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் வட பகுதி மாணவர் பயனடைவர் என்று கூறப்பட்டது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்துக்குரிய செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்கான 32 மில்லியன் ரூபா நிதியில் 100 மில்லியன் ரூபாவைத் திறைசேரி பல்கலைக்கழகத்துக்கு வழங்கவென ஒதுக்கியுள்ளது.

யாழ். பல்கலைக்கழத்தில் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய கட்டட நிர்மாணப்பணிகள், திருத்த வேலைகள், இயந்திரவியல், இலத்திரனியல் வேலைகள், புத்தகங்கள் கொள்வனவு எனப் பலவற்றுக்கென 327 மில்லியன் ரூபா நிதி செலவாகியுள்ளது. இதில் 100 மில்லியன் ரூபா நிதியே தற்போது பல்கலைக்கழகத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிதி பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது என்று மேலும் கூறப்பட்டது.

http://www.saritham.com/?p=45858

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக வட்டாரம் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கவும்.

அவர் கட்டாயம் ஒதுக்கியிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.