Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா பொறுப்புக்கூறத் தவறினாலேயே அனைத்துலக விசாரணைப் பொறிமுறை – அமெரிக்கா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

white-house-washington.jpg

போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் தலையிடக் கோரும் மனு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டது.

வெள்ளை மாளிகையின் இணையத்தளம் மூலம் இந்தக் கோரிக்கை மனுவில் 5000இற்கும் அதிகமானோர் ஒப்பமிட்டிருந்தனர்.

இந்தக் கோரிக்கை மனுவுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனிதஉரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் மைக்கல் எச்.போஸ்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.

சிறிலங்காவில் அண்மைய மோதல்களின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்டமீறல்களுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பான உங்களின் கவலைகளுடன் அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.

அத்துடன் சிறிலங்காவில் எல்லாக் குடிமக்களுக்குமான நியாயமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு, ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும் உறுதியாக இருக்கிறது.

அமெரிக்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிறிலங்காவில் அண்மைய மோதல்களின்போது இடம்பெற்ற, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து 2009 மற்று்ம் 2010ம் ஆண்டுகளில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டு அறிக்கைகளை தயாரித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பதை இந்த இரண்டு அறிக்கைகளிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

MJஅத்தகைய மீறல்களுக்கு தனிப்பட்ட பொறுப்புக்கூறுதல் நல்லிணக்கத்தின் முக்கியமானதொரு பகுதி என்று நாம் நம்புகிறோம்.

இதுதொடர்பான சிறிலங்காவின் அர்த்தமுள்ள சொந்தமுயற்சிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த மோதல்களால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதில் முன்னேற்றத்தை அளிக்கும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 2011 செப்ரெம்பர் கூட்டத்தொடரின் போது, சிறிலங்கா தேசிய மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருந்தோம்.

போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு – பக்கம்சாராத வகையில் சிறிலங்கா துரிதமாகவும் நம்பகமாகவும் பதிலளிக்க வேண்டும் என்றும் வெளிப்படுத்தியிருந்தோம்.

காணாமற்போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினருக்கு வெளிப்படுத்துவதற்கும், மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கவும் சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்த விவகாரங்களில் ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து சிறிலங்கா ஆக்கபூர்வமான முறையில் பணியாற்ற முன்வர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு்க் கொள்வோம்.

இறுதியாக, சிறிலங்கா அரசாங்கம் இந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்கு அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமைய பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், பொறுப்புக் கூறுவதற்கு சிறிலங்கா அரசை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம்.

அதேவேளை, அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டமீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதில் தமக்குள்ள அடிப்படைப் பொறுப்பை உள்ளக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு அரசாங்கத்தினால் தமது கடமையை நிறைவேற்றாத அல்லது நிறைவேற்ற விரும்பாத சூழ்நிலையில் தான் அனைத்துலக பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்க முடியும்.

சிறிலங்கா விவகாரத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதற்கு நன்றி.“ என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.tamilthai...newsite/?p=2910

இதில் கையொப்பம் இட்ட அனைத்து யாழ் உறவுகளும் பெருமைப்படவேண்டிய விடயம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=92450

இந்த திரியை ஆரம்பித்த வீணாவுக்கும், அதை மேலே வைத்து உதவிய நிர்வாகத்திற்கும் கூட நன்றிகள்.

நான் கூட அப்போது இதில் கையொப்பம் போட்டபோது என்னவோ இதுவும் ஒருமுயற்சி இது சரிவருமோ அல்லது மற்றைய முயற்சிபோல் இதுவும் என்று எண்ணினேன் ஆனால் இப்போதுதான் புரியுது இது வெற்றிக்கான முதற்படி தொடர்ந்து முன்னேறுவோம் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.