Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிகளால் நிறைந்திருக்கும் யாழ்ப்பாணம்

Featured Replies

ஒலிகளால் நிறைந்திருக்கும் யாழ்ப்பாணம் – பிரித்தானிய ஊடகரின் கடிதம்

இவ்வாறு எழுப்பப்படும் ஒலிகளை அடையாளங்கண்டு கொள்வதற்கான எனது அனுபவம் மிகக் குறைவானதே. ஆனால் எனது அயலவர்கள் இதில் கூடிய அனுபவம் கொண்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சில மணியொலிகளைக் கேட்கும் போது மட்டுமே தமது வீடுகளை விட்டு மிகவேகமாக வெளியில் வருவார்கள்.

இவ்வாறு பிரித்தானிய ஊடகமான Guardian Weekly தனது ‘Letter from’ பத்தியில் தெரிவித்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தில் இருந்து அதன் செய்தியாளர் Lynda Gill எழுதியுள்ளார்.

Jaffna-Vendors-own-ring-tones.jpg

அதன் விபரமாவது,

உலகில் இணையவழி வணிகச் செயற்பாடுகள் நடைபெறும் அதேவேளையில், யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வணிகச் செயற்பாட்டு முறைமை ஒன்று இன்ப அதிர்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது.

அதாவது யாழ்ப்பாணத்தில் இச் செயற்பாடானது சற்று வித்தியாசமானதாக உள்ளது. காலை 5.30 மணிக்கு துவிச்சக்கரவண்டியின் முதலாவது மணியோசையைக் கேட்கக்கூடியதாக இருக்கும். துவிச்சக்கர வண்டியில் வரும் பாற்காரர் இரும்பால் செய்யப்பட்ட பழைய மத்திலிருந்து பாலை எடுத்து வீட்டுப் பெண்கள் வைத்திருக்கும் போத்தல்களிலும், பாத்திரங்களிலும் பகிர்ந்து வழங்குவார்.

இதனைத் தொடர்ந்து பாண் விற்கும் வண்டி எரிச்சலை ஊட்டக் கூடிய இசையை எழுப்பியவாறு தெருவிற்குள் நுழையும். அதாவது டா ட டா என மீண்டும் மீண்டும் அவ்வண்டி சத்தத்தை எழுப்பும். சிறிய தெருவொன்றிற்கு எவ்வளவு பாண் தேவை என்பதைப் பார்த்தால் நீங்கள் உண்மையில் ஆச்சரியமடைவீர்கள்.

பாண் வண்டியின் சத்தம் அடங்கி சற்று நேரத்தின் பின்னர், கொஞ்சம் வித்தியாசமான, உரத்த ஒலி எழுப்பியவாறு வருகின்ற ஐஸ்கிறீம் வண்டியைக் காணலாம். அநேகமாக இது பாடல்களை ஒலிபரப்பியவாறு வீதிகளில் நுழைவதைப் பார்க்கலாம். பாண் வண்டியுடன் போட்டிபோடும் விதமாக ஐஸ்கிறீம் விற்பவர் தனது வண்டியில் ஒலி பரப்பப்படும் பாடலின் ஒலியை அதிகரித்த வண்ணம் வருவதைக் காணலாம். இது பாலியல் ரீதியாக கவர்ச்சி மிக்க பாடல்களாக அமைந்திருக்கும்.

செவிப்பாறைகள் அதிரும் விதமாக வீதிகளில் வலம் வரும் இவ்வாறான வணிக வண்டிகளின் ஒலிகளின் பின்னர், மீன்விற்பவர் தனது கையில் வைத்திருக்கும் சாதனத்தின் மூலம் ஒலி எழுப்பியவாறு வீதிகளில் நுழைவார்.

அவரது துவிச்சக்கரவண்டி மிகவும் பழமையானதாகவும் உறுதிமிக்கதாகவும் அமைந்திருக்கும். ஆனாலும் மீன்விற்பவரால் எழுப்பப்படும் ஒலி சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்திருக்கும்.

இவரது வருகையை அறிந்து கொள்ளும் வீட்டுப் பெண்கள் உடனடியாக அவரைச் சூழ்ந்துகொள்வார்கள். சிறந்த விலையில் சிறந்த மீனைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பெண்கள் தமது அயலவர்களை முழங்கையால் இடித்துத் தள்ளியவாறு முண்டியடித்துச் செல்வார்கள்.

மீன் விற்பவரிற்கும் வீட்டுப் பெண்களுக்கும் இடையில் பேரம் பேசல் இடம்பெறும், அதைத் தொடர்ந்து விட்டுக்கொடுப்புக்கள், மீள்சமரசம் என்பன இடம்பெற்ற பின்னர் மீன் விற்பனை ஆரம்பமாகும்.

இவரைத் தொடர்ந்து மரக்கறி வியாபாரி வீதிக்குள் நுழைந்து கொள்வார். மரக்கறி வியாபாரி மரத்தாலான தனது பழைய மாட்டு வண்டியில் வியாபாரத்தில் ஈடுபடுவார். இவர் புதிய மரக்கறிகளை விற்பனை செய்வார்.

அதிகாலையில் ஆரம்பித்து ஒரு பகற் பொழுது முழுமையும் வயது சென்ற பல வியாபாரிகள் பல்வேறு பொருட்களை விற்பதற்காக தமது பழைய துவிச்சக்கரவண்டிகளில் வீதி வீதியாகச் செல்வதைக் காணலாம். இவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவார்கள். அதாவது துவிச்சக்கர வண்டிகளைத் திருத்திக் கொடுப்பார்கள். பத்திரிகைகள், மென்பானங்கள் போன்றவற்றை பல்வேறு வித்தியாசமான ஒலிகளை எழுப்பியவாறு விற்பனை செய்வார்கள்.

இவ்வாறு எழுப்பப்படும் ஒலிகளை அடையாளங்கண்டு கொள்வதற்கான எனது அனுபவம் மிகக் குறைவானதே. ஆனால் எனது அயலவர்கள் இதில் கூடிய அனுபவம் கொண்டுள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சில மணியொலிகளைக் கேட்கும் போது மட்டுமே தமது வீடுகளை விட்டு மிகவேகமாக வெளியில் வருவார்கள்.

பின்னர் பிற்பகலிலும் மீண்டும் பாண், ஐஸ்கிறீம் (மீண்டுமா?), மீன், மரக்கறி, நல்வாய்ப்புச் சீட்டுக்கள் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் குறிக்கும் ஒலிகளும், சமிக்ஞைகளும் எழுப்பப்படும்.

வழமையாக வானில் பொருட்களை விற்பனை செய்பவர்களும் வீதிகளில் வருவார்கள். ஆனால் சிலவேளைகளில் எல்லோரும் ஒன்றாக வருகின்ற சந்தர்ப்பங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தவேளைகளில் வான்களிலிருந்து எழுப்பப்படும் ஒலிகள் ஒன்றுடன் ஒன்று போட்டிபோட்டுக் கொள்வதாக அமைந்திருக்கும். இவை வீட்டுப்பெண்களை திகிலூட்டுவதாகவும் அமைந்திருக்கும்.

இவ்வாறான ஒலிகளின் மத்தியில் இசைநிகழ்வுகளும் உள்ளுர் கோயில்களில் மேற்கொள்ளப்படும் விழாக்களின் ஒலிகளும் ஒலிக்கும். எப்போதும் யாழ்ப்பாணத்தில் விழாக்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கும். இங்கே நிறையத் தெய்வங்கள் காணப்படுவதால் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றனர்.

இதனால் இவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தமது விழாக்களை ஒலிபரப்புவார்கள். எனது சகோதரி எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தபோது இங்கே என்ன சத்தம் என என்னிடம் வினவினார். அதற்குப் பதிலாக, பாண் வண்டி, ஐஸஸ்கிறீம் வண்டி, மீன்விற்பவர், கோயில், காகங்கள் என பல சத்தங்கள் கேட்கின்றன. அதில் எதைக் குறிப்பிட்டுக் கூறமுடியும் என நான் அவரிடம் கேட்டேன்.

இந்தச் சூழல் மிகவும் சத்தம் சந்தடியானது. இங்கு எழுப்பப்படும் ஒலிகள் எரிச்சலை உண்டுபண்ணுபவை. ஆனாலும் இதை விட்டு வேறு வழி எனக்குத் தெரியவில்லை. இணையவழி வணிகமா? வேண்டாம். நன்றி, இதைப் போல் வேடிக்கை எங்கே இருக்கின்றது?

-நித்தியபாரதி

http://www.eelamview...ffna-ring-tone/

Sri Lanka: saved by the bell

In Jaffna, you don't go to the supermarket. Vendors cycle to you, and they all have their own ring tones

http://www.guardian....i-lanka-vendors

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள், பனங்காட்டு நரிகளாக்கும்!

இந்தச் சந்தங்கள், இந்த ஊடகரைப் பாதித்தது போல, அப்போது எங்களைப் பாதிக்கவில்லை!

ஆனால், அண்மையில் சென்றிருந்த போதும், பாதிதத்தாகத் தெரியவில்லை!

நன்றிகள் அகூதா, இணைப்புக்கு!

பலாலியில இருந்து வித்தியாசமான ஒலிகளோட சிலதுகள் வெளிக்கிடும்போது உந்த ஊடகவியலாளர்மார் எல்லாம் எங்க போய் கிடந்தவை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.