Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் 650 ஏக்கர் நில ஆக்கிரமிப்பில் பாதுகாப்பு அமைச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mullaitivu-100x100.jpg

வடக்கில் தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமரப் படையினர் இன்னும் முழுமையாக அனுமதி வழங்காத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் ஆகக் குறைந்தது 650 ஏக்கர் காணியை முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தி இருக்கிறது. இவை அனைத்தும் அரச காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலாக பொதுமக்களுக்குச் சொந்தமான 260 ஏக்கர் காணிகளைப் பலவந்தமாகப் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.துணுக்காய் அமைதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் சுமார் 200 ஏக்கர் அரச காணி கொமாண்டோ ரெஜிமன்ட் படைப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தென்னியன்குளம் கிராம சேவையாளர் பிரிவில் 46 ஏக்கர் அரச காணி படையினரின் பாவனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கோட்டைகட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் அரச காணியை தமக்கு வழங்குமாறு படையினர் விண்ணப்பித்திருக்கின்றனர். எனினும் அந்தக் காணி மக்களின் மீள்குடியேற்றத்துக்குரிய காணி என பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டு அது படையினருக்கு வழங்கப்படவில்லை.

பழையமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவிலும் 50 ஏக்கர் அரச காணி படையினரின் பாவனைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தேறாங்கண்டல் பகுதியில் 250 ஏக்கர் அரச காணி 53ஆவது படைப்பிரிவின் பாவனைக்கு எனவும் அதே இடத்தில் மேலும் 50 ஏக்கர் அரச காணி 13ஆவது சிங்க ரெயிமன்ட் படைப்பிரிவினருக்கும் மேலும் 50 ஏக்கர் அரச காணி ஆயுதப் படையினரின் பாவனைக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று ஆலங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 112 ஏக்கர் அரச காணியைப் படையினர் கோரியுள்ளனர். எனினும் அது மக்களின் அனுமதிப்பத்திரக் (பொமிற்) காணி எனத் தெரிவித்து அதனை வழங்கப் பிரதேச செயலகம் மறுத்துவிட்டது.

அனிஞ்சியன்குளம் பகுதியில் பொலிஸ் திணைக்களத்துக்கு என 0.805 ஹெக்ரெயர் அரச காணி வழங்கப்பட்டுள்ளது. ஐயங்கன்குளம் பகுதியில் 0.78 ஹெக்ரெயர் அரச காணி பொலிஸாரின் பாவனைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அனிஞ்சயன்குளம் பகுதியில் மேலும் 25 பேர்ச்சஸ் அரச காணி புலனாய்வுப் பிரிவின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

துணுக்காய்ப் பிரதேச செயலகம் ஊடாகவே இந்தக் காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைப் பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேபோன்று முல்லைத்தீவுவின் ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை இனங்கண்டு அவற்றை படையினரின் பாவனைக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

அந்தந்த பிரிவு பிரதேச செயலகங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகரமாக அறியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இந்த நடவடிக்கை பல மட்டங்களிலும் பெரும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகள் எதிர்காலத்தில் என்ன தேவைக்காகப் பயன்படுத்தப்படப் போகின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அரச காணிகளைப் படையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரச அதிபர் பிரவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போர் முடிந்து வன்னியில் சிவில் நிர்வாகம் ஆரம்பித்த உடனேயே அந்தப் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளை அடையாளம் காணுமாறு மாவட்ட செயலகங்கள் ஊடாக அரசு உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அப்படி அடையாளம் காணப்பட்ட அரச காணிகளில் இருந்தே இப்போது படையினருக்கான ஒதுக்கீடுகளைப் பாதுகாப்பு அமைச்சுக் கோரி உள்ளது.

இராணுவம், கடற்படை, அதிரடிப்படை, பொலிஸ் ஆகியவற்றுக்கு முகாம்களை அமைக்கவும் படையினரிருக்கான தங்குமிடங்களை அமைக்கவும் என இந்தக் காணிகளைக் கையகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு படையினருக்கு ஒதுக்கப்பட்ட காணிகளின் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

http://www.saritham.com/?p=47011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.