Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக பொன்சேகாவுக்கு விடுதலை கிடைக்கலாம்! நிரந்தரமல்ல வீட்டில் சிறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath-jail150news.jpg

முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டத்தில் கூட உருவாகியிருக்கும் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக கொழும்பு வார இதழ் ஒன்று தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்துக்கு முன்னதாக பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படும் நிலை ஏற்படலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அவ்வாறு விடுதலை செய்யப்படவில்லை எனில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் எனவும் இராஜதந்திர வழிமுறைகளில் இலங்கையை அமெரிக்க எச்சரித்திருந்தது.

இதனையடுத்து சரத் பொன்சேகாவை தலைவராக கொண்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளரும் எம்.பி யுமான டிரான் அலஸ், ஜனாதிபதி மகிந்த ராஜபக்�சவைச் சந்தித்து பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பின்னணியிலேயே பொன்சேகாவின் குடும்பத்தினர் தன்னிடம் கேட்டுக் கொண்டால் அதனையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ராஜபக்�ச அறிவித்திருந்தார்.

பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டளவு கையயாப்பங்களைப் பெறுவதற் கான முயற்சிகளும், பொன் சேகாவின் மகள் மேற்கொண்டிருந்த முயற்சிகளும் அரசாங்கத்திற்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே பொன்சேகாவின் விடுதலை தொடர்பாக தன்னிடமே கோர வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பது பலனளிக்கப் போவதில்லை என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

இருந்த போதிலும் புத்தாண்டு பிறக்கும் போது பொன்சேகா நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப் படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு பொன்சேகாவும் அவரது குடும்பத்தினரும் மறுத்துவிட்டதால் எதிர்பார்த்தபடி புத்தாண்டு தினத்தில் விடுதலை சாத்தியமாகவில்லை. ஐ.தே.கவில் காணப்படும் உட்கட்சி மோதல்களும் பொன்சேகாவின் விடுதலை தடைப்பட்டமைக்கான ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இதே வேளையில் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவும் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தியிருக்கின்றார்.

பொன்சேகா விடுதலை செய்யப் பட வேண்டிய தருணம் வந்து விட் டது எனக் குறிப்பிட்ட அவர், பொன் சேகா இனியும் அரசுக்கான ஒரு அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிரு க்கின்றார். அவர் ஒரு யுத்த வீரர் என்பதால் நான் இதனைக் கூறவில்லை. அவரது உண்மையான குணாம்சத்தை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அவரை விடுவிக்குமாறு நான் கேட்டுள்ளேன். ஒரு சாதாரண குடிமகனாக எவ்வாறு வாழ்வது என்பது அவருக்கு தெரியாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கு முன்னதாக பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்படும் நிலை ஏற்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்பது உட்பட மேலும் சில நிபந்தனைகளுடன் அவரை விடுவிப்பதற்கு அரச தரப்பு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இருந்த போதிலும் அவ்வாறான விடுதலையைவிட தான் சிறையில் இருப்பது பரவாயில்லை என்ற நிலைப்பாடு பொன்சேகாவிடம் காணப் படுவதாகவும் தெரிகின்றது.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.