Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருஷ்ணா செய்ய வேண்டிய பணி

Featured Replies

கிருஷ்ணா செய்ய வேண்டிய பணி - மனோ கணேசன்

வட மாகாண சபை தேர்தலுக்கு நாள் குறிப்பதுடன் 13வது திருத்தச் சட்டமத்தை அமுலாக்குவதற்கு வழி செய்துவிட்டு போவதுதான், சிறிலங்காவுக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா செய்ய வேண்டிய வேலை. என ஜனநாயக மக்ககள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு. வீடுகள் கட்டி தருகிறோம், ரோடுகள் போட்டு தருகிறோம் என்ற வழமையாக வழங்கப்படும் வாக்குறுதிகள் தமிழ் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது. இதை இந்திய அரசாங்கம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிள்ளார்.

கிருஷ்ணாவின் வருகை தொடர்பில் மனோ கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய இன பிரச்சினைக்கு மாகாணசபை என்பது தீர்வு என்று நான் சொல்ல வரவில்லை. அதை அரசாங்கமும், வடக்கு கிழக்கின் தமிழ் தலைமைகளும் பேசி முடிவு எடுக்கட்டும். தற்சமயம் தமிழ் தேசிய இனத்திற்கான தீர்வு எத்தகையது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்கும், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து பரிமாற்றம் நடைபெறுகிறது. இது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. தீர்வு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி கருத்து கூறாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருக்கின்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்து பேசும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் நாம் வலிந்து சென்று எமது கருத்துகளை முன் வைக்க விரும்பவில்லை.

ஆனால் 13வது திருத்தம் என்பது இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. அதுபோல் இந்நாட்டின் ஏனைய எட்டு மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சி நடைபெறுகின்றது. இந்த அரசியலமைப்பு திருத்தமும், மாகாண சபையும் இந்திய அரசு பெற்று எடுத்த குழந்தைகள். எனவேதான் நாம் இலங்கை, இந்திய அரசுகளிடம் வட மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்றும், 13வது திருத்தத்தை அமுல் செய்யுங்கள் என்றும் கோருகிறோம். இது தொடர்பில் இந்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி கண்டிப்பாக எடுத்து கூற வேண்டும்.

இன்று இங்கே சிலர் இந்தியா அதிகாரப்பரவலாக்கள் தொடர்பில் எமக்கு ஆணை இட முடியாது என கூக்குரல் இடுகிறார்கள். சிறிலங்காவின் யுத்தத்தை முடித்து வைத்தது இந்தியாதான் என்ற உண்மையை வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். அத்துடன் இன்றும் உலக அரங்கில் சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றிக் கொண்டு இருப்பதும் இந்தியாதான் என்பதை அமைச்சர் கிருஷ்ணா சிங்கள ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு கூற வேண்டும். எனவே இந்தியாவிற்கு அதிகார பரவலாக்கல் தொடர்பில் அழுத்தம் கொடுக்க அதிகாரம் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும்.

இந்த உண்மைகளை பகிரங்கமாக கூறுவதால் தமிழ் மக்கள் கோபித்துக்கொள்ள போகிறார்கள் என இந்தியா கவலைப்பட தேவை இல்லை. அனைத்து உண்மைகளும் இன்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்திய அரசு இந்நாட்டில் வீடுகளை இழந்த இடம் பெயர்ந்த மக்களுக்கும், தோட்ட தொழிலாளர்களுக்கும் வீடுகள் கட்டி வழங்குவது தொடர்பிலும், வடக்கில் ரயில் பாதைகள் அமைப்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் அறிந்துள்ளார்கள். இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் வடக்கு மாகாணத்தில் வீடு கட்டுவது, ரோடு போடுவது, தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது என கிளம்பி இருப்பது தமிழ் மக்களுக்கு இதுவரையில் செய்தியாகத்தான் இருக்கிறது. இந்த திட்டங்கள் நடைபெறும் வேகத்தை பார்த்தால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைய கூடியதாக இல்லை. இது இன்று தமிழர் மத்தியிலே பேசப்படும் பகிரங்க ரகசியம். இந்திய அரசு முன்னெடுக்கும் இத்தகைய திட்டங்கள் விரைவில் சொல்லப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கத்தான் எமக்கு முடியும். அவை எப்போது செய்து முடிக்கப்படும் என்பது கிருஷ்ண பரமாத்மாவிற்குதான் வெளிச்சம்.

ஆனால் இத்தகைய வளர்ச்சி திட்டங்களை கொழும்பிலும், டெல்லியிலும் திட்டமிட்டு தமிழ் பிரதேசங்களில் கொண்டு வந்து அமுல் செய்ய முயலுவதைவிட , இத்தகைய வளர்ச்சி திட்டங்களை சொந்த ஊரிலேயே திட்டமிட்டு செய்வதற்கான அதிகாரங்களை தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கும் அதிகார பரவலாக்கலை தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். இதற்குதான் இந்திய அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். இதுதான் தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. வீடுகள் கட்டி தருகிறோம், ரோடுகள் போட்டு தருகிறோம் என்ற வழமையாக வழங்கப்படும் வாக்குறுதிகள் தமிழ் மக்களை இனிமேலும் மகிழ்ச்சிப்படுத்தாது. இதை இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். என்றுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=93596

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்கு ஏதாவது அவசரமுன்னு கடிதம் போட்டா சரோஜாதேவி வீட்டுக்குத்தான் போகுதான்.. இவனெல்லாம் வெளியுறவு அமைச்சர்....

--- தலைவர் நாஞ்சில் சம்பத்து உரையில் இருந்து...

டிஸ்கி:

இந்த மாதிரி அறிக்கை விடுவதை விடுத்து.. சரோஜாதேவி வீட்டுக்கு பேக்ஸ் அனுப்பிடுங்கப்பா... :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.