Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் கடற்படையால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்- சேந்தாங்குளத்தில் அராஜகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

c4f22ece0e77e1909b835f93a1395a52-150x150.jpg

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மீது சேந்தாங்குளம் பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) 8.45மணியளவில் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது-

சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் நீண்ட காலமாக சனநடமாட்டம் இன்மையால் பல இடங்களில் பற்றைகள் காடு போல மண்டியிருந்தன இதனால் டெங்கு முதலான நோய்கள் பரவும் அபாயம் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு குறித்த பற்றைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, அது குறித்து பிரதேச சபைத்தலைவர் கடற்படையினருடனர் கலந்துரையாடி இருந்தார். இதற்கு கடற்படையினரும் அனுமதி அளித்திருந்தனர்.

எனவே குறித்த பற்றைகளை அப்பகுதி மக்கள் நேற்று எரியூட்டினர். இதன்போது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பற்றைகளை எரியூட்டியவர்களையும், சேந்தாங்குளம் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர்.அத்தோடு அவர்களை எரியும் பற்றைகளுக்கு தண்ணீர் ஊற்றி அணைக்குமாறும் கட்டளையிட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபைத்தலைவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர் இன்னும் சில பிரதேச சபை உறுப்பினர்கள் சகிதம் விரைந்தார். கடற்படையினரால் தாக்கப்பட்டவர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மீண்டும்அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பிரதேச சபைத்தலைவர் மீது துப்பாக்கிப் பிடியால் கண்மூடித்தனமாக தாக்கினர். அவர்” நான் பிரதேச சபைத் தலைவர் ”எனப் பலமுறை கூறியபோதும் அதனைச் செவி மடுக்காமால் கடற்படையினர் தொடர்ந்து தாக்கியதால் , அவரும் ஏனைய உறுப்பினர்களும் பாதுகாப்புத்தேடி அப்பகுதியில் இருந்து தப்பித்து, ஓடினர்.இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களையும் கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்த மேலதிக விவரங்கள் விரைவில்......

http://www.tamilthai...newsite/?p=3298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.