Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தைப்பொங்கல் திருநாளில் உறுதி செய்து கொள்வோம்

Featured Replies

தைப்பொங்கல் திருநாளில் உறுதி செய்து கொள்வோம்

தை மகளின் பிறப்பு இன்று. கூடவே பொங்கல் திருநாளும். சூரிய பகவான் பூமியின் கண் விளைவிக் கின்ற அத்தனை வேளாண் செய்கைக்கும் உறுதுணையாக இருப்பதால்,கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக தைப்பொங்கல் அமைகின்றது.பகலவனுக்காக பொங்கல் செய்தாலும் அதனை தைப் பொங்கல் என்று அழைப்பதே மரபு.

மாதங்களில் இனிமையான-உழுது பயிரிட்ட விவசாயிகள் விளை வைப் பெறுகின்ற புனித மாதமாக தை இருப்பதால் சூரியப் பொங் கலை தைப்பொங்கல் என்று கூறிக் கொண்டோம். தைப்பொங்கல், சூரியப் பொங்கல் என்றெல் லாம் கூறினாலும், தமிழ்ப்பொங்கல் என்று கூறுவதே பொருத்துடையது. சூரியனைக் கண்கண்ட தெய்வமாக வழிபடும் தமிழ் மக்கள் சூரிய பகவானின் இயங்கு சக்தியை உணர்ந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழ் மக்களின் இப் பொங்கல், மனித மனங்களை ஆற்றுப்படுத்தி புதிய பாதையில் பயணிக்கச் செய்வதாகும். துன்பங்கள், துயரங்கள் நீங்கி-நாம் செய்த தவறுகளைத் திருத்தி அன்பும் பண்பும் பணிவும் நிறைந்த மனித வாழ்வை எங்களுக்குள் உருவாக்கிக் கொள்வதான ஏற்பாடாகவும் சூரியப் பொங்கல் அமைகின்றது. சூரிய பகவான் எங்ஙனம் இனம், மதம், பணம், பதவி என்ற ஏற்றத்தாழ்வின்றி உலக ஜீவராசிகள் அத்தனையையும் சமமாக நோக்கு கின்றாரோ அதுபோல நாமும் இனத்தால், மதத்தால், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வால் பிரிந்து நின்று எம்முள் பேதமை கொள்ளாமல் எல்லோ ரும் மனிதர்கள்; எல்லோரும் சமமானவர்கள்.

ஏற்றத்தாழ்வுகள் எங்களால் ஏற்படுத்தப் பட்டனவேயன்றி இயற்கை யில்-இறைவனின் படைப்பில் எழுந்தவையல்ல என்பதை உணர் வோம். தைப்பொங்கல் வேளாண் செய்கைக்கு சூரிய பகவான் செய்த உதவிக்கு நன்றி கூறு வது மட்டுமன்றி உலகின் கண் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற செயலை கெளரவிக்கும் முகமாகவும் சூரியப் பொங்கல் அமைகின்றது.

எனவே சூரியனுக்குப் பொங்கல் படைத்து எங்கள் அயல் உறவு என்ற உயர் பண்பாட்டை பேணுகின்ற நாளாகவும் விளங்கும் இத் திரு நாளில் ஏழைகளுக்கு உதவுவோம். எங்கள் இளைஞர் சமூகத்தை வழிப்படுத்துவோம். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவோம். கடினமாக முயற்சி செய்வோம். நிலம் என்னும் நல்லாளும் சூரிய பகவானும் இருக்கையில் இலம்என்று இரோம் என்ற உறுதிப்பாட்டையும் எடுத்துக் கொள்வோம்.

தமிழினத்தின் உயர் பண்பாட்டின் தேய்வு குறித்து கலங்கும் இவ்வேளையில், தைப் பொங்கல் திருநாள் அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றி இன்ப மயமாக அமைய இறைவனை வழிபடுவோம்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26627

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.