Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழு: தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனம்

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழு: தமிழ்க் கூட்டமைப்பு விமர்சனம்

இலங்கைப் போருக்குப் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.

போர்க்கால குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து இலங்கை அரசை விடுவிக்கும் முயற்சியாகவே இந்த விசாரணை அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றது.

எனவே, இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டுமானால் சர்வதேச மட்டத்திலான விசாரணையொன்றை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அந்தக் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் படிமுறைகளும் நடைமுறைகளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லத் தவறிவிட்டதாகவும், அவை சர்வதேச நியமங்களை பின்பற்றியிருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித ஏற்பாடுகளும் இருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

‘ஆணைக்குழுவின் அணுகுமுறை அடிப்படையிலேயே பிழையானது: தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் சாட்சிகளை ஆணைக்குழு பயன்படுத்திக் கொண்டுள்ளது, உண்மைத் தகவல்களுக்கு ஏற்ப சட்டம் பிரயோகிக்கப்படவில்லை’ என்றும் ஆணைக்குழு தொடர்பில் தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk...5_tnallrc.shtml

TNA Response to the LLRC Report

As the elected representatives of the worst affected victims of the war, the Tamil National Alliance (TNA) has consistently maintained that genuine reconciliation in Sri Lanka is contingent on a credible accountability process that ensures the right of victims to truth, justice and reparations. On 15th May 2010, the President appointed the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and held out to the world that this Commission would address accountability issues.

முழு அறிக்கையையும் காண இங்கே சொடுக்கவும் : http://www.tamilcanadian.com/article/6207

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை சர்வதேச நியமத்தை பின்பற்றவில்லை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-16 09:45:57| யாழ்ப்பாணம்]

TNA-logo_CI.jpgகூட்டமைப்பு குற்றச்சாட்டு

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட பதில் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து விபரமாக விளக்கப்பட்டுள்ளது.ஐ.நா.செயலரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, பொறுப்புக்கூறும் விடயங்களை மேம்படுத்தக்கூடியவையும் இலங்கையில் நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கக்கூடியவையுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் இப்பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தினால் கடுமையான பாதிப்பிற்குள்ளான மக்களின் பிரதிநிதிகளென்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, பாதிக்கப்பட்ட மக்களுடைய உண்மை, நீதி மற்றும் இழப்பீடு என்பவற்றிற்கான உரிமைகளை உத்தரவாதம் செய்வதான ஒரு நம்பிக்கையான கணக்கொப்புவித்தல் (பொறுப்புக் கூறுதல்) முறையினை மையமாகக் கொண்ட நேர்மையான நல்லிணக்கத்தை எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று ஜனாதிபதி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அக் குழுவானது கணக்கொப்புவித்தல் தொடர்பான விடயங்களை ஆராயுமென உலகிற்குக் கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது படிமுறைகளும் நடைமுறைகளும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெல்லத்தவறியது.அது மட்டுமன்றி இவ் ஆணைக்குழுவானது கணக்கு ஒப்புவித்தல் நடைமுறைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை முழுமையாகப் பின்பற்றி அமையவில்லை. மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினது முறைமையானது ஒப்பீட்டளவில் பாதிக்கப்ப ட்டவர்களின் கருத்துக்களுக்கு குறைந்தளவு முக்கியத்தையே வழங்கியது. இவ் ஆணைக்குழுவானது யுத்த கடைசிக் கட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்கான உண்மையான கணக்கொப்பு வித்தலைத் தொடர்ந்து செய்வதற்கான வளங்களையும் அலுவலர்களையும் குறைவாகவே கொண்டிருந்தது.

உதாரணமாக இவ் ஆணைக்குழுவானது வடக்கு கிழக்கில் சாட்சியங்களை திரட்டுவதற்கு செலவழித்த நேரமானது கொழும்பிலே செலவழித்த நேரத்துடன் ஒப்பிடுகையில் மிகமிகக் குறுகியதாகும். கொழும்பில் இடம்பெற்ற விசாரணைகளுக்காக 56 நாட்களைச் செலவிட்ட ஆணைக் குழு வடக்கிலும் கிழக்கிலும் மொத்தமாக 22 நாட்களையே செலவிட்டது. அதுமட்டுமன்றி நேரப் பற்றாக்குறையினை காரணம் காட்டி ஆணைக்குழு சாட்சியங்களுக்கு குறைவான கால அவகாசமே வழங்கப்பட்டது. பல சந்தர்ப்பங்களிலே எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சாட்சிகளுக்கு சாட்சியம் அளிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாததோடு அவர்கள் தமது பிரச்சினையினை எழுத்து வடிவில் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதற்கு மட்டுமே வேண்டப்பட்டனர்.

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வழங்கப்பட்ட உண்மையான தகவல்களுக்கு ஏற்ப சட்டத்தை பிரயோகிக்கத் தவறியுள்ளது. இழைக்கப்பட்டதாக நம்பப்படும் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச மனிதநேய சட்டமீறல்கள் மற்றும் உள்நாட்டு சட்டமீறல்கள் போன்றவற்றை ஆராய்வதை இக்குழு புறக்கணித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது இராணுவத்தினர் யுத்த சூனிய பிரதேசங்களிலே வேண்டுமென்று தாக்குதல் நடத்தவில்லை எனவும் முடிபுறுத்துகின்றது. ஆனால் யுத்த சூனியப் பிரதேசங்களிலே இருந்த மக்களிடையே விடுதலைப் புலி உறுப்பினர்களும் காணப்பட்டார்கள் என்பதும் அவர்கள் வெளியேறிச் செல்ல விரும்பிய மக்களை அனுமதிக்கவில்லை என்பதற்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தபோதும் யுத்த சூனியப் பிரதேசங்களிலே இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் அங்கிருந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை நடத்துவதைத் தவிர படையினருக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை என்ற உரைவடிவத்தை மட்டுமே ஆணைக்குழு ஏற்றுக் கொள்கின்றது.

பல்வேறு காரணங்களினால் இப்பகுப்பாய்வானது பிழையான தாகும். காணாமல்போனோர், காணாமல்போதல், ஆட்கடத்தல், கைதிகளை நடத்தும் முறை, சட்டவிரோத ஆயுதக் குழுக்கள், சிறுவர் கட்டாய ஆளெடுப்பு, இலகுவில் பாதிக்கப்படக் கூடிய குழுக்கள் மற்றும் உள்ளூரிலே இடம்பெயர்ந்தோர் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகம் பேச்சுச் சுதந்திரமும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை யும், தத்தமது சமய நெறியைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, குழுமச் சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் ஆகிய குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியதான பல மனித உரிமை விட யங்களில் இவ்வாணைக்குழு ஈடுபடுகின்றது. ஆயினும், இது பல சிக்கலான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறியுள்ளது. அதனாலேயே தேர்ந்தெடுத்த விடயங்களில் மட்டுமே தான் செயற்படுகின்றது என்ற அணுகுமுறையினை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக மனித உரிமைகள் மீறல்கள் குற்றச்சாட்டினைக் கொண்டுள்ள இனியபாரதி என்ற ஒருவர் பற்றி ஆணைக் குழுவின் அறிக்கையிலுள்ள மனித உரிமைகள் பற்றிய பாகத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கிழக்கில் இடம்பெற்ற பல காணாமல்போதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இந்நபரினுடைய ஈடுபாடு பற்றி குறிப்பிடுவதை விட்டுவிட்டு, ஆணைக்குழு தனது அறிக்கையிலுள்ள நல்லிணக்கம் பற்றிய அத்தியாயத்தில் இவர்பற்றி பொதுப் படையாகக் கூறியுள்ளது.

இக்குறிப்பிட்ட நபரிற்கு எதிராக வழங்கப் பட்ட சாட்சியங்களை விபரமாக விசாரணை செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, இந்நபர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற் றுடன் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் அவரது தொடர்புகள் பற்றி எதையும் கோடிட்டுக் காட்டவில்லை. இத்தகைய சூழ் நிலைகளில், இவ்ஆணைக் குழுவானது நடுவு நிலைமையையும் நம்பகத் தன்மையையும் இழந்துள்ளதுடன் குற்ற மிழைத்தவர்கள் தண்டணைகளிலிருந்து தப்பிப்பதனையும் மீள் வலியுறுத்தியுள்ளது. காணமல்போதல், தடுப்புக் காவல், காணி அபகரிப்புக்கள், வன்முறை, துன்புறுத்தல்கள், அச்சுறுத்திப் பணம் பறித்தல் மற்றும் கொலை ஆகிய தனிநபர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் ஏதோ ஒருவகையில் தலையிடுவதாகவும் அதனூடாக இக்குற்றச்சாட்டுக் கள் பற்றிய தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இவ்ஆணைக்குழு எண்ணற்ற சந்தர்பங்களில் உறுதியளித்துள்ளது.

ஆயினும்,ஆணைக்குழுஅறிக்கையானது மேலே குறிப்பிடப்பட்ட தொடரப்படுகின்ற வேலைப்பாடு தொடர்பில் மிகக் குறுகிய ஒரு தரவுப் பகுப்பாய்வை மட்டுமே கொண்டுள்ளது. இது சாட்சிகளுக்கு எந்தவிதமான பயனையும் வழங்கப் போவதில்லை. எவ்வாறு குறிப் பிட்ட முடிபு பற்றி குறிப்பிட்ட ஒரு சாட்சிக்கு அறிவிப்பது என்பது பற்றி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது என்பது குறித்து அறிக்கை யில் தெளிவின்மையுள்ளது. இச்சாட்சிகளை அணுகக்கூடியதாக ஆணைக்குழு இருக்கும் என்று கருத்தினால் கூட பொது அமர்வுக ளின் போது வழங்கப்பட்ட உறுதிகளுக்கு எந்த விதமான பதிலும் அறிக்கையில் வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட வடக்கில் இராணுவத்தினரின் தலையீடு என்ற விடயத்தையும் ஆணைக்குழு ஒருவாறாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் அனைத்து சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் இரா ணுவத்தினர் தம்மை விலகிக் கொள்ளவேண்டியதன் தேவையை அங்கீகரிக்கின்றது. இப் பரிந்துரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதுடன் அடுத்துவரும் மாதங்களில் இப்பரிந்துரை எவ்வாறு அமுலாக்கப்படுகின்றது என்பதை நுணுக்கமாகக் கண்காணிக்கவும் அவற்றில் ஏற்படும் முன்னேற்றங் களை வெளியிடவும் எண்ணியுள்ளது.

இவ்வாறான சாதகமான பரிந்துரைகளைக் காட்டிலும் உண்மை, நீதி, இழப்பீடு போன்ற பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை வழங்குகின்ற சர்வதேசத் தரங்களுக்கு இயைவான கணக்கொப்புவிப்பு செய்முறை யானது தேவையான மிக முக்கியமானதும் உடனடியானதுமான தேவையாகும். இத்தகைய தரமுடைய ஒரு செய்முறையினை அரசாங்கம் நிறுவுவதற்கு தவறுகின்ற பட்சத்தில் ஐ.நா. செயலாள ரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப கணக்கொப்புவிப்பு விடயங்களை மேம்படுத்தக் கூடிய வையும் இலங்கையில் நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கக் கூடியவையுமான நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=26642

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.