Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டகாலத்தில் ஒழுக்கமுள்ள மாணவர் சமூகமாக இருந்தவர்கள் இன்று ஒழுக்க சீர்கேடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்-பா.அரியநேத்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCI1374-640x4801.jpg

மிக மோசமான ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் கூட வடகிழக்கு மாணவர் சமூகம் மிகவும் ஒழுக்கமுள்ள தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற சமூகமாக வளர்ச்சிபெற்றனர். ஆனால் இன்று ஒழுக்க சீர்கேடான கலாச்சார சீரழிவுகளுக்கு மாணவர் சமூகம் உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

இது எமது சமூகத்திற்கு கல்வியில் மிகப்பெரிய பின்னடைவையே உருவாக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

நேற்றையதினம் அம்பலாந்துரை கலைமகள் வித்தியாலத்தில் இடம்பெற்ற 1000 பாடசாலைகளை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

தைபொங்கல் திருநாளை உழவர் திருநாள்,தமிழர் திருநாள் என அழைக்கின்றனர் ஆனால் இன்று நாம் தமிழர் திருநாள் என சொல்ல முடியாமலுள்ளது ஏனெனில் தமிழ் மக்களுக்கு பூரணமான சுதந்திரமுள்ள வளர்ச்சிபெற்ற அரசியல் தீர்வு என்று கிடைக்கின்றதோ அன்றுதான் உண்மையான தமிழர் திருநாளாக நாம் அதை கொண்டாட முடியும். இருந்தும் நாம் பொங்கல் விழாக்களை அனுஸ்டிக்கிறோம் ஏனென்றால் அது எங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை மங்கிவிடாமல் கட்டிக்காக்க வேண்டுமென்பதற்காகவே இதை ஒரு சம்பிரதாயமான பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றோம்.

இன்று போர் முடிவுற்றதாக அரசாங்கம் கூறி இன்னும் மூன்று மாதங்களால் மூன்று வருடம் பூர்த்தியாகின்றது. இந்த மூன்று வருடம்காலப்பகுதியில், இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படாமலும், முழுமையாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படாத நிலையிலும் உள்ளதோடு தமிழர்களின் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பொதுவாக எமது கல்விச் சமூகத்தை எடுத்துக்கொள்வோமானால் கடந்த ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் வடகிழக்கு மாணவர் சமூகம் மிகவும் ஒழுக்கமுள்ள தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற சமூகமாக வளர்ச்சிபெற்றனர். ஆனால் இன்று ஒழுக்க சீர்கேடான கலாச்சார சீரழிவுகளுக்கு மாணவர் சமூகம் உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது. இது எமது சமூகத்திற்கு கல்வியில் மிகப்பெரிய பின்னடைவையே உருவாக்கும். இன்று எமது சமூகம் கட்டுப்பாடற்ற சமூகமாக உருவாகிக்கொண்டிருக்கின்றது அதனை அரசாங்கம் கைகட்டி வேடிக்கைபார்க்கிறது. அரசுக்கு எமது சமூகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பது எமக்கு தெரியும் ஆகவேதான் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கரை கொண்டு கல்வி ரீதியாக மாணவர்களை முன்னேற்றமடையச் செய்து கல்வியில் வளர்ச்சிபெற்ற ஒழுக்கமுள்ள சமூகமாக எமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமையாகும் எனத்தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் எம்.ரவிராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் அம்பலாந்துரை ஆலய பரிபாலன சபை தலைவர் நகுலேஸ்வரன், ஆலய குருக்கள் சிவஸ்ரீ விநாயகமூர்த்தி சர்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

DSCI1363-640x480.jpg

DSCI1365-640x480.jpg

DSCI1368-640x480.jpg

DSCI1372-640x480.jpg

DSCI1374-640x4801.jpg

http://www.kathirava...p?mid=35&id=419

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.