Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி

Featured Replies

பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி

அடுத்தடுத்து பல தோல்விகளை பெற்று கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ஒரு இளக்காரமான அணியாக மாறியிருக்கும் இலங்கையணி புதிய உற்சாகத்தை பெறும் விதத்தில் பங்களாதேஷ் போயிருக்கிறது என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் இப்போ பங்களாதேஷ் அணிக்கு பயிச்சியாளராக இருப்பவர் முன்னர் இலங்கையணி உலகக் கோப்பையை எடுப்பதுக்கு காரணமாக இருந்த இலங்கையின் பழைய பயிற்சியாளர் வோட் மூர். இலங்கையின் முன்னணி ஆட்டக்காரரின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருக்கும் அந்த வகையில் இலங்கைக்கு இந்த போட்டிகளும் பெரும் சோதனைக்குரியதுதான்

அதற்காக அவரால் பயிற்றிவிக்கபட்ட சமிந்தா வாஸ் அதபத்து முரளி(ஒருநாள் போட்டியில் மாத்திரம்) இந்த போட்டிகளில் பங்குபற்றாமல் புதியவர்களை விட்டிருக்கிறது இலங்கையணி இது எந்த அளவில் சாத்தியம் எண்டு இருந்து பாப்போம்

3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ள இருக்கும் இலங்கையணிக்கு தலைவராக மகில ஜெயவர்தனாவும் உபதலைவராக சங்கக்காராவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்க

இங்க இருக்கிறதால இந்த கிரிக்கட்டை பார்க்கமுடியவில்லை. அதனால் தயவுசெய்து அப்படியே அந்த போட்டி வர்ணனையும் முகத்தார் செய்தால் புண்ணியமாக போகும். :lol:

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் Vs சிறீலங்கா 1வது ஒருநாள் போட்டி

சிறீலங்கா 5 விக்கட்டுகளால் வெற்றி

பங்களாதேஷ் சிறீலங்கா அணிகளுக்கிடையிலான 1வது ஓருநாள் போட்டி நேற்று Bogra District Stadium . ல் .பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது முதலில்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மிகவும் பரிதாபமாக 35.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 118ஒட்டங்களை மாத்திரமே பெற்றது இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களான பெரோரா(23/3) மற்றும் மாரூவ் (30/3) திறமையாக பந்து வீசினார்கள் பங்களாதேஷ் அணி சார்பாக

Khaled Mahmud - 36runs

இதுக்கு பதிலளித்தாடிய சிறீலங்கா அணி 24.1ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரமே இழந்து 119ஓட்டங்களை பெற்று மிகவும் இலகுவான வெற்றி ஒன்றை தமதாக்கிக் கொண்டனர் சிறீலங்கா அணியில்

KC Sangakkara -50runs

*DPMD Jayawardene -37runs*

ஸ்கோர்

பங்களாதேஷ் -118 ஓட்டங்கள்(35.5ஓவர்)

சிறீலங்கா -119/5

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._20FEB2006.html

ஆட்ட நாயகன் - PDRL Perera (7-1-23-3)

59450.jpg

Ruchira Perera runs into bowl

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் - சிறீலங்கா 2வது ஒருநாள் போட்டி

பங்களாதேஷ் 4 விக்கட்டுகளால் அபார வெற்றி

சிறீலங்கா நாட்டுக்கு பிடிச்ச சனியன் அரசியலிலை மாத்திரமல்ல விளையாட்டிலும் தன்ரை வேலையை காட்டுது. . .நல்ல விசயம்

இன்று Shaheed Chandu Stadium, Bograல் நடந்து முடிந்த பங்களாதேஷ் சிறீலங்கா அணிகளுக்கிடையிலான 2வதும் ஒருநாள் போட்டியில் பங்களா தேஷ் 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடு மாறு சிறீலங்காவை பணித்தது 49ஓவர்களாக நிர்ணைக்கப்பட்ட போட்டியில் சிறீலங்கா அணி பெரிதாக ஓட்டங்களை எடுக்கவில்லை முழுமையாக 49ஓவர்களும் முடிந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 212ஓட்டங்களையே பெற்றது அணி சார்பாக

S.Jeyasuriya - 96runs மாத்திரம் அதி கூடிய ஓட்டங்களை எடுத்தார்

இதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி மிகவும் நிதானமாக விளையாடி 47ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 213ஒட்டங்களை பெற்று கிரிக்கெட் வரலாற்றில் தங்களுக்கு ஒரு இடமிருக்கு என்பதை நிரூபித்துள்ளார்கள் பங்களாதேஷ் அணி சார்பாக

Mohammad Ashraful -51runs

Javed Omar -40runs

Aftab Ahmed -32runs*

ஸ்கோர் விபரம்

சிறீலங்கா - 212 ஓட்டங்கள் (49 ஓவர்கள்)

பங்களாதேஷ் - 213/6

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._22FEB2006.html

ஆட்ட நாயகன் : Aftab Ahmed-32runs* &24/1

59510.jpg

Aftab Ahmed -06 - 0 - 24 - 01

3 ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் சிறீலங்கா அணியும் 2வது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றதால் 25ம் திகதி நடைபெற இருக்கும் 3வது போட்டி மிகவும் முக்கியமாதொன்றாகும்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் - சிறீலங்கா 3வது ஒருநாள் போட்டி

சிறீலங்கா 78 ஓட்டங்களால் வெற்றி

அப்பாடி ஒரு மாதிரியா சிறீலங்கா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 2 : 1 என்ற அடிப்படையில் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டது

இன்று Chittagong Divisional Stadiumல் நடந்து முடிந்த பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

இந்த முறையும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை யணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கையணி அடுத்தடுத்து ஆரம்ப துடுப்பாட்டகாரரை இழந்தாலும் சங்கக்காரா-(109) மகில-(51) லோக்குஆராச்சி-(69) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50ஓவர்கள் முடிவில் 7விக்கட்டுகளை இழந்து 309 என்ற ஒரு பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது அணி சார்பாக

KC. Sangakkara - 109runs

MPMD. Jayawardene - 51runs

KS.Lokuarachchi - 69runs (57balls- 6x3 4x4)

MF.Maharoof - 27runs (09balls- 6x3 4x1)

310ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி மிகவும் நிதானமாக விளையாடிய போதிலும் இலங்கை வீரர்களின் பந்து வீச்சில் ஓட்டங்களை எடுக்க முடியாமல் தடுமாறினார்கள் இறுதியாக 50ஓவர்களில் 9 விக்கட்டுகளையும் இழந்து 231ஒட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது பங்களாதேஷ் அணி சார்பாக

Mohammad Ashraful - 64runs

ஸ்கோர் விபரம்

சிறீலங்கா - 309/7 (50 ஓவர்கள்)

பங்களாதேஷ் - 231/9

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._25FEB2006.html

ஆட்ட நாயகன் : KC. Sangakkara - 109runs

தொடர் ஆட்ட நாயகன் : KC. Sangakkara

59611.jpg

நீண்ட நாட்களுக்கு பின் வெற்றிக் கிண்ணமொண்றை பெற்ற இலங்கையணிக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.............இலங்கை அணிக்கு... :lol::):lol:

  • கருத்துக்கள உறவுகள்

செத்த பாம்புக்கு அடிச்சுட்டு வீராப்பு பேசுறாங்க இலங்கை அணி,, இருந்தாலும் பங்களாதேஸ் அணி நன்றாக விளையாடி இருக்கிறது, ஒரு போட்டியில் இலங்கை அணியை திணறடித்துவிட்டார்கள்,, 2003,2004 இல இருந்த இந்திய அணிமாதிரி இருந்த பங்களாதேஸ் அணி, நியுசிலாந்த் அணி மாதிரி வந்துகொண்டு இருக்கு,,, வாழ்த்துக்கள்,,,,

சங்கக்கார இல்லையெண்டால் இலங்கை அணி கென்யா அணிதான்,,, :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.