Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும். சர்கோசி

resize_20120122094446.jpg

இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஈரான் அணு ஆயுதங்களின் மீது கொண்டுள்ள ஆசையின் காரணமாக போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அச்சுறுத்தியபடி ஈரான் மீது இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருகிறது.

இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை எதுவும் தீரப்போவதில்லை. மாறாக உலகம் முழுக்க, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போரும் குழப்பமும் உருவாகும் என்றார்.

மேலும் ஈரானின் எண்ணெய் இறக்குமதியைத் தடைசெய்தும், ஈரானிய மத்திய வங்கியின் சொத்துகளை முடக்குவதுமான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜக்கிய நாடுகள் முன்வர வேண்டும்.

சீனாவும், ரஷ்யாவும் ஜ.நா பாதுகாப்புக் குழு ஈரான் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

http://www.thedipaar.com/news/news.php?id=40174
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது சர்கோசி பேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தொடர்ந்தால் ஆப்கானிஸ்தானின் இராணுவத்துக்கு பிரான்ஸ் அளித்துவரும் உதவியும், பயிற்சியும் நிறுத்தப்படும். மேலும் பிரான்ஸ் இராணுவம் முன்கூட்டியே தாய்நாடு திரும்ப நேரிடும் என்று எச்சரித்தார்.

இதைப்பார்க்கும்போது நேட்டோவுக்குள் பிளவு ஏற்படுவதற்கான ஆரம்பமாக கருதலாமா ? அல்லது சார்க்கோசியின் அரசியல் ராஜதந்திரம் எனக்கொள்ளலாமா??

எது எப்படியோ இப்போதெல்லாம் பெரும்பாலும் ஐரோப்பிய மக்கள் தமது பிள்ளைகள் மத்தியகிழககிலோ ஆப்கானிஸ்தானிலோ இறப்பதை விரும்பவில்லை என்பதையே உணரமுடிகின்றது.

இந்த ஆண்டு வரும் தேர்தலில் ( இன்னும் தான் போட்டியிடப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை) வெல்வதற்காக இதைக்கூறுகின்றார் - சர்கோசி. இரண்டு நாட்களுக்கு முன்னராக நாலு பிரெஞ்சு படைகள் அப்கானிஸ்தானில் கொல்லப்பட்டபோது அந்த போரை ஆதரித்த இவர் மௌனம் காத்தமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்கங்கெட்ட வகையில் பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானை அழிக்க விரும்புகிறது அமெரிக்கா!

‘‘புறக்கணிக்கப்படும் ஒரு நாடு சரணடையும் நிலைக்கு ஆளாகிறது. பொருளாதார ரீதியான, அமைதியான இந்த பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தும் பட்சத்தில் படை பலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு பயங்கமான பரிகாரம். புறக்கணிக்கப்படும் நாட்டைத் தவிர்த்து வேறெங்கும் எந்த உயிரிழப்பும் இதனால் நேர்வதில்லை, ஆனால் புறக்கணிக்கப்படும் நாட்டிற்கு பெரும் நெருக்கடியை இது உருவாக்குகிறது,’’ என்றார் உட்ரோ வில்சன் ஒரு முறை. ‘‘ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு எதிராக ஐரோப்பாவோ அல்லது ஐக்கிய நாடுகள் அவையோ தடைகளை விதிக்கிற போது பல இலட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவே தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்,’’ என பல பத்தாண்டுகள் கழித்து உட்ரோ வில்சனின் கருத்துக்கு பதிலடியாக கூறினார் கபான் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் உமர் பாங்கோ. இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் தடைகள் விதிக்கப்படுதவதற்கான நோக்கங்களே பெரிதும் மாறியிருக்கின்றன. இப்போதெல்லாம் ராஜீய, ராணுவ ரீதியான லாபங்களுக்காகவே தடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் (குறிப்பாக இஸ்ரேல்) ஈரானை சுற்றிவளைத்து வருகின்றன. ஈரான் மத்திய வங்கியுடன் எந்த வர்த்தக நடவடிக்கைகளையும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மேற்கொள்வதை தடை செய்து அமெரிக்காவின் செனட் ஒருமனதாக (100-0) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தொடர்ந்து அவ்வப்போது ஈரான் மீது தடைகளை விதித்துவரும் அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய தடையானது (டிசம்பர் 31, 2011 அன்று இந்தத் தடையை சட்டமாக நிறைவேற்றினார் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா) மிகவும் கடுமையான ஒன்று. இந்தச் சட்டத்தைப் பற்றி வெள்ளை மாளிகையின் வலைதளத்தில் ஒபாமா வெளியிட்டுள்ள குறிப்பில் ‘‘ராணுவம்’’ என்ற வார்த்தை 14 முறையும் ‘‘பாதுகாப்பு’’ என்ற வார்த்தை 9 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை இது காட்டுகிறது! மேலும், இது வரை ஈரான் மீது 15 தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடைகளின் காரணமாக ஈரானின் கரன்சியான ரியால் தனது மதிப்பை 15 முதல் 20 சதவிகிதம் வரை இழந்திருக்கிறது. இப்போதைய பரிவர்த்தனை மதிப்பின்படி ஒரு டாலருக்கு 17,000 முதல் 17,500 ரியால்கள். இந்தத் தடைகளின் காரணமாக பல நாடுகள் ஈரானிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்தியுள்ளன. 662 பில்லியன் டாலர் முதலீட்டுடன் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தை ஒபாமா நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஈரானின் ராணுவ பலம் பற்றி மதிப்பீடு செய்யப்படும். ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்க முடிவு செய்யும் பட்சத்தில் இந்த சட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறும். இந்த சட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் நேட்டோ நாடுகளின் ஆற்றல் தேவையை உறுதி செய்வதே.

இந்தச் சட்டத்தின்படி ஈரான் மத்திய வங்கியுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு மூன்றாவது நாட்டின் மீதும் அமெரிக்காவால் அபராதம் விதிக்க முடியும்! அமெரிக்க நிர்வாகமே வெளிப்படையாக கூறியுள்ளதைப் போல இந்தத் தடையின் முக்கிய நோக்கமே ஈரானின் வருவாயை முடக்கி, அங்கு நிதிப் பற்றாக்குறையை உருவாக்கி அதனால் தனது அணுசக்தி திட்டத்தை தொடர முடியாதபடி செய்வதேயாகும். ஆனால், இந்தக் காரணம் முட்டாள்தனமானதும், சிறுபிள்ளைத்தனமானதும் ஆகும். வட கொரியா போன்ற மிகவும் வறுமையான நாடுகள் மீது பல தடைகள் விதித்தும் அவை அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுத்துநிறுத்த முடியாத அமெரிக்கா எப்படி ஈரானை தடுத்துநிறுத்த முடியும்? 1990களில் ஈராக் விவகாரத்தில் ஏற்பட்ட நிலையே இப்போதும் ஏற்படக்கூடும். ஈராக்கை அழிப்பதில் தடைகள் தோல்வியுற்ற நிலையில் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. அதேதான் இப்போதும் நடக்கும்.

நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஈரானை அமெரிக்கா குறிவைப்பது இது முதல் முறையல்ல. ஜூன் 9, 2010ல் ஒபாமா நிர்வாகம் ஈரான் மீது பல கடும் தடைகளை விதித்தது. முக்கியமான ராணுவக் கருவி ஒன்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ததுடன் ஈரானின் கார்ப்போரேட் நிறுவனங்களுடன் சர்வதேச நிதி மற்றும் சொத்துப் பரிமாற்றங்களை தடை செய்தது. இந்தப் பகுதியில் அமெரிக்காவால் குறி வைக்கப்பட்டிருப்பது ஈரான் மட்டுமல்ல. 1986லிருந்தே நேட்டோவின் கோபத்திற்கு ஆளான நாடாக இருக்கிறது சிரியா. ஒன்றரை மாதத்திற்கு முன்னர் கலகக்காரர்களுக்கு எதிராக சிரியா அரசாங்கம் எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் பழைய தடைகளை புதுப்பித்ததுடன் புதிய தடைகளை விதித்தன. ஆனால் இதே போன்று கலகக்காரர்களை ஒடுக்கிய ஏமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி தான் குறி வைக்கும் நாடுகள் மீது தடைகளை விதித்து அவற்றை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பலவீனமாக்கி பின்னர் அவற்றின் மீது போர் தொடுப்பதை தனது வழக்கமாக அமெரிக்கா வைத்துள்ளது. ஈரானின் விஷயத்தில் அதன் அணு சக்தி தவறான வழியில் பயன்படுத்தப்படும் என்று காட்டுவதற்கு அமெரிக்காவிடம் எந்த ஆதாரமும் இல்லை (சர்வதேச அணு சக்திக் கழகத்தின் அறிக்கையும் ஈரானுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது). பேரழிவு ஆயுதங்கள் ஏதும் ஈரானிடம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக தான் சொன்னதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்டதுடன் ஈராக் கதை முடிந்தது.

9/11 தாக்குதலைப் பொருத்த வரை அதில் ஈடுபட்டவர்கள் சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். பல தீவிரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் தந்திருக்கும் பாகிஸ்தான் வெட்கங்கெட்ட வகையில் ஒசாமா பின் லேடனுக்கும் அடைக்கலம் தந்திருந்தது. ஆனால் ஈரான் போன்ற நாடுகள் எதிர்கொண்டுள்ள தடைகளை சவுதியும் பாகிஸ்தானும் எதிர்கொள்ளாதது ஏன்? அவை வார்த்தைக்கு வார்த்தை அமெரிக்காவின் உத்திரவுகளை அப்படியே ஏற்பதுதான் காரணம். தாலிபனை பொருத்த வரை அது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஒன்று.

கியூபா மீது தடைகள் விதிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன. ஆனால் அவை ‘‘பலனற்றவை’’ என்று ஒபாமாவே 2010ல் கூறினார். பாகிஸ்தானும் ராணுவ விஷயத்தில் அமெரிக்காவின் தடையை எதிர்கொண்டிருந்தது (1990லிருந்து 2005 வரை 15 ஆண்டுகளுக்கு எப்&16 ரக போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படுவதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது). ஆனால் பாகிஸ்தான் வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதை இந்தத் தடையால் தடுக்க முடியவில்லை. இதே போன்று பல சமயங்களில் தடைகள் அதன் நோக்கங்களுக்கு நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்ட ஆயுதத் தடைகளை (1960களின் போது) எதிர்கொள்ள அப்போதைய பிரிட்டோரியா அரசாங்கம் உள்நாட்டிலேயே பெருமளவு ஆயுதங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. யூகோஸ்லாவியாவிற்கு எதிரான தடைகளால் போஸ்னியா போரை தடுக்க முடியவில்லை என்பதுடன் தடைகள் அந்நாட்டை வறுமையில் தள்ளின.

கியூபா, ஈரான், ஜிம்ப்பாவே மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு எதிரான தடைகள் அந்த அரசாங்கங்களுக்கு நெருக்கடிகளை தருவதற்கு பதிலாக வறுமையால் பீடிக்கப்பட்டிருந்த அந்நாட்டு மக்களின் துயரங்களை மேலும் அதிகமாக்கின. உலகின் எந்த நாட்டிலும் தடைகளால் அரசுகள் தூக்கியெறியப்பட்டதில்லை. அது மிலோசோவிக்கின் யூகோஸ்லாவியாவானாலும் சரி, சதாம் உசேனின் ஈராக்கானாலும் சரி அல்லது தாலிபனின் ஆப்கானிஸ்தானானாலும் சரி. இறுதியில் இந்த நாடுகளின் விஷயங்களின் தங்களது நோக்கதை நிறைவேற்ற நேட்டோ ராணுவத்தையே நம்பியது. நான் ஏற்கனவே கூறியது போல இந்தத் தடைகளுக்கு பலியாகிறவர்கள் சாதாரண, அப்பாவி மக்களே. 1991லிருந்து 2001 வரை விதிக்கப்பட்ட தடைகளால் ஏறக்குறைய பத்து லட்சம் ஈராக்கியர்கள் மடிந்தனர். எந்த அரசுகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுகின்றனவோ அவை பெரும்பாலும் ஊழல், கள்ளச் சந்தை, சட்டத்திற்கு புறம்பான ஆயுத வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் மேலும் மேலும் வலிமையடைவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

வட ஆப்பிரிக்காவில் உள்ள எண்ணை வளம் மிகுந்த நாடுகளான காங்கோ, அங்கோலா, சுவாஸிலேன்ட், சோமாலியா ஆகிய சர்வாதிகார நாடுகளைப் பற்றி அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் கண்டுகொள்வதேயில்லை. ஏனெனில் அமெரிக்காவின் வர்த்தக நலன்கள் இந்நாடுகளின் பெட்ரோல் வளத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதே. தடைகள் விதிக்கப்படுவதால் எதிர்பார்க்கப்படும் பலன்கள் எப்போதும் கிடைத்ததில்லை. தடைகள் விதிக்கப்படுவது என்பது கி.மு.431ல் ஏதென்ஸ் நாடு மேகர் என்ற நாட்டின் மீது தடை விதித்த போதே தொடங்கிவிட்டது. 2003ஆம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் உலக அளவில் தடைகள் 33 சதவிகிதமே பலன் தந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ல் தனது ஆய்வை விரிவுபடுத்திய அந்த நிறுவனம், 1970 முதல் 1997வரை அமெரிக்கா தான் விதித்த தடைகள் மூலம் 13 சதவிகித வெற்றியையே பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் பிற நாடுகள் மீது தடைகள் விதிப்பதில் அமெரிக்காவே முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்கா இரு நாடுகள் மீதும் தடைவிதித்தது. ஆனால் அதனால் தனது தொலைநோக்கு திட்டங்கள் பாதிக்கப்படுவதையறிந்து அமெரிக்கா அவற்றை நீக்கிக்கொண்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை எதிர்கொள்ள பாகிஸ்தானின் உதவி அவசியம் என்பதால் தனது தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது.

இப்போது ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஈரானை மட்டுமல்லாது பிற நாடுகளையும் பாதிக்கப்போகிறது. சீனா, இந்தியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பெட்ரோல் பற்றாக்குறையால் பாதிக்கப்படப்போகின்றன. ஈரானின் ஆண்டு பட்ஜெட்டில் பாதி பெட்ரோல் வருவாயை சார்ந்திருக்கிறது. ஜூலை 2011 வரை பெட்ரோல் மூலம் ஈரான் ஈட்டிய வருவாய் 56 பில்லியன் டாலர் என அமெரிக்க ஆற்றல் துறை தெரிவிக்கிறது. ஈரான் விஷயத்தில் அமெரிக்கா காட்டும் அக்கறை முழுக்க முழுக்க பெட்ரோல் தொடர்பானதே. அதற்காகவே அங்கு ஆட்சி மாற்றம் வர வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. தன்னால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை அரசு அங்கு அமைவதன் மூலம் ஈரானின் பெட்ரோலை அமெரிக்காவிற்கு திருப்பிவிட முடியும் என்பதே இதற்குக் காரணம்.

இது வரை ஈரான் அணு குண்டு தயாரிக்கவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியான் பனிட்டாவே கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இரட்டை அளவுகோல் அணுகுமுறையை பார்க்கிற போது ஈராக்கிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் ஏற்பட்ட அதே கதிதான் ஈரானுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது. ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் அழித்த பிறகு ஈரானின் பெட்ரோல் வளத்தை அபகரிக்க குறிவைத்திருக்கிறது அமெரிக்கா. மேலும், பெட்ரோல் வள நாடுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் கைப்பாவைகளாக இருக்கின்றன. இதற்கு ஒரே விதிவிலக்கு ஈரான் மட்டுமே. ஆனால் அமெரிக்காவின் இந்தத் திட்டம் நிறைவேறுவது மிகக் கடினம். ஏனெனில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகிற போது ஈரான் வலிமையான நாடு. தனது இறையாண்மையை பாதுகாத்துக்கொள்ள நேட்டோ படைகளுக்கு எதிராக ஒரு வீரஞ்செறிந்த போரை நடத்த ஈரான் தயங்காது என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்.

போர் அல்லது ஏன் பொருளாதாரத் தடைகள் கூட அமெரிக்காவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். அமெரிக்காவின் விஷயத்தில் அதுதான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்குப் பின்னர் நடந்தது. இத்தகைய சூழலில் தோற்கும் நாட்டை விட வெற்றி பெறும் நாடு அதிகம் இழக்கும் என்பதை ஒபாமா புரிந்துகொள்ள வேண்டும். பெட்ரோல் என்று வருகிற போது ஒபாமாவிற்கும் ஜார்ஜ் புஷ்ஷிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

http://thesundayindian.com/ta/story/now-the-americans-want-to-shamefully-ruin-iran-through-sanctions/1604/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.