Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானிக்கும்

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்

தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் குறித்து

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவே

இறுதித் தீர்வுத் திட்டம் குறித்து தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் சற்று முன்னர் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு எவ்வாறான அதிகாரங்களை பகிர்வது என்பது தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும், அதிகாரப் பகிர்வு குறித்து தனித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வுகளை மேற்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை

பெயரிடாமை வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு தமது பிரதிநிதிகளை பெயரிடுவதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை குறித்த பரிந்துரைகளை முன்வைத்து தீர்வுகளை எட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகராக செயற்பட்டு வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இணக்கப்பாடுகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பின்பற்றிய நிலைப்பாட்டையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள் பின்னர் விலகிச் செல்வார்கள் பின்னர் நிபந்தனைகளுடன் பேச்சுhவர்த்தை நடத்தக் கோருவார்கள் என அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தை வழங்கத் தயார் என குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், இந்தத் தீர்வுத் திட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும் - ஜனாதிபதி

தேசிய இனப்பிரச்சிகைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சகல மக்கள் சமூகங்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வின் மூலமே தீர்வுத் திட்டங்களைஎட்ட முடியும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

மக்களின் சகல பிரச்சினைகளும் செவிமடுக்க அரசாங்கம் தயார் நிலையில ;இருக்கி;ன்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு இது உரிய தருணமல்ல என அவர்குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சகல அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படவேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும் பேதங்களைக்களைந்து இணைந்து செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

cartoon2(203).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.