Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி பயணம் - புதுடெல்லியில் இன்று கலந்துரையாடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-rayapasa-150news.jpg

இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றுள்ளார். இந்தியா � சிறிலங்கா இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று ஆரம்பமாகிறது.

இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்த சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்தழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளது.

இவர்கள் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் பேச்சுகளில், இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும், ஏனைய நிறுவனங்களிலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்த கலந்துரையாடப்படவுள்ளதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும் விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? சிறிலங்கா அரசு சந்தேகம்!

ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கத்தேய நாடுகள் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புதுடில்லி சென்றிருக்கின்றார்.

இந்தியா - சிறிலங்கா இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று புதன்கிழமை புதுடில்லியில் ஆரம்பமாகிறது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் அனைத்துலக ஒத்தழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காகவே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான குழு புதுடில்லி சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஜெனிவா மாநாடு தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது முக்கியமாக ஆராயப்படும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் பிரசாத் காரியவசம் மற்றும் இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுகளில் இந்திய பாதுகாப்புக் கல்லூரிகளிலும் ஏனைய நிறுவனங்களிலும் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை வழங்குதல் உள்ளிட்ட தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்த கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் கொழும்பில் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

வருடாந்தப் பாதுகாப்பு கலந்துரையாடலுக்குப் புறம்பாக ஜெனிவாவில் இடம்பெறவிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணை தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு எதிரான இந்தப் பிரேரணையை இந்தியாவும் ஆதரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் உண்மை நிலையை அறிந்து கொள்வதில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அதிகளவு கரிசனை செலுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான சுயாதீனமான பொறிமுறை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்கத்தேய நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் வொஷிங்டனுக்கு அழைத்துள்ளார்

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூதுவர் ஸ்டிபன் ரப் (Stephen Rapp) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=643e9909-62da-4f88-9a33-9f3763d77745

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.