Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைதனை உரிமையுடன் உலகத்திடம் கேட்க உலகத் தமிழினமே புறப்பட்டு வருக

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரின் அமைதியான வாழ்வுக்காக நீதி கோரி பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் சளைக்காத மனவுறிதியுடன் இன்று 9வது நாளாகவும் தொடர்கிறது.

நாளைய தினம் ஜெர்மன் நாட்டுக்குள் பிரவேசிக்க உள்ள இவர்களை வரவேற்பதற்கு அங்குள்ள தமிழ் உறவுகள் தயாராகி வருகின்றனர். இன்றைய தினம் இலண்டனில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவரும் பிரான்சில் வசிக்கும் சிலரும் இந்த நடைப்பயணத்தில் இணைந்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுமகன் தமிழீழ தேசியக்கொடியை ஏந்தி சென்ற இவர்களை கண்ணுற்று ஆறத்தழுவி தனது ஆதரவினை உணர்வுடன் வெளிப்படுத்தினார்.

9th_day_walk_002.jpg

இலங்கையில் வடக்கு கிழக்கை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தேசியம், தாயகம், தன்னாட்ச்சி என்பவற்றை ஐ.நா அங்கிகரிக்க வேண்டும் உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய பயணம் தொடர்ந்தது.

சிறிலங்கா அரசு தமிழின அழிப்பில் ஈடுபட்ட போது தடுத்து நிறுத்துமாறு ஐ.நாசபை முன்றலில் உருகி உருகி வேண்டுகோள் விடுத்து தீயில் கருகி உயிர்மாய்த்த ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத்திடலில் மார்ச் 5ம் திகதி இவர்களது பயணம் முற்றுப்பெற உள்ளது.

ஈகைப்பேரொளி முருகதாசனின் நினைவுதினம் நேற்றாகும். அவனது உயிர்த்தியாகதிற்கு உன்னதமான பரிகாரம் கிடைக்கவேண்டும் என்று அவனது நினைவுகளை சுமந்தபடி இன்று இவர்களது பாதங்கள் நடைபோட்டது.

உலகமே வியந்து பார்த்த விடுதலைப் போராட்டம் அதனுடைய விஸ்வரூபம் மறத்தமிழனின் மகத்தான சாதனை என்பது உலகமே அறிந்தது. எனவே ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த இனம் ஆழ நினைப்பதும் தனது உரிமையினை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு போதும் பின் நிற்க கூடாது.

எனவே, உரிமைதனை உரிமையுடன் உலகத்திடம் கேட்க மாரச் 5ம் திகதி உலகத்தமிழினமே புறப்பட்டு வருக.

http://meenakam.com/2012/02/14/39394

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். பயணிக்கும் நாட்டின் கொடியையும் கொண்டு செல்லவேண்டும்.

கடுமையான குளிர்நாட்களில் மனத்தளர்சி இன்றி செய்கிறார்கள். வாழ்க இவர்கள் வீரம்!வெல்க இவர்கள் முயற்சி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.