Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஸ்ரீலங்கா கூட்டு போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

indian%20money.jpg

இந்தியாவின் பொருளாதாரத்தை நிலை குலையவைப்பதற்க்காக நீண்ட நாட்களுக்கு முன்னரே இந்தியாவின் கரன்சி நோட்டுக்களை இஸ்லாமாபாத்தில் அச்சிட்டு முதலில் வாகா எல்லை வழியாக பஞ்சாபில் சப்ளை செய்தது. பின்னர் அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்படவே,காஷ்மீர் வழியாகவும் அதன் பின்னர் நேபாளம் மற்றும் வங்கதேசம் வழியாக சிக்கிம் மற்றும் நாகாலாந்து,மணிபூர், அசாம் எல்லைகளில் ஊடாக கள்ளநோட்டுக்களை விநியோகித்து வந்த பாகிஸ்தானின் உளவுத்துறையின் கைவரிசை இப்போது மகிந்த ராஜபக்சேவின் பூரண ஆதரவுகளுடன் சிறிலங்காவை தளமாக வைத்து மிகவும் உற்சாகமாக இந்தியாவுக்கு எதிரான பொருளாதார யுத்தத்தை முன்னெடுத்திருக்கிறது பாகிஸ்தான்.

தனது உள்நாட்டு அரசியல் நெருக்கடி மற்றும் அழ்கெய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் அபோதாபாத்தில் பதுங்கி இருந்ததை கண்டு பிடிக்க இயலாமல் போனதால், அமெரிக்காவிடம் ஏற்பட்ட தலை குனிவு, மேலும் மத அடிப்படையில் உணர்வு பூர்வமான இந்த பிரச்சனையினை வெளிப்படையாக எதிர்கொண்டால் பொது மக்களது ஆதரவினை இழந்து விட நேரும் என்பதால்,இது தொடர்பில் மக்களது கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரசு,தானோ அல்லது ஐ.எஸ்.ஐ யோ தொடர்பு படாத வகையில் இந்தியாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட தளம் தேடிய போது,தார்மீக ஆதரவு அளித்துள்ளது சிறிலங்காவின் அரசு.

இதற்கமைய, தமிழ்நாடு ,கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை இலக்கு வைத்து கள்ள நோட்டு சப்ளையை மிகவும் ஜரூராக தொடங்கி விட்டுள்ளனர்.முதல் கட்டமாக ஏறத்தாழ 46 ஆயிரம் கோடி ரூபாயிக்கு இந்தியாவின் கள்ள நோட்டுக்கள் ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ளது.ஸ்ரீலங்கா பாதுகாப்பு துறையின் மிக முக்கிய நபர் ஒருவரின் மேற்பார்வையில் முதல் கட்ட விநியோகத்தில் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இருந்து முதலில் தூத்துக்குடிக்கு அருகில் கடத்தி வரப்பட்ட இந்தியப்பணம்,இரண்டாம் கட்டமாக கடலூருக்கு அருகில் உள்ள கடற்கரை கிராமத்தை

அண்மித்து இந்தியாவினுள் நுழைந்தது.இந்தியாவினுள் விநியோகிக்கப்படுகின்ற இந்த பணம் ஐநூறு மற்றும் நூறு ரூபாய் முக மதிப்பு கொண்டவையாகும்.இந்த கள்ளப்பண விநியோகத்தை இயக்குவதற்கென்றே கொழும்பில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் தனி அலுவலகத்தையே இயக்கிக்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவினுள் விநியோகிக்கப்படுகின்ற பணத்தில் 30 சதவீதம் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய தீவீரவாதிகளிடம் இருப்பில் வைத்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா தன்னுடைய தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக சிறிலங்காவை சார்ந்திருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

http://www.eeladhesa...ndex.php?option

இந்தியாவை இராணுவரீதியாக உடைக்க முடியாது, பொருளாதார ரீதியாகவே, குறிப்பாக தென் மாநிலங்கள், பிரிவை உருவாக்க முடியும்.

பாகிஸ்தான், சிங்களத்திற்கு பின்னால் சீனாவும் இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.