Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் இனவழிப்புக்கு நீதிகோரியும், தமிழீழத்தில் தொடரும் சிங்கள ஆட்சியாளரின் அடக்குமுறையை அம்பலப்படுத்தவும் 27.02.2012 திங்கள் அன்று ஐ.நா முன்றலில் அணிதிரள்வோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Germany_Tamil_Erayanmai2011.jpg

அன்பான தமிழ் மக்களே !

எதிர்வரும் 27.02.2012 திங்கள் அன்று சுவிஸ், ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரானது முதல்தடவையாக அனைத்துலக நாடுகள் ஒன்றிணைந்து சிறிலங்கா சிங்கள இனவாத அரசின் போலி ஜனநாயக முகத்திரையை கிழித்து தமிழர் இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதஉரிமைமீறல்கள் போன்ற மானிடத்திற்கெதிரான குற்றச்செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துரைத்து அதற்கான தண்டனையை வழங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படலாமென அனைத்து தரப்பினராலும் எதிர்வு கூறப்பட்டுவருகிறது.

அதேவேளை சிறீலங்கா சிங்கள இனவாத அரசானது தமிழர் தாயகத்தில் தமிழ் அரசியல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்தவாறு நல்லிணக்க ஆணைக் குழுவென்றும், இன நெருக்கடிக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவென்றும் உலகநாடுகளை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறது.

இந்நிலையில்; ஐரோப்பிய தமிழர்களாகிய நாம் அனைவரும் ஐ.நா முன்றலில் அணிதிரண்டு சிங்கள ஆட்சியாளரால் நடாத்தப்பட்ட தமிழர் இனவழிப்புக்கு நீதிகோரியும், தமிழீழத்தில் தொடரும் சிங்கள ஆட்சியாளரின் தமிழர் இனவழிப்பு, மனிதஉரிமைமீறல்கள், அடக்குமுறைகள் என்பவற்றை அம்பலப் படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் மனச்சாட்சியை தட்டியெழுப்பி, எமது விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத் தன்மையை விளங்கவைத்து எமது விடுதலையை வென்றெடுக்க மேற்படி ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரை பயன்படுத்துவோம்.

இவ்வேளையில் சிறிலங்கா சிங்கள இனவாத அரசின் தமிழர் இனவழிப்புக் கெதிரான தமிழர்களின் ஜனநாயக, இராஜதந்திர போராட்டத்தை பல மட்டங்களில் முன்னெடுத்து தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க செயலாற்றி வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் எதிர்வரும் 27.02.2012 திங்கள் அன்று சுவிஸ், ஜெனீவா ஐ.நா முன்றலில் "ஈகைப்பேரொளி முருகதாஸ் திடலில்" நீதிக்காய் ஒன்றிணைவோம் என்ற கவனஈர்ப்பு எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தமிழ் மக்களின் துயரங்களையும், விடுதலை வேட்கையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஜெனீவா வரையான மனிதநேய நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 27.02..2012 திங்கட்கிழமை அன்று ஜெனீவா சென்றடையவுள்ளது.

27.02.2012 திங்கள் அன்று ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளென்பதால் உலக நாடுகளினதும், அனைத்துலக ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும் நாளாக இருப்பதால் குறிப்பாக இன் நாளில் ஐரொப்பிய தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு எமது விடுதலைக்கான குரலை ஓங்கி ஒலிப்பதன் மூலம் தமிழர்களுக்கான நீதியைக்கோர முற்படும் நாடுகளின் கோரிக்கைகளை வலுவடையச் செய்வதோடு எமது நன்றியினையும் தெரிவிப்போமாக.

எனவே யேர்மன் வாழ் தமிழ் மக்களும் எதிர்வரும் 27.02.2012 திங்கள் அன்று சுவிஸ், ஜெனீவா ஐ.நா முன்றலில் "ஈகைப்பேரொளி முருகதாஸ் திடலில்"நடைபெறும் கவனஈர்ப்பு எழுச்சி நிகழ்வில் உலகத் தமிழர்களுடன் இணைந்து உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு

யேர்மனி.

http://www.seithy.co...&language=tamil

மக்களின் எண்ணிக்கையை விட அமைப்புகளின் எண்ணிக்கை தான் அதிகம் போல் உள்ளது.

இவர்கள் 27.02. நடத்துகிறார்கள். மற்ற அமைப்பு அதே இடத்தில் ஒரு வாரம் களித்து நடத்துகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.