Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுடனான இலங்கை உறவில் எமக்கு எந்தவித பிரச்சினையும் பாதகமும் இல்லை:எஸ்.எம். கிருஷ்ணா தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MS_kirishnha-FM-india_150AB.jpg

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவால் இந்தியாவிற்கு எதுவிதமான பிரச்சினையும் இல்லை என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது, இலங்கை - இந்தியா இடையேயான உறவுநிலை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட அண்டைய நாடுகளுடன் சகோதரத்துவத்துடனான நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்தியாவின் கொள்கை எனவும் அண்டை நாடுகளில், இன்னல்களை ஏற்படுத்தல் மற்றும் பிரிவினையைத் தோற்றுவிப்பது தமது நோக்கம் அல்ல எனவும் கிருஷ்ணா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலப்பகுதியினுள் இருந்த இலங்கைக்கு இடையேயான சகோதரத்துவத்தை தொடர்ந்தும் பேணி வருவதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், சீனாவுடன் இலங்கை மேற்கொண்டிருக்கும் உறவில் இந்தியாவிற்கு எந்தவித பிரச்சினையும் பாதகமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். சிறந்த பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள இலங்கை இந்தியாவுடன், பொருளாதார ரீதீயான உறவினை பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் குடிமக்கள் கொல்லப்படும் போது கூட எமது நட்புறவு கெட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட ஒன்றை எதனாலும் கெடுத்துவிட முடியாது! (அடிவாங்கியவன் நோகவில்லை என்ற வகையாக தன் கௌரவத்தைக் கோப்பாற்றுவதை ஒத்தது.)

கெடுகுடி சொற்கேளாது. சாகிறவன் மருந்து குடியான். சிங்களத்திற்கு நாம் சொன்னால் நம்ப மாட்டாது.

மடியைப்பிடித்து கள்ளுக்கொடுத்து மயிரைப் பிடித்து பணம் வாங்குபவர்கள் அமெரிக்கர். ஈரான், ஈராக் மாதிரி பண முதளைகள் தொடக்கம் இலங்கை மாதிரிப் பிச்சைக்காரப் பூரான் பூச்சிகள் வரைக்கும் இதற்கு விதி விலக்கல்ல. ரணில் காலத்தில் பிளேக் புலிகளின் கப்பல்களை தான் அறியாமல் சந்திரிக்காவிற்குக் காட்டிக்கோடுத்ததற்கு ரணில் அமெரிக்கா மீது கோபப்பட்டார். ஆனால் அவருக்கோ சந்திரிக்காவுக்கோ அமெரிக்கா, தனக்கு விரும்பாத சீனா-வடகொறிய கூட்டுக்காகத்தான் அதை செய்கிறது என்பது புரிந்திருக்கவில்லை. அதனால்த்தான் மகிந்த என்ற எலி அதே சீஸ்சுக்கு திரும்பத் திரும்ப போய் இன்று பொறிக்குள் வடிவாக மாட்டியிருக்கிறது. அதாவது அமெரிக்கர்கள் இலங்கைக்காக, புலிகளின் கப்பல்களை வானத்திலிருந்து படமெடுப்பதோடு சற்றலைடினூடாக போய்வரும் செய்திகளையும் பிரதி எடுப்பதாகக் கூறிவிட்டு இப்போது இலங்கையின் திருகுதாளங்களையும் சேர்த்துப் படமும் பிடித்து பிரதியும் எடுத்து வைத்திருக்கிறார்கள். எதிரிகள் எல்லோரையும் அழைத்து வந்து உதவி எடுத்தவர்கள், சந்தேகப்பட்ட சர்வதேச நாடுகள் எல்லோருடையதும் கைப்பிடியை தங்கள் குடும்பி மயிரில் பட விட்டுவிட்டார்கள். அறக்கூர் முழு மொட்டை போல இவர்களின் அதி உன்னத ராஜதந்திரங்கள் இப்போது தங்களை மோடையாக்கள் ஆக்கப்போகிறதா என்று காலம் தாழத்திப் பயப்படுகிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன் தூதுவராக இருந்த பிளேக் இலங்கை ஈரானுடன் எத்தகைய உறவை வைத்தாலும் தமக்கு அதில் ஆட்சேபணை இல்லையென்றார். ஈரான் இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் கொடுத்து இலங்கையின் சுத்திகரிப்பாலையைப் புதுமைப் படுத்தத்தான் வந்தது. அமெரிக்கா, கள்ளனைப் போகவிட்டுப் பார்த்திருந்துவிட்டுக் கம்பி வேலிக்குக்கீழ் முது இருக்கும் போதுதான் கடிக்கத் தொடங்குகிற நாய் போன்றது. இருந்தாலும் அந்தக் கடனை வாங்கி முதலாக்கி ஆலையையைத் திருத்தியிருந்தால் இந்த 50 வருட பழைய ஆலையால் ஏதாவது உபயோகங்கள் வந்திருக்கலாம். இலங்கை அதைச் செய்யவில்லை. கடனை வாங்கி சோக்குப் பண்ணத்தான் முயன்றார் மகிந்தா. அதனால்த்தான் இன்றைய நிலை.

ஆலையைப் புதிப்பிக்காததால் ஈரானிய எண்ணையைத்தான்அ அந்த ஆலையில் சுத்திகரிக்கலாம். பிளேக்கின் வாக்குமூலம் காற்றில் பறந்துவிட்டது. அதாவது ஈரானிய எண்ணையை அமெரிக்காவின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமல் வாங்க முடியாது. இலங்கையின் தேயிலையை ஈரானுக்குத்தான் விற்றாக வேண்டிக்கிடக்கிறது. ஈரானிடம் எண்ணையை வாங்காவிட்டால் தேயிலையை ஈரானுக்கு விற்கமுடியாதுமட்டுமல்ல, ஏற்கனவே விற்ற தேயிலையின் பணத்தைக் கூடப் பெற முடியாது. ஈரானிடம் சோக்குப்பண்ண வாங்கிய கடனைத் திரும்பப் பெற ஈரான் மயிரைப் பிடிக்கப்போகிறது. ஈரானிடம் இந்தியாவும், சீனாவும் எண்ணை வாங்குவதைப் பார்த்துவிட்டு இலங்கையும் பொன்மானில்ப் போய் விழுந்தது. சீனா 20% ஈரானிய கொள்வனவுகளை இரண்டுமாதங்களில் 10%மாக குறைத்ததுமன்றி, எஞ்சிய 10% வீததிற்கும் மற்றைய நாடுகளிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கிறது. இலங்கை ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யாவிட்டால், ஈரானியர்களுடன் இரத்த உறவிருக்கும் இந்தியா அந்த இடத்தைப் பிடிக்க ஒரு கணம் தாமதிக்காது. இலங்கையின் இந்த ஆப்பிழுத்த குரங்கு நிலமையைத்தான் யாழில் காணப்படும் இன்னொரு திரியில் வரும் இலங்கைப் பொருளாதார நிபுணர் விளங்க வைக்கிறார்.

ராஜதந்திரம் என்று எண்ணிக்கொண்டு பிளேக்கின் வாக்குறுதியை நம்பி, ரவுடி நாடுகள் தேடி பொருளாதார உறவுகளை வைத்துக்கொண்ட இலங்கை இன்று அமெரிக்காவை நோகிறது. இலங்கைக்கு பணம் ஈட்டும் துறைகள், தேயிலை, ரப்பர், புடவை, உடல் உழைப்பு, உல்லாசப் பயணம் போன்றவை. இவற்றிலேயேதான் இந்தியாவும் சீனாவும் கூட போட்டி போடுகின்றன. அதாவது உண்மையான பொருளாதாரப் பண்டமாற்று இலங்கைக்கு இந்திய சீன நாடுகளுடன் ஏற்பட முடியாது. மேலும் சீனாவின் தந்திர வியாபாரம் தனது உறவுநாடுகளுக்கு மலிந்த விலையில் உடல் உழைப்பை ஏற்றுமதி செய்வது. அதையேதான் சீனா இலங்கைக்கும் செய்கிறது. இலங்கையின் மலிவான தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்க விடப்பட்டிருகிறார்கள். இலங்கையின் ராஜதந்திரங்கள் பொருளாதார ரீதில் எள்ளவும் எடுபடவில்லை. ஏதோ எதிரிகள் எல்லாரிடமும் ராஜதந்திரமாக கடனுக்கு ஆயுதம் வாங்கி புலிகளை வெற்றி கண்டுவிட்டது

அன்று பிளேக், ஈரானிய-இலங்கை உறவில் தமக்கெதுவும் பாதகமில்லை என்றார். அதாவது இலங்கை ஈரானுடன் உறவுவைத்தால் அதன் விளைவுகள் இலங்கையைத்தான் பாதிக்கும். ஆகவே அமெரிக்கா அதுபற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்பதுதான் அர்த்தம். சுத்த மோடயாக்களாக இருந்த மகிந்தா கூட்டம் அதன் பொருளை அறியாமல் ஈரானுடன் உறவைத்தொடர்ந்து வைத்து இன்று அவதிப் படுகிறார்கள்.

இப்போது பிளேக்கின் இடத்தை கிருஸ்ணா எடுத்திருக்கிறார். பிளேக் புகழ்பெற்ற ராஜதந்திரியின் மகன். அரசியல் படிப்புக்கு உலகப்பிரசித்தி பெற்ற யோன் கபின்ஸ் சர்வகலா சாலையில் சர்வதேச அரசியல் படித்தவர். உலகத்தின் வலிமையான ராஜத்திர தொழில் நுட்பங்களால் பின்னூட்டம் பெறுபவர். அவரை விளங்கிக் கொள்ள முடியாமல் இலங்கை ஒரு பிழை விட்டிருந்தால் அது குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் என்று போய் முடிந்துவிடும். "கமோன் மான்". இப்போ இது நம்ம கிருஸ்ணா. யாருக்கும் புதியவர் அல்ல. தனது ஸ்கிரிப்டை வைத்த இடம் தெரியாமல் அடுத்தவரின் ஸ்கிரிப்பை எடுத்து மள மளவென்று விளாசித்தள்ளிவிடும் பேதை. அதாவது இந்தக் கிளப்புலி மகிந்தாவைப் பார்த்து உனக்கு இப்போது என்னிடம் தேவை இருக்கு; ஐ.நாவில் உன்னை எனக்குக் காப்பாற்ற முடியும்; நீ இதைக்கண்டு அதைக்கண்டு பயப்படாமல் கிட்டவந்து நம்மிடம் பழகு என்றுதான் சொல்கிறார்.

மகிந்தாவுக்கும் கிருஸ்ணாவைத் தெரியும். மகிந்தவை பண்பின் சிகரம் என்று கிருஸ்ணா பந்தம் பிடிக்க முயன்ற போது அவர் ஏன் தன்னிடம் வந்திருக்கிறார் என்பது மகிந்தாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவை விட்டால் போக வேறு வழிகளும் இருக்கிறதா? இந்தியாவும் இதற்காகத்தான் இதுவரை சீனாவின் நட்பைக் கண்டும் காணாதது மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறதா? இதில் இலங்கைக்கு நாம் என்ன சொல்ல இருக்கிறது. இல்லை நாம் அதைச் சொல்லிவிட்டால் இலங்கை அதை கேட்டு அப்படியே செய்து இந்தியாவிடம் சரணாகதி அடையாமல் தப்பித்துக் கொள்ளவா போகிறது?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.