Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா சென்ற அமைச்சர்கள் பட்டாளம் இன்று கொழும்பு திரும்புகிறது!

Featured Replies

ஜெனிவா சென்ற அமைச்சர்கள் பட்டாளம் இன்று கொழும்பு திரும்புகிறது!

Published on March 2, 2012-7:53 am ·

thamara-150x150.jpgஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட கூட்டம் ( அரசுகளின் அமைச்சர்கள் மட்ட) நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து சிறிலங்காவிலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இன்று கொழும்பு திரும்புகின்றனர்.

இன்று இரண்டாம் கட்ட கூட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை குழுவுக்கு ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம் தலைமை தாங்க உள்ளார்.

இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது.

http://www.thinakkathir.com/?p=31678

சரியும் ரூபாயால் வந்த பணக்கஸ்டம் போலுள்ளது :D

இனி ஆண்கள் இருந்து வேலையில்லை என்று நினைத்தார்களோ தெரியவில்லை. :)

சரியும் ரூபாயால் வந்த பணக்கஸ்டம் போலுள்ளது :D

ஈரான், சவுதி, சீனா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு கொடுத்த லஞ்சத்தினால் வந்த பஞ்சமாயிருக்கும்.

போய்வா மகிந்த போய்வா கண்ணில் புன்னகை சுமந்து போய் வா!

கதிரர் ஏறி கவிண்டு கொட்டுண்ட குதிரை இந்த வெளிநாட்டு துளாவாரக்குதிரை. அவர் ஓடின ஓட்டத்தைகண்டு பிரமிக்காதவர்கள் இல்லை. ஆனால் விழும் போது கழுத்தான் குத்தியும் சேர்ந்துதான் முறிந்து போய்விட்டது.

கதிரர் மீது வந்த அதிருப்தியால் மங்களவின் கையிற்கு வந்தது குதிரை. விழுந்த உடனேயே எழுந்து, "அன்று விட்டன் கொண்டலடி" என்று ஓடிபோய்விட்டார் மங்கள.

ஏறி முழுதாக குதிரை மீது அமர்ந்தால் குதிரை விழுத்தும் என்ற சந்தேகத்துடன் பீரிசு குதிரையுடன் சேர்ந்து மூச்சிரைக்க மூச்சிரைக்க தான் இவ்வளவு நாளும் தன்ரை நெஞ்சாலை குதிரையின் அருகில் "ஸ்பிரிண்ட்" ஓடிப்பார்த்தார்.

பீரிசு விடுகிற டூப்பை பார்த்துவிட்டு, அவரை அப்படியே குதிரையோடு ஓடிக்கொண்டிருக்க விட்டுவிட்டு, மகிந்த சமரசிங்காவை வலோற்காரமாக குதிரையின் மீது தூக்கி அமர்த்தினார் மகிந்த ராசபக்சா. இருத்தியவுடனேயே சறுக்கிக்கொண்டு வந்து நிற்கிறார் சமரசிங்கா.

இதுதான் சந்தர்ப்பமாக, சிறீ லங்காவிலிருந்து வந்த சிங்களச் சிறுக்கித் துணை நடிகைகள் பு(ப)டைசூழ அல்லிராணி தாமரா குணநாயகம் குதிரை மீது தடால் என தாவியேறி அமர்ந்திருக்கிறா. தமிழர் என்ற முறையில் கதிரர் மாதிரி ஓடுவாரா அல்லது அதையும் விடத்திறமையாக ஓடுவாரா சொல்லத் தெரியாது. மேலும் தமிழர் என்ற முறையிலேயே,முடிவும் கதிரின் முடிவுவரைக்கும் போகலாம். ஆனால் அத்ற்கு மேல் ஓடமுடிந்தாலும் தாமரா ஓடிக்காட்டுவாரா? அதைவிடத்திறமையாக ஓடினாலும் முடிவு அதற்கு மேல் போக ஒன்றும் இல்லையே.

வாழ்த்துக்கள் சமரசிங்கா! பெற்ற தாய் மாதிரி தக்க தருணத்தில் வந்து தாமரா கைகொடுத்தா!

ஆகவே

போய்வா மகிந்த போய்வா கண்ணில் புன்னகை சுமந்து போய் வா!

அது சரி கருணாவின் தோழி ராதிகா ஐ.நா பொதுக்காரியதரிசி போட்டிக்கு இலங்கையால் தெரியப்பட இருப்பதாகக் கூறினாவே. ஆள் இப்போ எங்கே?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.