Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகர்கோவில் வடக்கு மக்களின் கடற்றொழிலாளர் வாழ்க்கை வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nakarkovil.jpgயாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் வடக்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு……!

சுமார் 3000 குடும்பங்கள் கடற்றொழிலையே செய்து வாழ்ந்துவந்தார்கள். அவற்றில் கடற்றொழில் மூன்று பிரிவுகளாக கொண்டுள்ளது. 1 கரைவலைத்தொழிலாகவும் 2 மோட்டார்படகுத்தொழிலாகவும், 3 கட்டுமரசிறுதொழிலாகவும் அமைந்துள்ளது. இம்மூன்று தொழில் செய்பவர்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் எமதுகிராம எல்லை இந்துசமுத்திரத்தில் சிறப்பபக செய்துவந்துள்ளார்கள்.

இக் கடற்றொழில்லுக்கு பெருந்தொழிலாக கருதப்படுவது கரைவலைத்தொழிலை செய்பவர்கள் (சம்மாட்டி) ஆவார். இவர்களுள் ஒருவரை வருடத்திற்க்கு ஒருதடவை குலுக்கல் முறையில் தெரிவுசெய்து வரும் கரைவலைத்தொழில் செய்யும் சம்மாட்டியையே அவ்வாண்டு தலைவராக கருதப்படுவார்கள். இவர்தெரிவுசெய்யப்படும் ஆண்டு வரும் எந்தப்பொறுப்புக்கள் ஆனாலும் தெரிவு செய்யப்படும் கரைவலைத்தொழில் முதலாளி (சம்மாட்டி) அவரே முன்னின்று செய்வதே இதன்முறையாகும். இந்தத்தலைவரை சீட்டிழுப்புமூலம் தெரிவுசெய்வது ஒரு பாரம்பரிய முறையாகும். அம்முறையின் விரிவு……..!

தைத்திருநாளாகக் கொண்டாடும் தைப்பொங்கல் அன்றயதினம் புதுப்பொங்கல் உண்டு மகிழ்ந்து முடிந்ததும். மறுநாள் அனைத்து தொழிலாளர்கள் அனைவரும் முருகையாதேவஸ்தான முற்றத்தில் ஒன்றுகூடல் நடைபெறும். அந்த ஒன்றுகூடலில் அனைவரின் விருப்ப வேண்டுகோளுக்கிணங்க இந்தவருடத்தைலைவரை தெரிவுசெய்வது எப்போது என்று ஒரு திகதியை முடிவுசெய்வார்கள். அதே ஒன்றுகூடலில் கடந்தவருட வரவு செலவு கணக்கினை அனைவர் முன்னிலையில் விரிவாக எடுத்துரைக்கப்படும். அதன் பின்னர் இவ் ஒன்றுகூடலை நிறவுசெய்வார்கள்.

பின்னர் அனைத்து தொழிலலளர்களும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் ஒன்றுகூடி கரைவலைத்தொழில் செய்பவர்களின் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதி ஒருதட்டில் வைத்து அதைபூஜையில் வத்து பூஜை முடிந்ததும் அத்தட்டில் உள்ள சீட்டுக்களில் ஒரு சீட்டினை ஆலய பூஜகராலோ அல்லது ஒரு சிறுவர்களாலோ ஒரு சீட்டினை எடுத்து அச்சீட்டில் வரும் பெயர் உடையவரே அவ்வாண்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பூரணமரியாதைகள் அனத்து கிராமமக்களாலும் கொடுக்கப்பட்டு அன்றயதினமே தெரிவு செய்யப்பட்ட தலைவர் அனைவரின் ஆலோசனைகளுடன் பஞ்சாங்கத்தின் உதவியுடனும் புதுவருட ஆரமத்தொழிலுக்கு (நாள்வலை) மங்களகரமான ஒரு திருநாளை தெரிவுசெய்வார்கள். (சுமார் ஒருவாரத்திற்கு பின்பு உள்ள ஒருநாளாகும்) அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட தலைவருக்கு தலைப்பாய் கட்டி அனைவரும் அவரை சகல மரியாதைகளுடன் கிராம எல்லைக்குள் அழைத்து கொண்டுசெல்லப்படுவார்கள்.

குறிப்பிட்ட அந்த நாள்வருமுன்னர் அனைவரும் பனைமர ஓலை (சார் ஓலை) வெட்டி புதுப்பறி செய்து (இளைத்து) புதுவருட புதுத்தொழிலுக்கு (நாள்வலை) ஆயர்த்தம் செய்துகொள்வார்கள். புதுவருடம் கடந்து புதுத்தொழில் ஆரம்பிக்கும் வரையில் (சுமார் இரண்டு கிழமைகள்) எவரும் ஒருவர் வீட்டில் இருந்து இன்னொருவர் வீட்டிற்கு எந்தவொரு பொருள்களையும் பரிமாறிக்கொள்ளமாட்டார்கள், (பண்டமாற்றம்) அத்தோடு எந்தஒரு தொழிலாளியும் கடற்தண்ணீரில் தொட்டுக்கொள்ளமாட்டார்கள், இகிராமத்தில் புதுவருட புதுத்தொழில் (நாள்வலை) தொடங்கும் வரையில் அனைவரது வீடுகளிலும் மீன் சமையல் செய்யமாட்டார்கள் இதுவும் இக்கிராமத்தின் ஐதீகமமகும்.

புதுவருட புதுத்தொழில் (நாள்வலை) ஆரம்பநாளான அன்று…! அனைவரும் அதிகலை கிராமத்தின் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திர்கு சென்று ஆலய குளைவாழைக்குளத்தில் திருமுளுக்காடி முழுமுதற்க்கடவுளான மூலஸ்தானத்தில் அமர்ந்த்ருந்து இக்கிராமத்தைக்காக்கும் நாகதம்பிரானைத் தரிசித்து தொடர்ச்சியாக கண்ணகை அம்மன், நரசிம்மவைரவர், புலவிலோடை நாகதம்பிரான், முருகையாதேவஸ்தானம் ஆகிய ஆலயங்களை தரிசித்து அனைவரு அவரவர் இல்லம் வந்தடைவார்கள். இல்லம் வந்த தொழிலாளர்கள் காலை உணவருந்தி புதுவருட புதுத்தொழிலுக்கு (நாள்வலை) ஆயர்த்தமாக நிற்ப்பார்கள். காரணம் அவ்வருட தலைவர்தான் முதன்முதலில் இல்லத்தில் இருந்து புறப்படவேண்டும் அதற்க்காக அனைத்து தொழிலாளர்களும் காத்து நிற்ப்பார்கள். அவ்வருடத் தலைவர் புறப்படும் போது பட்டாசு வெடிகள் கொழுத்தி அனைத்து தொழிலாளர்களுக்கும் சைகைஒலி மூலம் அவர் புறப்படுவதை உணரவைப்பார். அதன்பின்னர் எல்லோரும் புறப்படுவார்கள். துவைத்த வெண்ணிற ஆடைஉடுத்தி புதுப்பறிகளுடன் அனைவரும் ஒற்றுமையாக செல்வார்கள் இதுவே இக்கிராமத்தின் கண்கொள்ளாக் காட்ச்சியாகும்.

அனைவரும் கடற்கரைக்கு போகுமுன்னர் கடற்கரைப்பிள்ளையார் (இக்கிராம வரலாற்றில் குறிப்பிடப்பட்ட கெளத்தந்துறை பிள்ளையார்) ஆலயத்தில் விநாயகரை தேங்காய் உடைத்து வழிபடுவதற்க்காக ஆலய பூஜர் முன்னிலையில் ஒன்றுகூடுவார்கள். விநாயர் வழிபாடு முடிந்ததும் அனைவரும் கடற்கரையை சென்றடைவவர்கள். அங்கு அவ்வருட தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் முதலில் கடற் கரையோரம் சென்று வங்கக்கடலை வணங்கி கடற்த்தண்ணீரை அள்ளி தலைமீது தெழிர்த்து கொண்டுசென்ற புதுத்தொழிலுக்கும், புதுப்பறிக்கும் கடற்த்தண்ணீர் தெளிர்த்துக்கொள்வார். அதன் பின்னர் அனைவரும் அவர்காட்டிய வழியினை பின்தொடர்வார்கள்.

இதன்பின்னர் அனைவரும் மீன்பிடித்தொழிலை ஆரம்பிப்பார்கள். அன்று பிடிக்கும் மீன்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனைவரது புதுப்பறிகளை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தி வைத்து சமமாக பகிர்ந்து புதுப்பறியினுள் போட்டுக்கொள்வார்கள். மீனுடன் சேர்த்து விநாயருக்கு உடைத்த தேங்காயினையும் சிறுசிறு துண்டாக வெட்டி கலந்துகொள்வார்கள். (“இச்சமயத்தில் களைப்பாற கொண்டுசெல்லும் பலகாரங்களான பிடிக்கொழுக்கட்டை, ஆலங்காய்ப்புட்டு, பழங்கள், பனங்கிழங்கு ஆகியவற்றை ஒருவருடயதை இன்னொருவர் அன்பாக திருடிஉண்டு குறும்புச்சண்டடகளும் பிடித்து இன்பக்குதூகலமடைவார்கள்”) மீன் பகிர்வு முடிவடைந்ததும் அனைவரது புதுப்பறிகளை சிறுசிறு கோர்வைகளாக சேர்த்து ஒன்றாக ஒருதடிமீது கோர்த்து தூக்கிக்கொண்டு அனைவரும் பழையமீன் வாடி அமைந்தஇடமான பனைக்கூடல் (அந்தபனைக்குடலை முன்னோர்கள் றாத்தல்பனை என்று அழைப்பார்கள்) அருகே எல்லோரும் ஒன்றுகூடி கலந்துரையாடல் நடைபெறும் இக்கலந்துரையாடலில் இக்கிராமத்தில் உண்டான, உண்டாகும், கருத்துமுரண்பாடுகள், ஒவ்வொருவருடைய பிரச்சினைகளினையும் பகிர்ந்து அனைவரும் ஆலோசித்து ஒரு நியாயமமன தீர்மானம் எடுக்கப்படும். (இந்தவேளையில் சிறுவர்கள் தங்களை மறந்து காய்ந்த பனை ஓலையினில் காற்றறடி செய்து காற்றில் பிடித்து விளையாடி மகிழ்வார்கள்)

அதன்பின் அனைவரும் ஒன்றாக பலபலகுறும்புக் கலகலப்புடன் இக்கிராமகுடியிருப்பு எல்லைக்குள் நுளைவார்கள். குடியிருப்புக்குள் நுளைந்ததும் ஆறுகம் அழகராசா(சின்னத்தம்பி) அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் அனைவரும் தத்தமது பறிகளை அவரவரே எடுத்துக்கொண்டு கூக்குரலுடன் அவரவர் இல்லம் நோக்கி செல்வார்கள். இல்லம் சென்றதும் இவர்களை அன்போடு வரவேற்பதற்க்காக அன்னையும், மனைவியும் காத்திருப்பார்கள். நாம் கொண்டுசெல்லும் புதுமீன் பறியினை இருகரங்களாலும் பற்றிக்கொண்டு கூறுவார்கள் வீட்டிற்க்குள் சென்று “மங்களவிளக்கினைப்பார்க்கவும்” என்று அவ்வேண்டுகோளிற்கிணங்கி அங்குசென்று அவ்விளக்கினைப் பார்த்து இறைவனை பிரார்த்திப்பார்கள். இதுவும் இக்கிராமத்தின் ஐதீகமாகும்.

பின்னர் புதுவருடப் புதுமீனை இவர்களது வீட்டு முதியோர்களால் (அம்மா, அம்மம்மா,இவர்களால்) எடுத்துச்செல்லப்பட்டு நாகர்கோவில் தெற்கில் அமைந்திருக்கும் மக்களால் அம்மீனை விலைபேசசமலே மீன்களை வாங்கிக்கொண்டு பணத்தினையும் பண்டங்களையும் அள்ளி கொடுப்பார்கள் அளவுஏதும் இல்லாமல் காணம்..! அன்றயதினம் பிடிக்கப்படும் மீன்களுக்கு விலைமதிப்பே இல்லை என்பதாகும்.

இக்கிராமத்தில் நடைபெறும் இப் புதுவருடப் புதுத்தொழில் (நாள்வலை) செய்யும் இக்கொண்டாட்ட நாளினை ஆண்கள், பெண்கல், சிறுவர்கள் அனைவருக்கும் இதுஒரு குதூகலத் திருநாளாகும். http://thaavady.com/?p=272

!


  • a-final.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.