Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் பிரச்சினை குறித்து பேசுவோரையெல்லாம் தெற்கு அரசியல்வாதிகள் மிரட்டுவது நிறுத்தப்படவேண்டும்

Featured Replies

தமிழரின் பிரச்சினை குறித்து பேசுவோரையெல்லாம் தெற்கு அரசியல்வாதிகள் மிரட்டுவது நிறுத்தப்படவேண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கடிதம் எழுதியதை பிழையான கண்ணோட்டத்தில் பார்த்து ஆயரின் கருத்துரைக்கும் சுதந்திரத்தை தென் இலங்கை கட்டுப்படுத்த நினைப்பதும் தென்னிலங்கை கடும் போக்காளர்களால் விமர்சனத்திற்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வறிக்கையில் தொடர்ந்தும் அவர்கள் தெரிவித்ததாவது;

அரச ஊடகங்களும் அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெலஉறுமய போன்ற கட்சிகளும் பல்வேறு சிங்கள அமைப்புகளும் ஆயரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது. வடக்கே மன்னார்,கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் கடந்த யுத்த சூழலில் ஏற்பட்ட உயிரழிவு, சொத்தழிவு, கடத்தல், காயப்படுத்தல், உட்பட அப்பாவி மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாகப் பார்த்தும் அறிந்தும் உள்ளவர் மன்னார் ஆயர் என்பதை சகலரும் அறிவர்.

வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகள் தொடர்பாக நிதானமான கருத்துடன் இருந்து வருபவர் என்பது உலகறிந்த உண்மை. தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஒரு கருத்துடன் இருந்து வருவதனாலேயே நீதிகேட்டுள்ளார். அதைவிடுத்து இறைமைக்கு பாதகம் ஏற்பட்டது என மார் தட்டுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கும் போதெல்லாம் நாட்டின் இறைமை பாதிக்கிறது என்றால் இத் தீவில் சிறுபான்மையினருக்கு உரிமையில்லையா? என எண்ண வாய்ப்புள்ளது. உண்மையை வெளிப்படுத்துதல் தவறா? ஆன்மிக வாதிகள் எப்போதும் உண்மைக்கு புறம்பாக செயற்படமாட்டார்கள். இவ்வகையில் ஆயரும் உண்மைக்கு புறம்பாக கருத்துக் கூறியிருக்கமாட்டார். எனவே தான் உண்மையை உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு மதகுருவின் கடமை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

அதுமட்டுமன்றி மக்களின் வாழ்விடம் தொடர்பாக உரிமை மீறல்கள் இடம் பெறும் இடங்களில் எல்லாம் அம் மக்களின் அவலங்கள் தொடர்பான கருத்தை பிரதிபலிக்கும் நோக்கில் செயற்படுவதற்கு எந்த மதகுருவுக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் பாரிய யுத்த கள முனைகள் அவலங்களை கண் எதிரே அதீதமாக பார்த்தவர் என்ற வகையில் அநீதியான விசாரணையை வலியுறுத்துவதற்கு அவர் உரித்துடையவர்.

தென் இலங்கையில் உள்ள தலைவர்கள் போன்று கடும் போக்கில் ஈடுபடுபவர்கள் அல்லர் வடக்கு கிழக்கு சமயத் தலைவர்கள். மாறாக சமூக சமய மக்கள் பணிகளுடனேயே மனிதாபிமானத்துடன் செயற்படுபவர்கள். தனது கருத்தை சுயாதீனமாக சொல்வதற்கு ஆயருக்கே உரிமை மறுக்கப்படுகிறது என்றால் சாதாரண மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்?

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் கிறிஸ்தவ பாதிரிமார்களே அரசுக்கு எதிராக செயற்படுகின்றனர் என ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கை அரச பிரதி நிதிகளிடையே வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றுள்ளன. இவை சர்வதேசபிரதி நிதிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் போர் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் போனால் இலங்கையில் மீண்டும் மோதல் உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் றொபேட் ஒ பிளேக் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக சர்வதேச ரீதியாக பல எதிர்வு கூறல்கள் எல்லாம் கூறியுள்ள நிலையில் ஆயரின் செயற்பாட்டை அரசியலாக்குவது அனுமதிக்க முடியாது. காரணம் மக்கள் பணியாளன் என்ற வகையில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் செயற்படுவதற்கு பூரண உரிமை உள்ளது என்பதை யாரும் மறுத்தலாகாது.

ஆயருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக சகலரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசு இயலாமையின் வெளிப்பாட்டால் மாறுபட்ட முகங்களில் செயற்படுவதை உலகம் அறிந்து கொண்டு வருகிறது. விரைவில் நீதி கிடைக்கும் என்பது நியதி என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/11305-2012-03-17-00-30-31.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.