Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

Featured Replies

அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு

ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை' நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.

இப்பிரேரணையாது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் பிரேரணையும் மனித உரிமை பேரவையின் தீர்மானமும், அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவுகளை எடுப்பதற்;கும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உணரப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏவும் எனவும்; நம்புகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது மனித உரிமை கூட்டத்தொடரின் 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின்' நிறைவேற்றத்தினை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முதற்;கட்ட படியாக கருதுகிறது.

19ஆவது மனித உரிமை கூட்டத்தொடரின் 'இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின்'; நிறைவேற்றமானது தமிழ் மக்கள் நேச நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இப்பிரேரணையானது நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்ப நேரடியாக இப்பிரேரணையோடு தொடர்புபட்டிருந்த நாடுகளுடன் கூட்டத்தொடருக்கு முன்னரும் கூட்டத்தொடரின் போதும் பல்வேறு தொடர்பாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தது.

இந்தப் பிரேரணையை நிறைவேற்றுகிற கருமத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடனும் இராஐதந்திர தீர்க்கதரிசனத்துடனும் செயற்பபட்டதென்பது இப்பொழுது எமது மக்களுக்கு தெளிவாகியிருக்குமென்று நாம் நம்புகிறோம். தொடர்ந்தும் தமிழ் மக்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டவர்களாக பொறுப்பாகவும் நிதானமாகவும் செயற்படுவோம் என எமது மக்களுக்கு உறுதி கூறுகிறோம்.

அரசியல் இலாபம் பெறும் நோக்குடனும்; மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் நோக்குடனும் செயற்படுகிறவர்களின் பிரச்சாரத்தை நம்பாமல் எமது ஐனநாயக சக்தியாக தொடாந்தும் செயற்பபடுமாறு எமது மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38106-2012-03-22-12-00-38.html

  • தொடங்கியவர்

ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்திற்கு எதிரானது; நாட்டு மக்களுக்கு எதிரானதல்ல: மனோ கணேசன்

ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் திட்டவட்டமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது ஆகும். அது இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. அதை இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானமாக காட்டி தமது குரூர பேரினவாத முகத்தை மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கிறது. இந்த உண்மை மூளையுள்ளவர்களுக்கு விளங்க வேண்டும். இதை விளங்கி கொள்ள முடியாதவர்கள், முட்டாள்களாகவோ அல்லது அரசுக்கு துதிபாடும் எடுபிடிகளாகவோ அல்லது இனவாதிகளாகவோ இருக்க வேண்டும்.

உங்கள் பொய்களை நம்ப நாம் இனியும் தயார் இல்லை என உலகம் கூறிவிட்டது. திருந்துவதா அல்லது மேலும் படுகுழியில் விழுந்து நாசமாவதா என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன.

மனித உரிமை மற்றும் தேசிய இனப்பிரச்சினை ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது இன்று உலகம் அறிந்த உண்மை ஆகிவிட்டது. அதற்கும் மேலாக புலிகளின் ராணுவ தோல்வியை தமிழ் பேசும் மக்களின் தோல்வியாக மட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதனாலேயே தமிழர் பிரதேசங்களில் இன்னமும் ராணுவ நிர்வாகம் நடைபெறுகிறது. வடக்கு - கிழக்கில், தமிழர்களின் காணிகள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் காணிகள் மட்டும் அல்ல, முஸ்லிம் மக்களின் காணிகளும் சூறையாடப்படுகின்றன. முழு நாட்டையும் சிங்கள, பெளத்த நாடாக மாற்றும் நோக்கமே இதுவாகும்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக பாரிய மனித உரிமை மீறல்களை அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தியது. அரசாங்கத்தின் இந்த போக்குக்கு எதிராகவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் பொய்களை நம்ப நாம் இனியும் தயார் இல்லை என உலகம் கூறிவிட்டது. திருந்துவதா அல்லது மேலும் படுகுழியில் விழுந்து நாசமாவதா என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.

http://www.tamilmirr...2-12-23-41.html

  • தொடங்கியவர்

புதிய அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-22 11:11:57| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்புக்காக காத்திருக்கின்றது. அமெரிக்காவால் கொண்டு வரப் படும் தீர்மானம் வெற்றிபெறுமா? தோற்கடிக்கப்படுமா? என்பதில் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள கலக்கம் உச்சமடைந் துள்ளது.

தீர்மானம் நிறைவேறினால், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற ஏக்கம் என்பதற்கப்பால், குற்றவாளிக் கூண்டில்- யார் யார் ஏற வேண்டி வரும் என்ற அந்தரிப்புகளும் கூடவே, குழப்பிக் கொள்கிறது. தீர்மானம் நிறைவேறினால் அரசில் இருந்து அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் முதலில் வெளியேற்றப்படுவர்.

இதுவே அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும். சம்பிக்க ரணவக்கவினதும், விமல் வீரவன்ச வினதும் நாவால் தான் நாடு கெட்டுப் போனது என்று குற்றஞ்சாட்டப்படும். எனவே,இவ்விருவரையும் வெளியேற்றினால் தான் விமோச னம் என்ற கருத்து மேலோங்கும். இது அரச பக்கமாக இருக்க, தமிழ்ப் பகுதியில் என்ன நடக்கும்? தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு வலு பெளவியமாக இருக்கிறது. தீர்மானம் நிறைவேறாமல் போனால், நாங்கள் போகாமல் விட்டதனால்தான் தீர்மானம் நிறை வேறவில்லை.

எனவே அரசு எங்களுடன் பேசவேண்டும். அரசைக் காட்டிக் கொடுக்கும் செயலை நாங்கள் செய்யவில்லை என்று கூட் டமைப்பின் முக்கிய தலைகள் கூறிக் கொள்ளும். மாறாக தீர்மானம் நிறைவேறினால், கூட்ட மைப்பு செய்ய வேண்டிய தெல்லாம் செய்துவிட்டு அமைதியாக இருந்தது. எங்கள் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது என்று உரிமை கோரும். சில வேளைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நாங்கள் சந்தித்து எங்கள் பிரச்சினையை இடித்துரைத்தோம் என்று அவர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் எதனையும் அறிய விரும்பாதவர்களாக அல்லது அறிந்தவற்றை வெளியில் சொல்லப் பயந்தவர்களாக இருக் கின்றனர். கூட்டமைப்புக்கு இதுபோதும்.

அமெரிக்காவால் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் நிறைவேறினாலும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டு மாயின் அப்பளுக்கற்ற-தியாக உணர்வுள்ள -நேர்மையான அரசியல் தலைமை உடனடியாகத் தேவை.தங்களுக்கு வசதியும் வாய்ப்பும் கிடைக்கின்ற போது மட்டும் கருத்துக் கூறுகின்ற அரசியல் தலைமைகளும், பொதுமக்கள் சார்ந்த சமூக அமைப்புகளும் பதவிக்கும் புகழுக்கு மானவேயன்றி அவற்றால் பிரயோசனம் ஒரு போதும் கிடைக்கமாட்டாது.

எனவே ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறினாலும் -நிறைவேறாவிட்டாலும் முதலில் தமிழ் மக்கள் தமக்கான தூய அர சியல் தலைமை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனையில்லையாயின், அமெரிக்கா அல்ல; அந்த ஆண்டவன் நேரில் வந்தாலும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவே முடியாது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27762

இந்த மாதிரியான அறிக்கைகளை விடுவதைத் தவிர கூட்டமைப்புக்கு வேறு வழியில்லை! என்ன நடந்தது என்று சிந்திக்கத் தெரிந்த பல தமிழ் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்!

இந்தியக் காட்டுமிராண்டி காங்கிரஸ் அரசும் அமெரிக்காவின் உறுதியை கண்டு பயந்தது. முக்கியமாக தமிழகத் தமிழ் மக்களின் ஒருமித்த கருத்துக்கள் தமிழ் நாட்டு காங்கிரஸ் காட்டுமிராண்டிகளின் வாயைக் கூட மூடிவிட்டது. இம்முறை ஜெயலிதாவின் உறுதியின் முன்னர் மலையாள ஓநாய் ராஜதந்திரிகளின் ஏமாற்று வித்தைகள் இம்முறை எடுபடவில்லை.

ஆர். எஸ். எஸ். மூலம் இந்திய 'ரோ'ப் பயங்கரவாதிகள் சிங்களப் பயங்கரவாதிகளை திருப்தி செய்வதுடன், தமிழர் விரோத மனநிலையை தக்க வைக்க முயற்சித்தனர். தாய்மண்ணில் இயங்கும் ஆர். எஸ். எஸ். உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான செய்திகள் மூலம் மற்றும் யோகேஸ்வரன் முதலான பலரினால் அவர்களின் வேஷம் கிழிக்கப்பட, ஆர். எஸ். எஸ். உம் தமிழின விரோத நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஜெனீவா தீர்மான விடயத்தில் தமிழ் மக்கள் முதல் நன்றியை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சேனல் 4 க்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் தமிழக உறவுகள், குறிப்பாக வைகோ, நெடுமாறன், சீமான், ஈழத் தமிழரால் பெரிதும் அறியாத சில தமிழ் அமைப்புக்கள், ஜெயலலிதா, தமிழ் நாட்டு ஊடகங்கள் (இந்து குழுமம் தவிர்ந்த), அ. தி. மு. க., மற்றும் தி. மு. க. (கொலைஞர், அவர் குடும்பம் தவிர்ந்த) உறுப்பினர்கள் போன்றவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஈழத் தமிழர், ஈழத் தமிழருக்கு நன்றி தெரிவிப்பது அழகல்ல. எனினும் புலம்பெயர் தமிழரின் பாரிய நடவடிக்கைகள், நா. க. த. ஈ. அரசின் இறுதிநேர முயற்சிகள், பெரும்பாலான ஈழ - புலம் பெயர் தமிழர் அறியாத பல மனிதநேய அமைப்புக்களின் பொறுப்பான ஆவணத் தயாரிப்புகள் - அவர்களுக்கு உதவிய தமிழ் கல்விமான்கள், சில இணைய ஊடகங்கள் - மிக முக்கியமாக யாழ் களம், சற்றும் சளைக்காத அகூதா போன்றவர்களின் முயற்சியும் தமிழருக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் இந்த வெற்றி கிடைக்க ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அத்துடன் பல இன்னல்களுக்கு மத்தியில், பல இழப்புகளுக்கு மத்தியில், பல அழிவுகளைச் சந்தித்த போதும், பல உறவுகளை இழந்தபோதும், தாய் மண்ணை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று உழைக்கும், எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள போதும், விலை போகாது தாய்மண்ணில் வாழும் ஒவ்வொரு குடும்பம் இந்த வெற்றிப் பாதைக்கு வழி அமைத்தார்கள்.

இறுதியில், "களத்தில் / கண்முன் இன்று இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் எமது பிரச்சினைக்குரிய தீர்வை உறுதியாக பேசுவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியவர்கள், தன்னலம் பாராது, விலைபோகாமல், கொள்கை உறுதியுடன் போராடிய விடுதலை வீரர்களும், அந்தப் பயணத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களும் தான்" என்பதை யதார்த்த பூர்வமாக சிந்திக்கத் தெரிந்த அனைவரும் உணர்வர்.

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஒன்றிணைந்து, ஒரே இலச்சியத்துக்காக, உடன்பாட்டு மன நிலையுடன் செயல்படுவோம் எனில் இந்த ஜெனீவா வெற்றியை தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி, நியாயம் கிடைக்கும் ஒருநிலைக்கு மீண்டும் கொண்டுசெல்ல முடியும்.

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், ஒன்றிணைந்து, ஒரே இலச்சியத்துக்காக, உடன்பாட்டு மன நிலையுடன் செயல்படுவோம் எனில் இந்த ஜெனீவா வெற்றியை தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி, நியாயம் கிடைக்கும் ஒருநிலைக்கு மீண்டும் கொண்டுசெல்ல முடியும்.

கூட்டமைப்பினர் கடந்தகாலத் தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க வேண்டும்.

சிறந்த, இளமைத் துடிப்புள்ள, விவேகம் உடைய அடுத்த தலைமையை தெரிவு செய்யும் தேவையும் உண்டு. சுமந்திரன் போன்றவர்கள் முக்கிய பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள்.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு, தாயக தமிழர் பிரதிநிகள், இன்று ஒரு கடினமான ஆனால் சாதிக்கக்கூடிய ஒரு சிக்கலான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இங்கே இரவிராஜ் இல்லை பரராஜசிங்கம் போன்ற படுகொலைகளுக்கு கூட முகம் கொடுக்கவேண்டி வரலாம். ஏனெனில் சிங்கள பயங்கரவாதிகள் யாருமே இதுவரை தண்டிக்கப்படும் இல்லை தண்டனைகளை ஏற்கும் மனோ பக்குவவும் கொண்டவர்கள் இல்லை. கொலைகளை மறைக்க கொலைகளை செய்தே பழகியவர்கள்.

கூட்டமைப்பு, சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பது அவர்களின் சுயநிர்ணய இறைமையை பாதிக்காது என்ற கருத்தை கூறியவண்ணமே தமிழர்களின் சுயநிர்ணய இறைமையை உறுதிப்படுத்தும் சிக்கலான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதற்கு புலம்பெயர் தமிழர்கள் வெளி அழுத்தங்களை சர்வதேசம் ஊடாக கொடுப்பது மூலம் உதவ முடியும். ஜெனீவா தீர்மானம் போன்று வெற்றிகளை மிகக்குறைந்த கூட்டமைப்பின் பங்களிப்புடன் வென்றது நல்ல உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.