Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள் .. தொடர்பில் நீதி வழங்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அமைதி ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

womans%20day%20jaffna1_CI.JPG

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் இல்லம் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பு ஆகிய இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தன. இவ்வார்ப்பாட்டம் இன்று காலை 8.30 மணியளவில் நல்லூரில் இருந்து ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது.

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்து, யாழ்.அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தலைமையில், கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இதன்போது, பெண்கள் மீது வன்முறைகளிலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெண் அமைப்பினரால் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில்

1. வேலணை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்ப நலமாது 10.07.2010 அன்று மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார். இவரது வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் AR/54/10 நடைபெற்று வருகின்றது. மரணமடைந்த நபரின்; உடற்பாகங்கள் பகுப்பாய்விற்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை அதற்கான மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் குற்றவாளி தண்டிக்கப்படவில்லை. இவ்வாறாக சட்டங்களும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் பொறுப்பற்று செயற்படுவதனால் தர்சிகா போன்று மேலும் பல தர்சிகாக்கள் நீதி கிடைக்காது மரணத்தின் விளிப்பில் நிற்பவர்களும் மரணிப்பவர்களுமாக நிற்பதுதான் நியாயமா?

2. 2011 மாசி மாதம் கோப்பாய் பகுதியில் 8 வயது சிறுமி தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்ட தந்தை தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியோ சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பெற்றோர் இருந்தும் பெற்றோரின் அரவணைப்பை பெறவேண்டிய வயதில் பெறமுடியாத நிலமையில்!!!! இதில் குற்றவாளி குழந்தையா? அல்லது குற்றமிழைத்த தந்தையா? நியாயம்தான் எங்கே? நீதிதான் எங்கே?

3. 25.01.2012 அன்று சக்கோட்டை அல்வாயில் 17 வயது மாணவி; படுகொலை. இவரது வழக்கு விசாரணை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. குற்றவாளி கைதுசெய்யப்பட்டார் இம்மாணவியின் வழக்கு நிலை மந்தமாகவே உள்ளது.

4. 27.11.2011 அன்று தனங்கிளப்பில் காணாமல் போன யுவதி 29.01.2012 அன்று உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு. இதற்கான சரியான தீர்வு அதுவும் கேள்விக்குறியே?

5. 03.03.2012 அன்று நெடுந்தீவு 10 ம் வட்டாரத்தில் 13 வயது சிறுமி 31 வயது குடும்பஸ்தரினால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். குற்றவாளி கைதுசெய்யப்பட்டு இவ்வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் -B/36/12 நடைபெற்று வருகின்றது. இது சம்பந்தமான தடயங்களை பகுப்பாய்விற்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் துரிதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

6. 07.03.2012 அன்று கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 18 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து காணப்பட்டார். இவர் பல தடவைகள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மக்கள் கருதுகின்றார்கள். தற்போதுவரை குற்றவாளியாக கருதப்படும் கிறிஸ்தவ மதகுரு இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

7. 11.03.2012 அன்று வரணியில் 24 வயது பெண் இரு ஆண்களினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

8. உரும்பிராயில் உள்ள கருணை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமி மீது இல்லத்திற்கு பொறுப்பாளராகவும் கல்விக்கோட்ட அதிகாரியாகவும் இருந்து கொண்டு இச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். குற்றவாளியான இவர் தான் தப்பிப்பதற்காக பலவிதமான உத்திகளை கையாண்டு பலதரப்பட்ட பொறுப்பு வாய்ந்தவர்கள் ஊடாக குற்றத்தைத் திரிபுபடுத்தி சமூகப்பார்வையைத் திருப்புவதுடன் சட்டத்தின் பிடியிலிருந்து சுற்றவாளியாக வெளிக்கொணர்வதற்கு சட்டவல்லுனர்கள் முயல்வது நியாயம் தானா? நீதி எங்கே???? தர்மம் எங்கே????

மேலும் சில:-

9. 06.02.2011 அன்று வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் பளைப்பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

10. 13.02.2011 அன்று கொடிகாமம் பகுதியில் 15 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. 49 வயது குடும்பஸ்தரும், 19 வயது இளைஞனுமே இதற்குக் காரணம்.

11. புங்குடுதீவு முனைப்புலம் பகுதியில்

இதேவேளை ஜெனிவாவினில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று முன் வைக்கப்பட்ட நேரம் அரசியல் பின்னணியினில் நடத்தப்பட்ட இப்போராட்டம் தமிழ் மக்களது மனங்களை திசை திருப்பவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கா கல்வி அமைச்சின் கூலிகள் மாணவரை அடித்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.