Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாவிடின் சர்வதேச விசாரணை, தடைகள் வரலாம்: ஐ.தே.க.

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாவிடின் சர்வதேச விசாரணை, தடைகள் வரலாம்: ஐ.தே.க.

தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடனடியாக அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக தடைகளும் சர்வதேச விசாரணையும் கொண்டுவரப்படலாம் என அரசாங்கத்திடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

'நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்காதுவிடின் நாட்டில் பெரும் அரசியல், பொருளாதார சிக்கல்கள் தோன்றும். சர்வதேச விசாரணை ஒன்று எம்மீது திணிக்கப்பட முன், நாம் இவ்வருடமே எமது விசாரணையை செய்யவேண்டும். நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைக்கு கொண்டுவராது விடுவோமாயின் எமது நாடு சர்வதேச சமுதாயத்தின் முன் தன்னைத்தானே மெதுவாக அழித்துக்கொள்ளும்' என லக்ஷ்மன் கிரியெல்ல இன்று கூறினார்.

'இதுவரை இந்த அரசாங்கம் அடக்குமுறை மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி சில விடயங்களை சாதித்துக்கொண்டது. ஆனால் இம்முறை அரசாங்கம் தோல்வி கண்டதுடன், சோமாலியாவின் நிலைமைக்கு தாழ்ந்துவிட்டது' என அவர் கூறினார்.

'இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வாக்கு, இந்த நாடு ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக இழந்து வந்ததன் விளைவாகும். இந்தியாவுடனான இலங்கையின் உறவு பலமானதாக இருக்க வேண்டும் என்னும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்த பிரச்சினைவரை இலங்கைக்கு சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் ஆதரவு கிடைத்து வந்தது' என அவர் கூறினார்.

'இலங்கைக்கு எதிராக 2009இல் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இலங்கை வெற்றி கண்டது. ஆனால் அதை மீண்டும் செய்ய முடியவில்லை. சர்வதேச அளவில் முக்கிய சக்திகளை வென்றெடுக்க இலங்கை தவறிவிட்டதே இதற்கான காரணமாகும்.

துணைப்படைகளின் ஆயுதங்களை களைதல், தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுதல், 17ஆவது திருத்தத்தை அமுலாக்குதல் என்பன தொடர்பில் சர்வதேச சமுதாயத்துக்கு வழங்கிய பல உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதால் அரசாங்கமே இதற்கு பொறுப்பானதாகும்' என அவர் கூறினார்.

'சர்வதேச சமுதாயத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படாதுவிடின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகள் செயற்படுத்தப்படமாட்டாது' என அவர் கூறினார்.

'அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் வெள்ளைவான் கலாசாரத்தை ஊக்குவித்தனர். இவர்களுக்கு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பற்றி அக்கறை இருக்கவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைக்குவரின் அரசியல் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் தடுக்கப்படமுடியும். அத்துடன் பொலிஸ், நீதிமன்ற முறைமை, ஆணைக்குழுக்கள், மற்றும் வேறு நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்குவதும் உறுதி செய்யப்பட முடியும்' என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38191-2012-03-24-05-33-37.html

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை, தடைகள் வரலாம்

அந்தமாதிரியான ஒரு சந்தர்ப்பம் வந்து சிறிலங்காவை நெருக்குவாரத்துக்குள் வைத்துதான் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு வருமாயின் அதையும் எதிர்பார்த்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.