Jump to content

பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் ~ அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு


Recommended Posts

பதியப்பட்டது

6th June 2013

 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

தற்போதைய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலான் (Tom Donilon) அடுத்த மாதம் ஓய்வு பெற்றவுடன் சூசன் ரைஸ் அந்த பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சூசன் ரைஸ், தற்போது அமெரிக்காவுக்கான ஐநா தூதராக செயல்படுகிறார்.

 

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்கும் போது சூசன் ரைசை அமைச்சராக்க முயன்ற ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எதிர்ப்பால் பின்வாங்கினார்.

 

இதையடுத்து, தற்போது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அதிபர் ஒபாமாவால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு, செனட் சபையின் ஒப்புதல் தேவையில்லை என்பதால் சூசன் ரைஸ் பொறுப்பேற்பதில் சிக்கல் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.newsalai.com/details/american-president-obama-announced-about-the-appointment-of-susan-rice-as-the-securuty-advisor.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை   எடுத்து கொடுக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன்  .........ஏன் அதிகம்  அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட.  இடைத்தரகர்கள்.  வேண்டும்  .....இன்று   ஒரு  உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும்  அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது   வாழ்த்துக்கள் அர்ச்சுனா   🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டுகள்.  வாழ வேண்டும்    பைத்தியம் என்றார்கள்    சபை நாகரிகம் தெரியாது என்றார்கள்  விளம்பர பிரியனன்.  என்றார்கள் ..... .....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும்  மக்களுக்குக்காக. உழைக்கிறார்.  வாழ்த்துக்கள் 🙏 டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,..  மாவை சேனாதிராசா.  விக்கினேஸ்வரன்   சாணக்கியன்   செல்வம் அடைக்கலநாதன்  சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை???? தெரியாத??   அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா  ???  சத்தியமூர்த்தியை  சந்திக்க   முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும்  ......அவரை கேள்விகள் கேட்க முடியாது    இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை  சந்திக்கிறார்    தனியாக இல்லை  பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன்.  அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள்  சத்தியமூர்த்தி    மக்கள் பணி புரிபவர்.  அவரை  மக்கள் எப்பவும் சந்திக்கலாம்   மக்கள் தான்  ஊதியம் கொடுக்கிறார்கள்  எப்போது சத்தியமூர்த்தி    வீட்டை போகிறீர்கள்?????.  [🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣
    • ஒரு வைத்திய சாலையில் ,எந்தவொரு (மருத்துவ, உயிரியல்) தொழில் தகமை இல்லாமல் எப்படி இவர்கள் உளங்கப்பட்டார்கள்? வேலையில்-பயிற்சி-கொடுப்பது என்பதாவது கட்டமைக்கப்பட்டு (structured training) செய்யப்பட்டதா? அனால், ஒரு மருத்துவரான அருச்சுனா, இவர்கள் எந்தவொரு தகமையும் அடையாது தொடரவேண்டும் என்பதே நோக்கமாக தெரிகிறது . இவர்கள் செய்யும் பணிகள் எவை என்றாவது பகிரங்கமாக பிரசுரிக்கப்பட்டு உள்ளதா? அரசியலுக்கு அருச்சுனா காலடி எடுத்து வைக்கிறார. சிங்களம் வேறு எங்காவது இப்படி செய்கிறதோ - தகமை இல்லது தொண்டர் ஊழியர்.   இப்படி சேர்ந்தவர்கள் தான் தாதியாகி, அண்மையில் உடனடியாக கவனிக்காது  நடைபெற்ற இறப்புகளாக இருக்குமோ ?
    • அப்பிடி எல்லாம் சொல்லாதீர்கள் ஈழப்பிரியன். 68 எல்லாம் ஒரு வயதா?  இன்னும் நிறைய பார்க்க இருக்கு.  மனதை உற்சாகமாக வைத்திருங்கள். ❤️
    • சிரிப்புக் குறி போட்டு எழுதுற கருத்துக்கும்... சீரியசாக பதில் எழுதுற ஆள் நீங்கள் ஒருவர்தான் கபிதன். 😂 வருசம்  முடியுற நேரம்... கூல் டவுன் புரோ...  🤣
    • இதே Formula,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம்  சுமந்திரனுக்கும்  பொருந்தி வர வேண்டும் என்பதே  எனது நத்தார்  கால  பிரார்த்தனை. 😂 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.